Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (24.4.2026)!

Apr 24, 2026 - 09:12 AM

இன்றைய ராசிப்பலன் (24.4.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (24) கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று மரண யோகம் உள்ள தினம். இன்று மேஷத்தில் சூரியன் - புதன் சேர்க்கையால் புதாதித்ய யோகமும், ரிஷபத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றும் சஞ்சரிக்கிறார். இன்று தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று வளர்பிறை அஷ்டமி. 

மேஷம் ராசி பலன் 

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று, சந்திரன் சுகஸ்தானத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பாக்கியமானதாக இருக்கும். இன்று ஒரு முக்கியமான ஒப்பந்தங்கள் இறுதிசட வாய்ப்பு உண்டு. அரசாங்கத்திடமிருந்து சிறப்பான கௌரவம் பெறுவீர்கள். பொருள் சார்ந்த முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். சந்திரன் சிம்ம ராசியில் நுழையும்போது மங்களகரமான நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உண்டு. அல்லது அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இன்று சமூகத்தில் உங்களுடைய நற்பெயர் உயரும். தொடர்ச்சியான கடின உழைப்பு நேர்மாறையான பலனை தரக்கூடியதாக இருக்கும். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று, நீங்கள் நினைத்த திட்டங்களை முடிப்பதில் உங்களுடைய கவனம் வைக்க வேண்டிய நாள். புனித ஸ்தலத்திற்கு செல்லும் திட்டமிடுவீர்கள். இன்று இடம் மாற்றம் மற்றும் சட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நாளின் பிற்பகுதியில் சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதை துணிச்சலுடன் எதிர் கொண்டு வெற்றியடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான மற்றும் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேற தாமதம் ஏற்படும். பணியிட சூழல் சாதகமாக இருக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

மிதுனம் ராசி பலன் 

மிதுனம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஆக்கபூர்வமான நாளாக இருக்கும். படைப்பு சார்ந்த அல்லது கலை துறையில் இருப்பவர்கள் வேலை முடிக்க சிரமப்படுவார்கள். இன்று உங்களுக்கு விருப்பமான சில பணிகளை செய்யும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும் நாள். புதிய திட்டங்கள் மனதில் தோன்றும். இன்று உங்களுடைய மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொடர்ச்சியான கடின உழைப்பு நேர்மையான பலனை பெற்றுத் தரும். குருவின் அமைப்பு சிக்கலான பிரச்சனைகளை தீர்க்க உதவும். 

கடகம் ராசி பலன் 

கடகம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான ஒரு நாள். இன்று நீங்கள் எத்தகைய பணியை அர்ப்பணிப்புடன் செய்தாலும், அதற்கான உடனடிப் பலன்களைப் பெறக்கூடும். முடிக்கப்படாத பணிகள் நிறைவுபெறும்; முக்கியமான கலந்தாய்வுகளும் நடைபெறும். அலுவலகச் சூழல் உங்கள் கருத்துக்களுக்குச் சாதகமாக இருக்கும்; உங்கள் சக ஊழியர்களும் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். மாலையில் ஏதேனும் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கலாம். இன்று உங்கள் தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் எண்ணங்களில் தெளிவாக இருக்க வேண்டிய நாள். 

