Header Logo

வணிகம்
DFCC வங்கியின் முன்னோடி நீலப் பிணைமுறி பல்வேறு சர்வதேச பங்குச்சந்தைகளில் இடம்பெற்று உலகளாவிய அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது

Apr 23, 2026 - 01:40 PM -

0

DFCC வங்கியின் முன்னோடி நீலப் பிணைமுறி பல்வேறு சர்வதேச  பங்குச்சந்தைகளில் இடம்பெற்று உலகளாவிய அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது

தனது முன்னோடி நீலப் பிணைமுறியை பல்வேறு சர்வதேச பங்குச்சந்தைகளிலும் இடம்பெறச் செய்துள்ள DFCC வங்கி பிஎல்சி ஆனது இலங்கையின் நிலைபேற்றியல் சார்ந்த நிதிப் பயணத்தில் மற்றுமொரு முக்கியமான சாதனை மைற்கல்லினை நிலைநாட்டியுள்ளது. அந்த வகையில், லக்சம்பேர்க் பங்குச் சந்தையின் (Luxembourg Stock Exchange - LuxSE) லக்சம்பேர்க் பசுமை பங்குச்சந்தையிலும் (Luxembourg Green Exchange - LGX) மற்றும் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள GIFT City ன் இந்திய சர்வதேச பங்குச்சந்தையிலும் (India International Exchange - India INX) அது இடம்பெற்றுள்ளது. 

அண்மையில் இவ்வாறு இடம்பெற்றுள்ளதன் மூலமாக, DFCC வங்கியின் நீலப் பிணைமுறியானது இலங்கையின் நிலைபேற்றியல் சார்ந்த நிதி முயற்சிகளை உலகில் மிகவும் அங்கீகாரம் பெற்ற பல்வேறு மூலதனச் சந்தைத் தளங்களுடன் நேரடியாக இணைத்துள்ளது. அதன் மூலமாக, நாட்டில் வளர்ச்சி கண்டு வருகின்ற நீலப் பொருளாதாரம் மற்றும் நிலைபேற்றியல் சார்ந்த முதலீட்டுத் துறை மீது சர்வதேசத்தின் கவனத்தை இது கணிசமான அளவில் ஈர்த்துள்ளது. 

2025 ல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதன்முதல் நீலப் பிணைமுறி வழங்கலை அத்திவாரமாகக் கொண்டு தற்போதைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இது கொழும்பு பங்குச்சந்தையில் (Colombo Stock Exchange - CSE) இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து இந்தியாவின் GIFT City ல் National Stock Exchange International Exchange (NSEIX) இலும் இடம்பெற்றது. இலங்கையிலிருந்து இத்தளத்தில் இடம்பெற்ற முதலாவது நீலப் பிணைமுறியாக இது மாறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. லக்சம்பேர்க் பங்குச்சந்தையில் இடம்பெற்றமை மிக முக்கியமான சர்வதேச சாதனை மைற்கல்லாக மாறியது. இலங்கையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீலப் பிணைமுறி ஒன்று முதல் முறையாக LuxSE ல் உள்வாங்கப்பட்டு, நிலைபேற்றியல் சார்ந்த பிணையங்களுக்கு பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ள உலகின் மிகவும் முன்னணி தளங்களுள் ஒன்றாகத் திகழும் LGX ல் இடம்பெற்ற நிகழ்வாக இது அமைந்தது. 

DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி திமால் பெரேரா அவர்கள் இச்சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில், “உலகளாவிய முன்னணி பங்குச்சந்தைகள் மத்தியில் சம்பாதித்துள்ள இந்த அங்கீகாரமானது இந்த முதலீட்டுக் கருவியின் பலத்தையும், இலங்கையில் வளர்ந்து வருகின்ற நிலைபேற்றியல் சார்ந்த நிதிக் கட்டமைப்பின் மீதான நம்பகத்தன்மையையும் பிரதிபலிக்கின்றது. இச்சர்வதேச இடம்பெறல்கள் நிலைபேற்றியல் மற்றும் ESG இணக்கப்பாடு ஆகியவற்றில் இலங்கையை சர்வதேச வரைபடத்தில் வலுவாக இடம்பெறச் செய்துள்ளன. அத்துடன், வெளிப்படையான, பொறுப்புமிக்க, மற்றும் நற்பயனை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற நிதி வழங்கலில் எமது நாடு அர்ப்பணிப்புடன் உள்ளது என்ற செய்தியையும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வலுவாக வெளிப்படுத்துகின்றன. நிதியியல் ஒழுக்கம் மற்றும் அளவிடத்தக்க சூழல் மீதான நற்பயன் ஆகியவற்றை ஒன்றிணைக்கின்ற நம்பிக்கையான வாய்ப்புக்களை நாடும் போக்கு சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது. எனவே, அத்தகைய பரந்த முதலீட்டாளர்கள் மத்தியில் இதற்கான அணுகலை விரிவுபடுத்தி, சர்வதேச நிலைபேற்றியல் சார்ந்த நிதித் துறையில் இலங்கையின் ஸ்தானத்தை இச்சாதனை மைற்கல் மேலும் வலுப்படுத்தும்.” 

