Header Logo

சினிமா
கருப்பு படத்தில் நான் ஹீரோ இல்லை - சூர்யா

Apr 27, 2026 - 09:49 AM -

0

கருப்பு படத்தில் நான் ஹீரோ இல்லை - சூர்யா

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கருப்பு. 

எதிர்வரும் மே 14-ஆம் திகதி வெளியாக இருக்கும் நிலையில், கருப்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நேற்றிரவு நடந்தது. 

இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

கருப்பு திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். 

இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் தான் ஹீரோ இல்லை என்று கூறியுள்ளார். 

மேலும், இது ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். 

இது குறித்து பேசிய அவர், கருப்பு திரைப்படம் இந்த அளவுக்கு வந்ததற்கு காரணம் கருப்பசாமி தான் காரணம் என்று நினைக்கிறேன். மனிதன் மீது கடவுள் இறங்கும் போது ஏற்படும் மாற்றத்தை நான் பார்க்கிறேன். 

நம்பிக்கை இருக்கும் இடத்தில் கண்டிப்பாக அதிசயம் நடக்கும். ஆர்.ஜே. பாலாஜி பல திறமைகளை கொண்டவர். 

நான் என்னை சூர்யாவாக மட்டுமே பார்க்கிறேன். ஆனால், அவர் தன்னை இயக்குநர், நடிகர், வர்ணனையாளராக பார்க்கிறார். 

இந்தப் படத்துல நான் ஹீரோ இல்லை, கருப்பசாமி தான் ஹீரோ. படம் பார்த்தவங்க முதல் பாதி ரொம்ப எமோஷனலா இருக்கு, இரண்டாவது பாதி தியேட்டர் மொமன்ட்ஸ் அதிகமா இருக்குனு சொல்றாங்க. 

மே 14-ஆம் திகதி உங்க கைல தான் இருக்கு. நிச்சயமா உங்களுக்கு பிடிக்கும். தியேட்டர்-ல பார்ப்போம் என்றார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title