சிம்மம் ராசி பலன் 

சிம்மம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்குப் பணிச்சுமை மிகுந்த நாளாக அமைந்தாலும், அதை சமாளித்து முன்னேற உங்களுடைய பொறுமை மற்றும் ஆன்மீக சிந்தனை உதவும். உயர் கள் அதிகாரிகள் உங்களுடைய தடைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. இன்று சுப நிகழ்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் நிதி விஷயங்களில் முக்கியமானதாகவும், கவனத்துடன் இருக்க வேண்டிய நாள். இன்று உங்கள் வரவு மற்றும் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருக்கவும். உங்களுடைய இனிய பேச்சு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பிறரிடம் பழகும் போது நிதானமாகவும் உங்கள் பேச்சில் எச்சரிக்கையை கடைபிடிப்பது அவசியம். இன்று உங்களை வெற்றி உள்ளவர்களுடன் தேவையற்ற மோதல்கள், வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சு வார்த்தை குடும்பத்தில் நடக்கும். இன்று உங்கள் செயல்பாடுகளில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடவும். மாலை நேரத்தில் சூழல் மேம்படும். உங்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரக்கூடிய நாள். பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும், முதலீடு தொடர்பாக உங்கள் எண்ணங்களை தெளிவாக வைத்திருக்க வேண்டிய நாள். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல பலன்கள் தரக்கூடிய நாள். அலுவலகத்தில் பணி சார்ந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. ஒரு புதிய திட்டத்தின் கீழ் பணிகளை தொடங்கலாம். சொத்து சம்பந்தமாக உங்கள் குடும்பத்தினரோ அல்லது உங்களை சுற்றி உள்ளவர்கள் சில சிக்கலை உருவாக்க முயற்சி செய்வார்கள். இன்று தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி நீண்ட த்திற்கு பயன்படுத்தக்கூடிய நிதி திட்டங்களில் ஈடுபடுவது நல்லது. 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய நிதி நிலைமை வலுவாக அமையும் நாள். உங்களுக்கு லாபம் தரக்கூடிய வாய்ப்புகள் காத்திருக்கும். விழிப்புணர்வுடன், சுறுசுறுப்பாக செயல்படுவது அவசியம். உங்கள் குடும்பத்தில் அமைதியும், நிதி விஷயங்களில் ஸ்திரத்தன்மையையும் முழுமையாக அனுபவியுங்கள். உங்களுடைய பணி அல்லது தொழிலில் மேற்கொள்ளும் புதுமையான முயற்சிகள் எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய அளவில் நன்மைகளை ஈட்டி தரும். பணி சார்ந்த தங்கள் வேலையை புத்துயிர் பெற செய்யும். உங்களின் திட்டமிடாத செயல்பாட்டால் பணி சூழல் சற்று சவாலாக அமையும். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய நாளாகும். தொழிலில் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சி மற்றும் சிறிய மாற்றங்கள் கூட பெரிய லாபத்தை நீட்டி தரக்கூடியதாக இருக்கும். அதே சமயம் இன்று எந்தவித முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. இன்று உங்கள் அன்றாட பணிகளை தாண்டி குடும்பத்தினருடன் மேலும் சில விட முயற்சி செய்யவும். பணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். இன்று உங்களுடைய அடையாளத்தை நிரூபிக்க கடினமாக முயல வேண்டியது இருக்கும். 

மகரம் ராசி பலன் 

மகரம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் கணிசமான லாபத்தை பெறுவீர்கள். உங்கள் குடும்ப பொறுப்புக்களை முடிக்க கடினமாக இருக்கும். உங்கள் வேலை, தொழில் தொடர்பாக பொன்னான வாய்ப்புகளும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். பிள்ளைகள் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். இன்று வேலை அது இருந்தாலும் சரி முதலீடாக இருந்தாலும் முழுமையான விதிகளை பின்பற்றி நடப்பது அவசியம். இன்று ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியது இருக்கும். 

கும்பம் ராசி பலன் 

கும்பம் ராசி அன்பர்களுக்கு இன்று என் உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டிய நாள். பருவநிலை காரணமாக சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். உங்கள் உணவு பழக்கங்களில் கவன குறைவை தவிர்க்கவும். வியாபாரம் தொழில் தொடர்பாக உங்களுடைய அணுகுமுறை பிரச்சனைகளை தீர்க்க உதவும். உங்கள் அவசரத்தால் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் கவனம் மட்டும் நிதானத்தை கடைபிடிக்கவும். இன்று எந்தவித பெரிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை என்ற வருத்தம் ஏற்படலாம். 

மீனம் ராசி பலன் 

மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு லாபகரமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் தேவையற்ற சில செயல்பாடு உங்கள் முயற்சிகளுக்கு இடையே ஏற்பட்ட வாய்ப்பு உண்டு. இன்று எதிலும் பொறுமையாக அணுகுமுறையுடன் செயல்படுவது நல்லது. இன்று தான தர்மங்களில் கரை காட்டவும். உங்கள் வார்த்தைகளை விட உங்களுடைய செயலின் அதிக தாக்கத்தை கொண்டு வர முயற்சிக்கவும். சக ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது பணி சூழலை மேம்படுத்தும். பழைய கணக்குகளை ஒழுங்கமைப்பதில் கவனம் செலுத்துங்கள்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278