Header Logo
SLIC
மலையகம்
ஹட்டன் – டிக்கோய நகர சபையின் மாதாந்த அமர்வு பாதிப்பு!

Apr 27, 2026 - 03:37 PM

ஹட்டன் – டிக்கோய நகர சபையின் மாதாந்த அமர்வு பாதிப்பு!
Mobitel Inner 1278
EDEX Inner

ஹட்டன் – டிக்கோய நகர சபையின் இன்று (27) இடம்பெற்ற மாதாந்த அமர்வு நடைபெற்றது. கடந்த மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தின் சபை அறிக்கையில் (Minutes) நிலவிய குளறுபடிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த கூட்டமே இன்று மீண்டும் கூடியது. 

கூட்டம் தொடங்கியவுடன் ஆளும்கட்சி உறுப்பினர் வைத்தியர் தர்மபிரிய சபை அறிக்கையைப் பற்றிய எந்த கருத்தையும் தெரிவிக்காமல் சபையின் அனுமதி பெற்று வெளியேறினார். அதனைத் தொடர்ந்து முன்னாள் ஹட்டன் – டிக்கோய நகரசபை தலைவரும் உறுப்பினருமான வைத்தியர் நந்தகுமார் சபை அறிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினார். 

பின்னர் சபை அறிக்கைக்கு அனுமதி வழங்க மறுத்த மேலும் சில உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறினர். 

இது குறித்து கருத்து தெரிவித்த உப தலைவர் சுரேந்திரா, 

"கடந்த கூட்ட அறிக்கையில் பல தவறுகள் இருந்தன. அவற்றை 3 நாட்களுக்குள் திருத்தி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்று வரை திருத்தப்பட்ட அறிக்கை எமக்கு வழங்கப்படவில்லை. இதனால் முறையற்ற அந்த அறிக்கையை அங்கீகரிக்க முடியாது," எனத் தெரிவித்து 8 உறுப்பினர்களுடன் சபையிலிருந்து வெளியேறினார். 

இந்த அமர்வின் போது சுயேட்சைக் குழு உறுப்பினர் கேசவமூர்த்தி தனது வாயில் பிளாஸ்டர் ஒட்டிக்கொண்டு சபையில் அமர்ந்திருந்தார். தனக்கு சபையில் கருத்து தெரிவிக்க உரிமை மறுக்கப்படுவதை அடையாளப்படுத்தும் வகையில் அவர் இந்த அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்தார். 

சபை அறிக்கை தொடர்பான இழுபறி நிலை காரணமாக நகர சபையின் நிர்வாக நடவடிக்கைகள் தற்போதும் சிக்கலிலேயே நீடிக்கின்றன.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278