Header Logo

வணிகம்
Uber சவாரி சேவை தற்போது கேகாலை நகரிலும் கிடைக்கப்பெறுகின்றது!

Apr 24, 2026 - 10:57 AM -

0

Uber சவாரி சேவை தற்போது கேகாலை நகரிலும் கிடைக்கப்பெறுகின்றது!

இலங்கையில் அனைவரதும் அபிமானத்தை வென்றுள்ள போக்குவரத்து சேவை செயலியாக (app) திகழும் Uber தற்போது தனது சவாரி சேவையை கேகாலை நகருக்கும் விரிவுபடுத்தியுள்ளமை குறித்து அறிவித்துள்ளது. இந்நகரத்தில் வசிப்போருக்கும், அங்கு வருகை தருவோருக்கும் சௌகரியமான, நம்பிக்கையான, மற்றும் சிக்கனமான கட்டணங்கள் கொண்ட போக்குவரத்து சேவைக்கு இதன் மூலமாக வழிவகுத்துள்ளது. கேகாலை நகரில் பிரயாணம் செய்யும் தேவையைக் கொண்டுள்ளவர்கள் தற்போது இச்சேவையினூடாக கார், முச்சக்கரவண்டி, மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்களை Uber app மூலமாக ஒரு சில நொடிகளில் தருவித்துக் கொள்ள முடியும். அலுவலகம், முக்கிய வேலைகள் அல்லது உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல் என அனைத்து தேவைகளையும் மிக இலகுவாகவும், தங்குதடையின்றியும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். 

கொழும்பு-கண்டி வீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகக் காணப்படும் கேகாலையில் பின்னவல யானைகள் சரணாலயம் போன்ற பிரபலமான சுற்றுலா அமைவிடங்கள் உள்ளமையால் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என பெரும் எண்ணிக்கையில் மக்கள் போக்குவரத்தை மேற்கொள்கின்றனர். தற்போது Uber சேவை கிடைக்கப்பெறுவதால் நகரத்திலும், அதற்கு அருகாமையிலுள்ள பட்டினங்களுக்கும் சென்று வருவது சௌகரியம் மிக்கதாக மாறியுள்ளதுடன், வேண்டிய நேரங்களில் பட்டன் ஒன்றை அழுத்தி முற்கூட்டியே கட்டணங்களை அறிந்து app ஐத் தளமாகக் கொண்ட சவாரிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். 

இப்பிரதேசவாசிகளாகவுள்ள சாரதிகள் நெகிழ்திறன் மிக்க வழியில் வருமானத்தைச் சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்களையும் இது தோற்றுவித்துள்ளதுடன், இத்தளத்தில் இணைந்துள்ள பரந்தளவிலான ஓட்டுனர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இடமளிக்கும். 

Uber Sri Lanka சவாரி சேவைகளுக்கான இலங்கைக்கான முகாமையாளர் கௌஷல்யா குணரத்ன அவர்கள் இது குறித்து கூறுகையில்: “கேகாலை நகரமானது இலங்கையின் பிரதான போக்குவரத்து மார்க்கங்களை இணைக்கும் முக்கிய மையமாகக் காணப்படும் நிலையில், நம்பிக்கையான மற்றும் இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய போக்குவரத்து வசதிகளைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும். தற்போது Uber சேவை கிடைக்கப்பெறுவதால் சீரான, தொழில்நுட்பத்தை முன்னிலைப்படுத்திய அன்றாடப் பிரயாண அனுபவத்தை நாம் வழங்குகின்றோம். மேலும், உள்ளூர் வாகன சாரதிகளுக்கு வருமானத்தை ஈட்டுவதற்கான புதிய வழிமுறைகளையும் தோற்றுவித்துள்ளோம். அதிக எண்ணிக்கையான நகரங்களுக்கு எமது சேவைகளை விரிவுபடுத்தி, இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் சமூகங்களுக்கு app மூலமான போக்குவரத்து வசதிகள் கிடைக்கப்பெறுவதற்கு வழிவகுப்பதில் நாம் தொடர்ச்சியான கவனம் செலுத்தி வரும் நிலையில், அதன் ஒரு பாகமாகவே இந்த விஸ்தரிப்பு முயற்சி அமைந்துள்ளது.” 

GPS தொழில்நுட்பத்தின் மூலமாக நிகழ்நேர கண்காணிப்பு, சவாரிப் பகிர்வு, சாரதியின் விபரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் வசதி, 24X7 பாதுகாப்பு அழைப்பு மையம், மற்றும் app இலுள்ள அவசரகால பொத்தான் போன்ற பல்வகைப்பட்ட பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகள் Uber மூலமான ஒவ்வொரு சவாரியின் போதும் உறுதி செய்யப்படுகின்றன. இது சவாரி செல்கின்றவர்களுக்கும், சாரதிகளுக்கும் மிகவும் மனநிம்மதியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தனது சேவைகளை Uber தொடர்ந்தும் விரிவுபடுத்தி வருவதன் ஒரு அங்கமாக கேகாலையில் அதன் சேவை விஸ்தரிப்பு காணப்படுகின்றது. நாடெங்கிலும் அதிக எண்ணிக்கையில் சமூகங்களுக்கு நம்பிக்கையான, app மூலமான பிரயாண வசதிகளைப் பெற்றுக்கொடுத்து, இன்னும் கூடுதலான நகரங்கள் மற்றும் பட்டினங்களுக்கு தனது சேவைகளை விரிவுபடுத்தும் முயற்சியில் இத்தளம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

title