Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (25.04.2026)!

Apr 25, 2026 - 10:40 AM

இன்றைய ராசிப்பலன் (25.04.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (25) கடக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று மீனத்திலும், மேஷம், மீனத்தில் இரு கிரகங்களின் சேர்க்கைகள் நடக்கிறது. இன்று தனுசு ராசியில் உள்ள பூராடம் பின்பு உத்திராடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. 

மேஷம் ராசி பலன் 

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ஏதேனும் ஒரு இடத்தில் இருந்து உங்களுக்கு கௌரவம் அல்லது பாராட்டு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் நண்பர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். உங்களின் நட்பு வட்டாரம் விரிவடையக்கூடிய நாள். உங்கள் குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் தேவையான நேரத்தில் கிடைக்கும். உங்களின் இனிமையான பேச்சு குடும்பத்திலும், பணியிடத்திலும் உறவுகளை பலப்படுத்தும். இன்று உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முயற்சி செய்யவும். உங்களுடைய நிதி சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். சுக்கிரனின் அமைப்பால் உங்களுடைய முதலீடு செய்யும் ஆசை தோன்றும். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் மிகவும் பரபரப்பாக செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். இன்று அதிகப்படியான அலைச்சல் தொந்தரவு தரும். சிலருக்கு பாதங்களில் காயம் அபாயம் உண்டு.இன்று உங்களுடைய முடிவு எடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும் இது உங்கள் வேலைகளை முடிக்க உதவும். இன்று நிலுவையில் உள்ள பணிகள் வேகமாக நிறைவடையும். இன்று உங்களுடைய பேச்சை மற்றும் பண பரிவர்த்தனை விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவும். இன்று நீங்கள் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். 

மிதுனம் ராசி பலன் 

மிதுனம் ராசி அன்பர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள். உங்களுடைய உடல் உபாதை தொடர்பான அவதி உங்களை தொந்தரவு தரும். சமூக நடவடிக்கைகளில் சில தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று உங்களுக்கே சில எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம், யாத்திரை போன்ற விஷயங்களை செய்ய வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் பிள்ளைகளிடம் இருந்து ஊக்கம் அளிக்கும் செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். இசை, பாடல் என கலை மீதான உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். 

கடகம் ராசி பலன் 

கடகம் ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கக்கூடிய நாள். உங்கள் கடின உழைப்பிற்கான நல்ல பலனை பெறுவீர்கள். உங்கள் குழந்தைகளின் மீதான நம்பிக்கை வலுவடையும். இன்று எங்கள் தாயவல்லி உறவினர்களிடம் இருந்து அன்பையும் சிறப்பான ஆதரவையும் பெற வாய்ப்பு உண்டு. உங்களின் ஆடம்பரத்திற்காக அதிக அளவில் நீங்கள் பணம் செலவிட நேரிடும். இன்று உங்கள் பெற்றோர் உடல் நலனில் சிறப்பு கவனம் தேவை. நிதி திட்டத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். 

