Header Logo

வணிகம்
செலிங்கோ லைஃப் நிறுவனம் தனது தொடர் சாதனை வெற்றியாளர்களை வருடாந்த விருது விழா 2026-இல் கௌரவித்தது

Apr 23, 2026 - 01:20 PM -

0

செலிங்கோ லைஃப் நிறுவனம் தனது தொடர் சாதனை வெற்றியாளர்களை வருடாந்த விருது விழா 2026-இல் கௌரவித்தது

தொடர்ச்சியாக 22 ஆண்டுகளாக இலங்கையின் ஆயுள் காப்புறுதி சந்தையில் முன்னணியில் திகழும் செலிங்கோ லைஃப் நிறுவனமானது முன்னேற்றத்தின் ஆற்றலை முன்னிறுத்தி தனது வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு 2026-ஐ கொழும்பு சினமன்லைஃப்பில் கொண்டாடியது. நிறுவனத்தின் சிறந்த சாதனையாளர்களில் 300-க்கும் மேற்பட்டவர்களை ஒன்றுகூட்டிய இந்த நிகழ்வில் மிகவும் திறமையான நிலையை அடைந்த விற்பனை அதிகாரிகள், பெருமைக்குரிய மில்லியன் டொலர் வட்ட மேசைக்கு (MDRT) தகுதி பெற்றவர்கள், அல்லது 2025ஆம் ஆண்டில் 'சிறந்த விற்பனையாளர்' நிலையை பெற்றவர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இவர்கள் ஒவ்வொருவரும் கடுமையான செயல்திறன் அளவுகோல்களை பூர்த்தி செய்திருந்தனர். இந்நிகழ்வில் சுமார் 370 விருதுகள் வழங்கப்பட்டன. இதில், நிறுவனத்தின் பணிப்பாளர் குழுவினர், சிரேஷ்ட முகாமைத்துவத்தினர் உட்பட 450-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

தொடர் சாதனை வெற்றியாளர்கள் (Unstoppable Champions) என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விருது விழா, செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் விற்பனைப் படையை வரையறுக்கும் பொறுமை, இலட்சியம் மற்றும் தொடர்ச்சியான சிறப்புத் திறன் ஆகிய அம்சங்களை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. இதன் மூலம், விருது பெற்றவர்கள் நிறுவனத்தின் நீடித்த சந்தை முன்னணித் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பவர்களாக தம்மை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில் Munich Re நிறுவனத்தின் Life and Health (தெற்காசியா மற்றும் தென் கிழக்காசியா) முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. ஸ்ரீநிவாச ராவ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், இந்த நிகழ்வு சங்கா டினேத், ஷஷிகா நிசன்சலா, நாட்ரோ பாண்ட் மற்றும் பிரசாந்தினி ஆகியோரின் சிறப்பான கலை நிகழ்ச்சிகளால் மிளிர்ந்தது. Muddrika Dance Studio வழங்கிய நடன நிகழ்ச்சிகளும் இதனை மேலும் சிறப்பித்தன. 

அந்த மாலைப்பொழுதின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, மிகவும் திறமையான நிலையை அடைந்த விற்பனை அதிகாரிகள், மற்றும் மில்லியன் டொலர் வட்ட மேசைக்கு (MDRT) தகுதி பெற்ற உறுப்பினர்களாக தொடர்ந்து தகுதி பெற்றதற்கான அவர்களின் சிறந்த செயல்திறனைப் பாராட்டி திரு. ஆர். பி எதிரிசிங்க மற்றும் திரு. எஸ். எஸ். எச். எம். டி லக்சிறி ஆகியோருக்கு இரண்டு Toyota Axio மோட்டார் கார்கள் வழங்கப்பட்டன. விழாவின் முக்கியமான விருதுகள் பின்வருமாறு வழங்கப்பட்டன சிறந்த முகவர் நிலைய தலைவராக திரு. ஏ.எஸ்.எல். பெர்னாண்டோ, சிறந்த முகவர் நிலைய மேற்பார்வையாளராக திரு. எச். டீ பத்திரன சிறந்த ஆயுள் காப்புறுதி ஆலோசகராக திரு. ஏ. ஐ. பி மஞ்சுள சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளராக திருமதி. ஜே. மீரா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். 

இந்த கொண்டாட்டம் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் மேலும் ஒரு சிறப்பான செயல்திறன் ஆண்டை பிரதிபலித்தது. 2025 ஆம் ஆண்டை நிறுவனம் ரூ. 44.2 பில்லியன் மொத்த காப்புறுதி வருமானத்துடன் (gross written premium income) நிறைவு செய்தது. மேலும், திரண்ட மொத்த வருமானம் ரூ. 72.43 பில்லியனாக பதிவு செய்யப்பட்டது.அந்த ஆண்டில், காப்புறுதியாளர்களுக்கு ரூ. 31 பில்லியன் அளவிலான நிகரக் கோரிக்கைகள் மற்றும் நலன்கள் வழங்கப்பட்டன. இதேவேளை, ஆயுள் நிதி ரூ. 201.8 பில்லியனாக உயர்ந்தது. 2025 டிசம்பர் 31 ஆம் திகதியளவில், மொத்த சொத்துகள் ரூ. 287 பில்லியனாகவும் முதலீட்டு தொகுப்பு ரூ. 253.4 பில்லியனாகவும் விரிவடைந்தன. 

செலிங்கோ லைஃப் நிறுவனம், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக சந்தை முன்னணியில் இருந்து வருகிறது. காப்புறுதி பெற்றவர்களின் இலக்குகள் மற்றும் கனவுகளை பாதுகாக்கவும், அபாயங்களை குறைக்கவும் உதவும் புத்தாக்கமான காப்புறுதித் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டில், Brand Finance அமைப்பின் மதிப்பீட்டின்படி, செலிங்கோ லைஃப் நிறுவனம் இலங்கையின் மிக உயர்ந்த மதிப்புள்ள காப்புறுதி வர்த்தகநாமமாகவும், 22-வது மிக பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கையின் ஆண்டுக்கான வர்த்தகநாமம் என்ற விருதினை பெற்றுள்ள இந்த நிறுவனம், இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) மற்றும் முகாமைத்துவ கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனம் (CIMA) ஆகிய அமைப்புகளால் இலங்கையின் மிகவும் பாராட்டப்பட்ட 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title