Header Logo
Mogo Academy

வணிகம்
Singer ஸ்ரீ லங்கா PLC Kapruka Holdings PLC இடையே புதிய கூட்டிணைவு

Apr 27, 2026 - 12:30 PM -

0

Singer ஸ்ரீ லங்கா PLC Kapruka Holdings PLC இடையே புதிய கூட்டிணைவு
Mobitel inner

Singer ஸ்ரீ லங்கா PLC Kapruka Holdings PLC உடன் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தி தமது மின் சாதனங்களையும் வீட்டுத் தளபாடங்களையும் Kapruka இன் Partner Central தளத்தின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தக் கூட்டிணைவு, இலங்கையின் நம்பகமான முதன்மை வர்த்தகநாமமான Singer, நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு e-commerce தளமான Kapruka இன் வலுவான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளுடன் இணைந்து தரமான பொருட்களை உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிதாகக் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ், சிங்கர் காட்சியறைகளில் கிடைக்கும் அதே பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு Kapruka தளத்தின் வழியாக நேரடியாக கொள்வனவு செய்திட முடியும். இந்தக் கூட்டாண்மையின்படி, Kapruka இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களும் சிங்கர் காட்சியறைகளில் கிடைக்கும் அதே விலையில் விற்கப்படும். அதன்படி வாடிக்கையாளர்களுக்கு எந்த விலை உயர்வும் இன்றி Online இல் பொருட்களை வாங்க முடியும். இந்தக் கூட்டாண்மை Kapruka இன் பரந்த வாடிக்கையாளர் வலையமைப்புக்கும் பயனளிப்பதோடு வெளிநாடுகளில் உள்ள இலட்சக்கணக்கான இலங்கையர்கள் தங்கள் குடும்பங்களுக்கு வீட்டுத் தளபாடங்களையும் அத்தியாவசிய உற்பத்திகளையும் நம்பகத்தன்மையுடன் அனுப்புவதை இது எளிதாக்கும். மேலும், உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கும் நவீனத் தொழில்நுட்ப உபகரணங்களையும் மற்றும் வீட்டுத் தளபாடங்களையும் நம்பிக்கையுடன் வாங்குவதற்கு ஒரு நம்பகமான டிஜிட்டல் தளமொன்று கிடைப்பதை இது உறுதி செய்கிறது. 

Kapruka இன் Partner Central திட்டத்தின் திட்டத் தலைவர் ஹிமாலி சில்வா கூறுகையில், ஏற்கனவே நிலைபெற்ற பிராண்டுகள் ஒரு பெரிய டிஜிட்டல் நுகர்வோர் தளத்தை சென்றடைய உதவும் வகையில் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், சிங்கர் போன்ற ஒரு பிரபல்யமான பெயர் இந்தத் தளத்தில் இணைவது, தரமான உற்பத்திகள், சிறந்த விநியோக வலையமைப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் Kapruka இன் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது எனவும் தெரிவித்தார். Kapruka நிர்வாகப் பணிப்பாளர் துலித ஹேரத் கருத்து தெரிவிக்கையில் உள்நாட்டு பிராண்டுகளின் வளர்ச்சியை ஆதரிக்கும் Kapruka இன் நோக்கத்தில் இந்த இணைப்பு முக்கியமானதொரு நகர்வு என்றார். 

சிங்கர் ஸ்ரீலங்காவின் தலைமைச் செயற்பாட்டு அதிகாரி வஜிர தென்னகோன் கூறுகையில், வாடிக்கையாளர் நடத்தை டிஜிட்டல் தளங்களுக்கு வேகமாக மாறிவரும் இந்தக் காலகட்டத்தில், வாடிக்கையாளர் இருக்கும் இடங்களில் சிங்கர் பிராண்ட் இருப்பது மிகவும் முக்கியம் எனவும் Kapruka இன் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தளத்தைப் பயன்படுத்துவது, பல தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் சேவைத் தரத்தைப் பராமரித்து, ஒரு புதிய டிஜிட்டல் வாடிக்கையாளர் தளத்தைச் சென்றடைவதோடு, சிங்கர் உற்பத்திகளை நாடு முழுவதும் விரைவாகவும் திறமையாகவும் விநியோகிக்க உதவும் என்றும் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara