Apr 27, 2026 - 04:11 PM -
0
இலங்கையின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான Infinix, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனது NOTE 60 Series இற்காக அனைவரையும் கவர்ந்த பிரம்மாண்ட வெளியீட்டு விழாவை நடாத்தியது. இது புத்தாக்கம் மற்றும் அறிவார்ந்த ஸ்மார்ட்போன் அனுபவங்களின் புதிய மைல்கல்லைக் குறிக்கிறது. “Take Note, Take Lead” என்ற பிரச்சாரத்தின் கீழ் கொழும்பில் நடைபெற்ற இந் நிகழ்வு, இன்றைய இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பம், சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் அடுத்த தலைமுறை அம்சங்களை ஒன்றிணைக்கும் Infinix இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது.
மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்ற இவ் விழாவில், NOTE 60 Series இன் அறிமுகத்தை காண ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், lifestyle influencers மற்றும் தொழில்துறை உள்நபர்கள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய அம்சமாக, சாதனத்தின் தனித்துவமான கண்டுபிடிப்பான AI Matrix Display அறிமுகப்படுத்தப்பட்டது. இது தனிப்பயனாக்கப்பட்ட அறிவிப்புகள், ஆற்றல்மிக்க காட்சிக்குறிப்புகள் மற்றும் அன்றாட வாழ்வில் தடையின்றி ஒருங்கிணைக்கப்படும் ஊடாடும் அம்சங்கள் மூலம் பயனர் தொடர்பை மறுவரையறை செய்யும் ஒரு அறிவார்ந்த இடைமுகமாகும்.
இதன் போது புகழ்பெற்ற கலைஞரான யுகி நவரத்ன தனது மெய்சிலிர்க்கும் நேரடி இசை நிகழ்ச்சியால் பங்கேற்பாளர்களை பரவசப்படுத்தினார். இசை நிகழ்ச்சிக்குப் பின், வருகையாளர்கள் வெளியீட்டை மேலும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இசை நிகழ்ச்சிக்கு மெருகூட்டும் வகையில், Infinity Band குழுவினர் தங்களின் அதிரடியான நடன நிகழ்ச்சியால் பார்வையாளர்களைக் கவர்ந்தனர். இது அந் நிகழ்விற்கு உற்சாகத்தையும் ஆற்றலையும் சேர்த்ததுடன் NOTE 60 Series இன் உணர்வையும் கச்சிதமாகப் பிரதிபலித்தது.
நிகழ்வில் அமைக்கப்பட்டிருந்த அனுபவ மண்டலம் விருந்தினர்கள் ஈடுபாட்டுடன் பங்கேற்பதற்கான முக்கிய இடமாக மாறியது. வருகை தந்திருந்தோர், அதன் AI Matrix Display உடன் ஊடாடி Snapdragon மூலம் இயங்கும் 5G செயல்திறனின் வேகத்தை அனுபவித்தனர். மேலும் அவர்கள், Ferrari ஆல் ஈர்க்கப்பட்ட அதன் துணிச்சலான வடிவமைப்பைப் பாராட்டியதுடன் சாதனத்தை நேரடியாக ஆராய்ந்தறியும் வாய்ப்பையும் பெற்றனர். NOTE 60 Series, அதன் தடையற்ற பல்பணித் திறன்கள், ஆழ்ந்த அனுபவத்தைத் தரும் display மற்றும் நேர்த்தியான கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் பங்கேற்பாளர்களைக் கவர்ந்தது. இது ஆக்கத்திறன், படைப்பாற்றல் மற்றும் சுய வெளிப்பாட்டிற்கான உற்ற துணையாகத் தன்னை நிலைநிறுத்தியது.
இந்நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த Infinix Sri Lanka இன் பிரதம நிறைவேற்று அதிகாரி முகமட் ஷசெப் அதர், “NOTE 60 Series, மேலும் இணைக்கப்பட்ட, ஊக்கம் பெற்ற தலைமுறையை இலங்கையில் உருவாக்கும் எங்களின் தொலைநோக்குப் பார்வையைப் வெளிப்படுத்துகிறது. 5G மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த அனுபவங்கள் ஊடாக வேகமாக மாறிவரும் டிஜிட்டல் உலகில் பயனர்கள் விரைவாகச் செயல்படவும், சுதந்திரமாக உருவாக்கவும், தலைமை தாங்கவும் நாங்கள் வழிவகை செய்கிறோம்.” என்று கூறினார்.
இந்த ஒத்துழைப்பு குறித்துப் பேசிய JBL நிறுவனத்தின் Embedded Audio வணிகப் பிரிவு, Consumer Audio, அமைப்புப் பொறியியல் பணிப்பாளர் சைரஸ் லெக், “உலகெங்கிலும் உள்ள அதிக பயனர்களுக்கு சக்திவாய்ந்த, துல்லிய ஒலி அனுபவங்களைக் கொண்டுவர எங்களின் SOUND BY JBL ஊடாக Infinix உடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமையடைகிறோம். அனைவரும் ரசிக்கக்கூடிய சிறந்த ஒலியை வழங்குவதில் நாங்கள் இருவரும் கவனம் செலுத்துகிறோம். மொபைல் பொழுதுபோக்கின் எல்லைகளை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதால் இக் கூட்டு முயற்சியை மேலும் தீவிரப்படுத்த ஆவலுடன் உள்ளோம்.” என்றார்.