DFCC வங்கியின் நீலப் பிணைமுறியானது இதுவரையான தனது பயணத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பல்வேறு ‘முதன்முதல்’ சாதனைகளை நிலைநாட்டியுள்ளது. இலங்கையில் பங்குச்சந்தையில் இடம்பெற்ற முதலாவது நீலப் பிணைமுறி, தெற்காசியாவில் வழங்கப்பட்ட நிறுவனரீதியான முதலாவது நீலப் பிணைமுறி, இந்தியாவில் International Financial Services Centres Authority (IFSCA) கட்டமைப்பின் கீழ் NSEIX ல் உள்வாங்கப்பட்ட முதலாவது நீலப் பிணைமுறி ஆகியன மிகவும் குறிப்பிடத்தக்கவை. மேலும், கொழும்பு பங்குச்சந்தை மற்றும் GIFT City ல் NSEIX ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையைத் தொடர்ந்து NSEIX ல் இடம்பெற்ற முதலாவது பிணைமுறி என்ற பெருமையையும் சம்பாதித்து, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான நிதிச் சந்தை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. 

நீர் வளங்களைப் பாதுகாத்தல், கடல்சார் சூழல் கட்டமைப்பைப் பாதுகாத்தல், மற்றும் சமுத்திர அடிப்படையிலான நிலைபேற்றியல் சார்ந்த பொருளாதாரச் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தல் சார்ந்த செயற்திட்டங்களுக்கு குறிப்பாக நிதியைத் திரட்டுவதற்கு உதவும் வகையில் நீலப் பிணைமுறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நிலைபேற்றியல் கொண்ட நீர் முகாமைத்துவம், கழிவுநீர் மற்றும் துப்புரவாக்கல் உட்கட்டமைப்பு, சூழல் மாசடைதலைத் தடுத்தல், கரையோர மற்றும் சமுத்திர சூழல் கட்டமைப்பின் பாதுகாப்பு, மற்றும் இலங்கையின் நீலப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொருளாதார நடவடிக்கைகள் போன்ற முயற்சிகளுக்கு இந்த முதலீட்டுக் கருவியினூடாக DFCC வங்கி நிதி வசதிகளை ஏற்படுத்தி வருகின்றது. சர்வதேச சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு கண்டு, பொறுப்புமிக்க பொருளாதார வளர்ச்சிக்கு இடமளிப்பதில் நிலைபேற்றியல் கொண்ட மூலதனச் சந்தைக் கருவிகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருவதை DFCC வங்கியின் நீலப் பிணைமுறி பெற்றுள்ள சர்வதேச அங்கீகாரம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

சுற்றுச்சூழல் மற்றும் நற்பயனை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற நிதி வசதி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் ஆர்வம் வேகமாக அதிகரித்துச் செல்லும் நிலையில், இலங்கையிலிருந்து தோன்றிய நிலைபேற்றியல் சார்ந்த மூலதனச் சந்தையின் புத்தாக்கத்திற்கு மிகவும் வெளிப்படையான தர ஒப்பீட்டு நியமமாக DFCC வங்கியின் நீலப் பிணைமுறி காணப்படுகின்றது. 

DFCC வங்கி குறித்த விபரங்கள் 

1955 ம் ஆண்டில் நிறுவப்பட்ட DFCC வங்கி பிஎல்சி, 1956 முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் இயங்குவதுடன், Fitch Ratings இடமிருந்து A (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ள இவ்வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வாணிபக் கடன் தீர்வுகளுடன் சேர்த்து, தனிநபர், வர்த்தக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான விரிவான வங்கிச்சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகின்றது. 

வாடிக்கையாளர்களை மையப்படுத்தியும் மற்றும் நிலைபேணத்தக்க புத்தாக்கத்தை அடிப்படையாகவும் கொண்டு, DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 133 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பிலுள்ள 6,000 க்கும் மேற்பட்ட ATM மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, இடைவிடாத மற்றும் பாதுகாப்பான வங்கிச்சேவை அனுபவத்தை DFCC வங்கி வழங்கி வருகின்றது. 

நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளுக்கான கடன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் ஆகியவற்றுக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்து, இவை தொடர்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வரும் DFCC வங்கி, சூழல் மீதான தாக்கங்களைக் குறைத்து, நீண்ட கால அடிப்படையில் பொருளாதார நெகிழ்திறனை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

title