Header Logo
Mogo Academy

வணிகம்
SLT-MOBITEL மற்றும் Battle of the Maroons ‘Play for the Planet’ இணைந்து ஆனவிழுந்தாவ கண்டல்தாவர சூழல்கட்டமைப்பை மறுசீரமைப்பு

Apr 23, 2026 - 03:50 PM -

0

SLT-MOBITEL மற்றும் Battle of the Maroons ‘Play for the Planet’ இணைந்து ஆனவிழுந்தாவ கண்டல்தாவர சூழல்கட்டமைப்பை மறுசீரமைப்பு
Mobitel inner

இலங்கையின் நம்பிக்கையை வென்ற ஈரநிலங்களில் ஒன்றான ஆனவிழுந்தாவ ஈரநில சரணாலயத்தின் கண்டல்தாவர கட்டமைப்பை மறுசீரமைக்கும் பணிகளை SLT-MOBITEL தனது சூழல், சுற்றாடல் மற்றும் ஆளுகை (ESG) செயற்பாட்டினூடாக 2026 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்திருந்தது. 

கொழும்பு ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரிகளுக்கிடையிலான 95 ஆவது வருடாந்த கிரிக்கெட் போட்டியான Battle of the Maroons இன் முன்னெடுப்புடன் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ‘Play for the Planet’ எனும் தொனிப்பொருளுக்கமைய, விளையாட்டுக் களம் என்பதற்கு அப்பால் சென்று, சமூக நலன்பேணலுக்கான அழைப்பாக இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. விளையாட்டுப் போட்டியின் போது மேற்கொள்ளப்பட்ட இந்த அறிமுகம், எதிர்கால தலைமுறையினருக்காக புவியை பாதுகாக்கும் நோக்கத்தின் ஆழமான வெளிப்பாடாக அமைந்திருந்தது. 

கண்டல்தாவரங்கள் இயற்கையின் வியக்கத்தக்க சூழற்தொகுதிகளில் ஒன்று என்பது பலருக்கு தெரியாத ஒரு உண்மையாகும். மனித உடலின் நரம்புகளைப் போல் மண்ணிற்குள் ஆழமாகப் பாயும் அவற்றின் வேர்கள், கடற்கரைகளைப் பிணைப்பதுடன், கடல் கொந்தளிப்பு மற்றும் ஆழிப்பேரலைகளிலிருந்து மனித சமூகங்களுக்கு அரணாக விளங்குகின்றன. அத்துடன், அவை எண்ணற்ற உயிரினங்களின் பல்லுயிர்த்தன்மைக்கும் வாழ்வாதாரமாக அமைகின்றன. நீர்மட்டத்திற்குக் கீழே மண்ணுடனும் படிவுகளுடனும் பின்னிப்பிணைந்துள்ள இவ்வேர்த் தொகுதிகள், நூற்றாண்டுகளாகக் காபனைச் சேமித்து வைப்பதன் மூலம், காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடும் பூமியின் மிக வலிமையான ஆயுதங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன. 

இருப்பினும், விரிவடைந்து வரும் நகரமயமாக்கல் மற்றும் சூழல் சீரழிவு போன்ற அழுத்தங்களினால், அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இயற்கை வாழ்விடங்களில் கண்டல் தாவரங்களும் முதன்மையானவை. இந்தச் சூழற்தொகுதிகள் அழிக்கப்படும்போது, அவற்றில் சேமிக்கப்பட்டுள்ள காபன் மீண்டும் வளிமண்டலத்திற்குள் வெளியேற்றப்படுகின்றது. இது காலநிலை மாற்றத்தைத் தீவிரப்படுத்துவதுடன், காபனைச் சேகரித்து நிலைநிறுத்துவதற்காகப் பல தலைமுறைகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் வீணடிக்கின்றது. 

ஆனவிழுந்தாவ கண்டல்தாவர கட்டமைப்பு மறுசீரமைப்பு செயற்திட்டம் SLT-MOBITEL இன் பிரதான சூழல், சுற்றாடல் மற்றும் ஆளுகை (ESG) செயற்பாடாக அமைந்துள்ளதுடன், காபன் அகத்துறிஞ்சும் சூழல்கட்டமைப்புகளை பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஒரு நேரடி நடவடிக்கையாக அமைவதுடன், சீரழிந்த நிலங்களுக்குப் புத்துயிர் அளிப்பதாகவும் அமைகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, காலநிலை சவால்களுக்கு எதிரான இலங்கையின் மீண்டெழும் திறனை இது மேலும் வலுப்படுத்துகின்றது. 

இந்தத் திட்டத்தினூடாக, சூழல் வழிகாட்டல், சமூக வலுவூட்டல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றில் தனது அர்ப்பணிப்பை SLT-MOBITEL மீள உறுதி செய்துள்ளது. உள்ளூர் சூழற்தொகுதிகளைப் புனரமைத்தல், காலநிலை மாற்றத்திற்கு எதிரான மீளெழும் திறனை மேம்படுத்தல் மற்றும் இலங்கையின் இயற்கை மரபுரிமைகள் மீதான சமூகப் பொறுப்புணர்வை வளர்த்தெடுத்தல் ஆகியவற்றை இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் ஏனைய நிறுவனங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைவதுடன், எதிர்காலத்தில் மேலும் பல கூட்டு முயற்சிகளுக்கு உந்துசக்தியாக அமையும் என நிறுவனம் எதிர்பார்க்கின்றது. 

வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம், கண்டி வாடிக்கையாளர் கழகம் மற்றும் Million Laugh Entertainment Pvt Ltd ஆகியவற்றுடன் கைகோர்த்து 400 கண்டல் தாவரங்கள் இந்த சரணாலயத்தில் பயிரிடப்பட்டதுடன், இதனை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நிர்வகிக்கிறது. ஆனந்த, நாலந்த கல்லூரி மற்றும் வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கண்டல் தாவர பயிரிடல் செயற்பாடுகளில் பங்கேற்றதுடன், பொதுவான, பகிரப்பட்ட நோக்குடன் வழிநடத்தப்பட்டிருந்தனர். 

இந்த மீள்நடுகைத் திட்டமானது, களத்திலேயே நேரடியாகக் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கல்விக்கூடமாக அமைந்தது. நீலக் காபன் சூழற்தொகுதிகள் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதில் எவ்வாறு மிகச்சிறந்த பங்காளிகளாகச் செயற்படுகின்றன என்பதையும், கண்டல் தாவரங்களின் மீள் உருவாக்கம் மற்றும் கடற்கரைப் பாதுகாப்பு ஆகியவற்றில் சமூகங்கள் வகிக்கும் முக்கிய பங்கினையும் பங்கேற்பாளர்கள் இதன் மூலம் அறிந்துகொண்டனர். அத்துடன், நிலைபேறான தன்மை என்பது ஒரு குறிப்பிட்ட துறைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல, மாறாக எதிர்கால சந்ததியினருக்காகப் பூமியைப் பாதுகாப்பது என்பது அனைவரதும் கூட்டுப் பொறுப்பு என்பதையும் இது நினைவுபடுத்தியது.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara