Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (27.4.2026)!

Apr 27, 2026 - 10:36 AM

இன்றைய ராசிப்பலன் (27.4.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (27) சிம்ம ராசியில் பூரம் பின் உத்திரம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். இதனால் மாளவ்ய யோகம் உருவாகிறது. இன்று மகரம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று வளர்பிறை ஏகாதசி விரதம். 

மேஷம் ராசி பலன் 

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியின் அதிபதியான செவ்வாய், பன்னிரண்டாம் வீட்டில் (செலவு ஸ்தானம்) சஞ்சரிப்பதால் உங்களுடைய செலவுகளை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தவும். அதே சமயம் இது ஒரு பெரும் இன்பங்களை அருளும் ஒரு சுப ஸ்தானமாகும். இன்று நீங்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்வதில் அக்கறை காட்டுவீர்கள். இன்று நீங்கள் உங்களுடைய மதிப்பு மரியாதை அதிகரிக்கும் வகையில் சில நடவடிக்கையில் ஈடுபடுவீர்கள். தொழில் தொடர்பான விஷயங்களில் சற்று சவால்கள் சந்திக்க நேரிடும். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியின் அதிபதியான சுக்கிரன் ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் உங்களுக்கு பல சுகமான செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. சுக்ரன் அருளால் உங்களுக்கு அரசு மரியாதை, அரசு தொடர்பான வேலைகள் வேகமாக முடியும். இன்று உங்களுக்கு செல்வ வளம் கிடைக்கக்கூடிய நாள். இன்று உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் மன அமைதி தரக்கூடியதாக இருக்கும். தொழிலில் நீங்கள் கூட்டாளிகளின் ஆதரவு பெறுவீர்கள். இன்று குருவின் அருளால் உங்களுடைய வளர்ச்சியில் ஸ்திரத்தன்மை அதிகரிக்கும். தவறான புரிதல்களை விலக்கி கவனமாக செயல்பட வேண்டிய நாள். 

மிதுனம் ராசி பலன் 

மிதுனம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசி அதிபதியான புதன் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். இன்று சோர்வு அல்லது பதற்றம் உங்களுக்கு தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. மூத்த சகோதரர்களின் அன்பும் ஆதரவும் உங்களுடைய வருமானத்தை உயர்த்த உதவும். இன்றைய நாள் சற்று பரபரப்பான நாளாகவும், கவலையுடனும் கழியு வாய்ப்பு உண்டு. உங்கள் துணையின் உடல் நலன் மீது கவனம் செலுத்த வேண்டிய நாள். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு சற்று நம்பிக்கையை தரக்கூடியதாக அமையும். 

கடகம் ராசி பலன் 

கடகம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதி தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு குறிப்பிடத்தக்க பணவரவு அல்லது சொத்து சேரும் வாய்ப்பு உண்டு. உங்கள் செலவுகளை கட்டுப்படுத்துவதும், செயல்களில் திட்டமிடுவதும் நன்மை தரும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து ஊக்கமளிக்கும் சில செய்திகள் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த உங்களுடைய பணிகளை முடிக்கும் நல்ல வாய்ப்பு அமையும். தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்களுக்கு ஆற்றல் மற்றும் செயல்களை செய்யும் உத்வேகத்தை தருவார். 

சிம்மம் ராசி பலன் 

சிம்மம் ராசி அன்பர்களுக்கு இன்று மேஷ ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் ராசி அதிபதி சூரியன், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடியவராக இருப்பார். பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல மாற்றம் உருவாக்கும். உங்களுடைய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக கூட்டாளிகளின் ஆதரவு நன்மைகளை தரும். இன்று எந்த சூழலிலும் இனிமையான உங்கள் பேச்சு சூழலை சாதகமாக மாற்ற உதவும். நீங்கள் மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். நிதி விஷயங்களில் எச்சரிக்கையும் சேமிப்பு எண்ணத்தையும் வளர்த்துக் கொள்ளவும். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பலரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கக்கூடிய நாள். குடும்பம் மற்றும் பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். விவேகத்துடன் செயல்படுவதால் பிறரின் ஆதரவோடு வேலையை வேகமாக முடிக்க முடியும். இன்று வீண் விவாதங்கள் சச்சரவுகளை தவிர்க்க வேண்டிய நாள். ராசியில் கேதுவின் சஞ்சாரத்தால் வேலை தொடர்பாக சில சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்களின் தொடர்ச்சியாக முயற்சிகள் லாபம் மற்றும் அங்கீகாரத்தை பெற்று தரும். இன்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியின் அதிபதியான சுக்கிரன் கிராமத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்கள் குடும்ப பொறுப்பாக இருந்தாலும், வேலை தொடர்பான முயற்சியாக இருந்தாலும் திட்டமிட்ட செயல்பாடு முக்கியம். உங்களுடைய மன அமைதியை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடவும். அதே சமயம் லாப ஸ்தானத்தில் சந்திரனின் சஞ்சாரம் உங்களுடைய செல்வ நிலை மற்றும் அழகை மேம்படுத்துவார். இன்று உங்களுக்கு ஒரு நெருங்கிய நண்பரின் ஆலோசனை பெரிய அளவில் உதவியாக இருக்கும். கடின உழைப்பு உங்களுடைய பணிகளை சரியாக முடிக்க உதவும். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகள் தொடர்பாக இருக்கக்கூடிய முடிவுகள் சாதகமான பலனை தரும். இன்று உங்கள் சிறப்பான செயல்பாடு வெற்றியையும், புகழையும் பெற்று தரும். உங்கள் பணி சூழலை மேம்படுத்துவதில் திட்டமிடல் கை கொடுக்கும். இன்று நிபுணர்களின் ஆலோசனை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்த நாளாக அமையும் நாள். இன்று நீங்கள் எதிர்பாராத செல்வங்கள் சமாளிக்க வேண்டியது இருக்கும். உங்களுடைய சமூக வட்டாரம் விரிவடைய வாய்ப்பு உண்டு. 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியின் அதிபதியான குருவின் நேரடி பார்வை மற்றும் சந்திரனின் மனப்பான்மை உங்களுக்கு பெரிய அளவில் நன்மைகள் சேரக் கூடியதாக இருக்கும். பெரிய அளவில் வருமானம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும். உங்களுடைய செல்வ வளம் அதிகரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். நீங்கள் அவசர முடிவு எடுப்பது தவிர்த்து செயல்பட்டால் உங்களின் நிலைத்தன்மை அதிகரிக்கும். உங்கள் வேலை, தொழில் தொடர்பாக சில முக்கியமான நாளாக அமையும். 

மகரம் ராசி பலன் 

மகரம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பணிச்சுமை அல்லது அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். நான் உங்கள் தொழில், வியாபாரம் தொடர்பாக சற்று குழப்பமான மனநிலை இருக்கும். அதே சமயம் உங்களுடைய பணிகளை கண்ணும் கருத்துமாக முடிப்பதில் ஆர்வம் காட்டவும். இன்று நீங்கள் முடிவு எடுக்கும் விஷயத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். வேலை தொடர்பாக மேலதிகாரிகளிடமிருந்து நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும். இது பணியிடத்தில் மறைமுக சவால்களை சமாளிக்க உதவும். 

கும்பம் ராசி பலன் 

கும்பம் ராசி அன்பர்களுக்கு இன்று, உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கக் கூடிய நாள். உங்களுடைய செல்வ நிலை மற்றும் புகழ் அதிகரிக்கும். ஆன்மீகத்தின் மீதான நாட்டம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை குறையும் என்பதால் வேலைகள் வேகமாக முடியும். நீண்ட நாட்களாக முடிக்க நினைத்த வேலைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். இன்று இன்று மங்களகரமான மற்றும் மகிழ்ச்சியான மாற்றங்களை காண்பீர்கள். அதே சமயம் அபாயகரமான முதலீடுகளில் இருந்து விலகி இருப்பது அவசியம். அரசியலில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். 

மீனம் ராசி பலன் 

மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசி அதிபதியான குருவின் நல்லருள் கிடைக்கக்கூடிய நாள். இன்று உங்கள் விருப்பங்கள், ஆசைகள் நிறைவேற வாய்ப்பு உண்டு. உங்கள் துணையிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உங்கள் வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் அல்லது சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் பயணங்கள் மேற்கொள்ளவும் அதன் மூலம் அனுகூல பலனையும் பெறுவீர்கள். அலுவலக அரசியலில் இருந்து விலகி இருப்பது அவசியம்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278