சிம்மம் ராசி பலன் 

சிம்மம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கல்யாணம் பலன்கள் கிடைக்க கூடியதாக இருக்கும். இன்று உங்கள் மனம் அமைதியற்றதாக, சோகம் மற்றும் சோர்வு உள்ளிட்டவை உங்களுக்கு தொந்தரவு தரும். நாளின் பிற்பகுதியில் உங்கள் பெற்றோரின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவீர்கள். இன்று மாமியார் வீட்டாரிடம் இருந்து சிலசில அதிருத்தியான சூழல் ஏற்படும். இன்று நீங்கள் பொறுமையாக இனிமையான சொற்களை பயன்படுத்துவது உங்கள் உறவை வளர்க்க உதவும். இன்று கண் தொடர்பான பிரச்சனைகள் தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அச்சமற்ற உணர்வு ஏற்படும். கடினமான பணிகளை துணிச்சலுடன் செய்து முடித்தார்கள். உங்கள் பெற்றோரிடம் இருந்து ஆதரவும், ஆலோசனையும் பெறுகிறீர்கள். உடல்நல பிரச்சினை காரணமாக உங்கள் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இன்று பிறருக்கு நன்மைகள் செய்வதில் ஈடுபாடு காட்டுவீர்கள். உங்கள் பேச்சு தெளிவை கடைபிடிக்கவும். இல்லையெனில் பிறரிடம் தவறான புரிதல் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களுடைய தொழிலில் பொருளாதார ஆதாயம் கிடைக்கும். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சுகமான பலன்கள் கிடைக்கும் நாள். உங்களுடைய அதிகாரமும் செல்வமும் பெருகும். இன்று தேவைப்படுவதற்கு சேவை செய்வதில் அக்கறை காட்டுவீர்கள். இன்று பெற்றோர், குருவின் மீது பக்தியும், விசுவாசத்தையும் காட்டுவீர்கள். புதிய முயற்சிகளில் முதலீடு செய்ய மிகவும் லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கை முறை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்று தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள். வேலையில் உங்களுடைய நுணுக்கமான செயல்பாடு நல்ல பெயரை பெற்று தரும். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய மனம் அமைதி இன்றி குழப்பத்துடன் காணப்படும். உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் சாதக பலனை தராமல் போகலாம். இன்று உங்களுடைய வேலையில் பொறுமையும், அமைதிதான் புத்தி எதிரிகளை வீழ்த்துவதற்கு உதவும். அரசு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. இன்று வழக்கு விஷயங்களில் உங்களுக்கு வெற்றி கிடைப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு சிக்கலான நிதி திட்டங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உங்கள் வரவு செலவு திட்டங்களில் கவனம் தேவை. 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய அறிவு மற்றும் புத்திசாலித்தனமான செயல்பாடு நல்ல கிழமை தரும். ஈகை மற்றும் பொதுநலப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். சமய சடங்கு விஷயங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். இன்று உங்களுடைய பொருளாதார நிலையை வலுவாக இருக்கும். சிலருக்கு ஆரோக்கியத்தில் சிக்கல் ஏற்படலாம் குறிப்பாக செரிமானம் பிரச்சனை தொந்தரவு தரும். உணவு பழக்கத்தில் கவனம் தேவை. இன்று உங்கள் வேலையில் நீங்கள் காட்டும் கவனம் பணியிட பிரச்சனைகளை தீர்க்க உதவும். 

மகரம் ராசி பலன் 

மகரம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் மதிப்பின் பொருட்களை வாங்குதல் அல்லது ஆடம்பரத்திற்காக நீங்கள் விரும்பாத போதும் தேவையற்ற செலவுகளை செய்ய நேரிடும். மாமனார் வீட்டில் உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். உங்கள் தொழிலில் மிகுந்த ஈடுபாடுடன் செயல்படுவீர்கள். இன்று நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் நிறைவேறும். நீங்கள் ஏதேனும் புதிய விஷயங்களில் முதலீடு செய்ய விரும்பினால் தாராளமாக செய்யலாம். இன்று எதிலும் உறுதியான அணுகுமுறை திட்டங்களை முன்னோக்கி நகர்த்த உதவும். முக்கிய விஷயங்களை வரிசைப்படுத்தி முடிக்கவும். 

கும்பம் ராசி பலன் 

கும்பம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் புதிய விஷயங்களில் விவேகத்துடன் ஆராய்ந்து செயல்படுவது நல்லது. இன்று உங்கள் செலவுகளை மிகவும் கவனமாக செய்வதன் நல்லது. இன்று குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சாதகமற்ற அல்லது எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காமல் போகலாம். இன்று உலகில் சார்ந்த இன்பங்கள் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும் . இன்று வேலை அல்லது கல்வி தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தொழிலில் சில தொழில்நுட்ப பிரச்னைகள் உருவாக வாய்ப்பு உண்டு. அதனால் எதிர்பார்ப்பு வேலையை சற்று தாமதப் படலாம். 

மீனம் ராசி பலன் 

மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் பிள்ளைகள் தொடர்பாக நீண்ட நாட்களாக நிலவி வந்த ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும். உங்கள் கலகலப்பான மற்றும் மகிழ்ச்சியான சுபாவத்தைக் கண்டு, பிறர் உங்களுடன் நட்பு பாராட்டவும், உங்கள் தொடர்புகளை நாடவும் முன்வருவார்கள். சமூகத்தில் கிடைக்கும் அங்கீகாரம் உங்கள் மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். இரவு வேளையில், உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள், அங்கே கலகலப்பும் சிரிப்பொலியும் நிறைந்திருக்கும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278