அதனைத் தொடர்ந்து Infinix, Qualcomm Technologies உடனான தனது முதல் இணைவையும் அறிவித்தது. Qualcomm Technologies இன் தயாரிப்பு முகாமைத்துவத்திற்கான சிரேஷ்ட துணைத் தலைவர் சென்வெய் யென் கூறுகையில், “Infinix மற்றும் Qualcomm Technologies இடையேயான இவ் இணைவு மொபைல் செயல்திறனை மறுவரையறை செய்து புதுமைகளை முன்னிறுத்தும் இரண்டு தலைவர்களை ஒன்றிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிகழ்வாகும். ‘போதுமானது’ என்பதைத் தாண்டி மேலும் பலவற்றை எதிர்பார்க்கும் தலைமுறைக்கு வலுவூட்டும் வகையில் நாங்கள் ஒன்றாக வேகம் மற்றும் ஆற்றலுக்கான புதிய அளவுகோலை அமைக்கிறோம். மொபைல் தொழில்நுட்பத்தின் எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற எங்களின் பொதுவான இலட்சியத்தை இந்த மைல்கல் வலியுறுத்துகிறது.” என்றார்.
Infinix உடனான இணைவு குறித்து, வர்த்தக நாமம் Pininfarina இன் வணிகப் பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஃபபியோ கலோரியோ கருத்து தெரிவிக்கையில், “95 ஆண்டுகளுக்கும் மேலாக Pininfarina, வேகம் மற்றும் நேர்த்தியின் சின்னங்களை வடிவமைத்து வருகிறது. Infinix உடன் இணைந்து அதே உணர்வை நாங்கள் எதிர்கால ஸ்மார்ட் சாதனங்களில் கொண்டு வருகிறோம். வடிவமைப்பு என்பது வெறும் அலங்காரம் அல்ல, மாறாக செயல்திறன், புதுமை மற்றும் தனித்துவத்தின் உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்ற எங்களின் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை NOTE 60 Ultra பிரதிபலிக்கிறது.” என்றார்.
NOTE 60 Series, உயர்தர Snapdragon chipset மற்றும் அடுத்த தலைமுறை இணைப்பு வசதிகளின் ஆதரவுடன் சக்திவாய்ந்த செயல்திறன் மேம்பாடுகளை வழங்குகிறது. இது பயனர்கள் தங்களின் அன்றாடத் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது. உயர் செயல்திறன் மிக்க அழகியலால் ஈர்க்கப்பட்ட இதன் உயர்தர வடிவமைப்பு, தனித்து நிற்க விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்ட சாதனம் என்ற அதன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு இணைந்த இந்த அனுபவம் பங்கேற்பாளர்களை முழுமையாக ஈர்த்த நிலையில், அறிமுக விழா சிறப்பாக நிறைவடைந்தது. NOTE 60 Series மூலம், Infinix தொடர்ந்து தனது எல்லைகளை விரிவுபடுத்தி, இலங்கை இளைஞர்களின் இலட்சியங்களுடன் ஒத்துப் போகும் அர்த்தமுள்ள புதுமைகளை வழங்குகிறது.
அறிவார்ந்த ஸ்மார்ட்போன்களை அனுபவிக்கவும் தங்களின் அன்றாட வாழ்வில் முன்னிலை வகிக்கவும் விரும்பும் நுகர்வோர் Infinix NOTE 60 Series ஐ இப்போது நாடெங்கிலுமுள்ள விற்பனை நிலையங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
Infinix தொடர்பாக
2013 இல் நிறுவப்பட்ட Infinix, அதிநவீன தொழில்நுட்பம், தனித்துவமான வடிவமைப்பு மற்றும் சிறந்த செயல்திறனை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் புத்தாக்கத்தால் உந்தப்பட்ட வர்த்தகநாமம் ஆகும். இது அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் அறிவார்ந்த, மகிழ்ச்சியான மொபைல் அனுபவங்களை வழங்குகிறது. ஸ்மார்ட்போன்களுக்கு அப்பால், Infinix இன் தயாரிப்பு வரிசை TWS earbuds, smartwatches, மடிக்கணினிகள், tablets, ஸ்மார்ட் டிவிகள் என பல ஸ்மார்ட் சாதனங்களை உள்ளடக்குகின்றது. தற்போது, Infinix தயாரிப்புகள் ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா உட்பட உலகளாவிய ரீதியில் 70க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கிடைக்கின்றன.
ஊடக விசாரணைகளுக்கு:
Infinix Mobility Limited
மேலதிக தகவல்களுக்கு, https://lk.infinixmobility.com/ ஐப் பார்வையிடவும்
