Header Logo

வணிகம்
முக்கியத்துவம் வாய்ந்த மூன்று ஆண்டு கால அனுசரணையுடன் இலங்கையில் குதிரைப் பந்தயத்திற்கு ஆதரவளிக்க BETSS.COM முன்வந்துள்ளது 

Apr 27, 2026 - 04:27 PM -

0

முக்கியத்துவம் வாய்ந்த மூன்று ஆண்டு கால அனுசரணையுடன் இலங்கையில் குதிரைப் பந்தயத்திற்கு ஆதரவளிக்க BETSS.COM முன்வந்துள்ளது 

BetSS Governor’s Cup மற்றும் BetSS Queen’s Cup ஆகிய கிண்ணங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மூன்று ஆண்டு கால பிரதான அனுசரணை மூலமாக இலங்கையில் குதிரைப் பந்தயத்தில் புதிய யுகமொன்றுக்கு Sporting Star ன் டிஜிட்டல் தளமான BETSS.COM வித்திட்டுள்ளது. 

BETSS.COM தளத்தை இயக்கி வருகின்ற Sports Entertainment Services (Pvt) Ltd நிறுவனம் வழங்க முன்வந்துள்ள மூன்று ஆண்டு கால அர்ப்பணிப்பானதுரூபவ் நாட்டில் இடம்பெறும் மிகவும் பிரபலமான பந்தய நிகழ்வுகளில் இரண்டை மேம்படுத்துவதில் முக்கியமான படியாக மாறியுள்ளது. அவற்றின் பிரபலம் ஈடுபாடு மற்றும் டிஜிட்டல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ள உலகில் அதன் பொருத்தப்பாடு ஆகியவற்றை மேம்படுவதற்கு இது வழிவகுத்துள்ளது. “Patron of Elite Sri Lankan Sports & Heritage” (இலங்கையின் முன்னணி விளையாட்டுக்கள் மற்றும் பாரம்பரியத்தின் பாதுகாவலர்) என்ற தனது வர்த்தகநாம வாக்குறுதியுடன் கலாச்சாரரீதியாக ஆழம்மிக்க புகழ்பூத்த விளையாட்டுத் தளங்களை வளர்ப்பதற்கு BETSS.COM தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது. 

நுவரெலியா குதிரைப்பந்தயத் திடலில் இடம்பெறும் முக்கியமான “blue riband” பந்தயங்களாக Governor’s Cup மற்றும் Queen’s Cup ஆகிய கிண்ணங்கள் அமைந்துள்ளதுடன் விளையாட்டு நவநாகரிகம் மற்றும் மலைநாட்டு சுற்றுலாத்துறை என அனைத்தும் களைகட்டும் ஏப்ரல் வசந்தகால விடுமுறைக் கொண்டாட்டத்தில் இந்நகரத்தின் முக்கிய நிகழ்வுகளாகவும் காணப்படுகின்றன. புகழ்பெற்ற ஆய்வாளரான சாமுவேல் பேக்கரின் சகோதரரான திரு. ஜோன் பேக்கர் அவர்களால் 1840 களில் குதிரைப்பந்தயம் இலங்கையில் முதல்முறையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. நுவரெலியாவின் மலைகளில் இங்கிலாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட உயர் இன குதிரைகளுக்கான பயிற்சி நெறிகளை அவர் ஆரம்பித்து வைத்தார். நுவரெலியா குதிரைபந்தயத் திடலில் முதல்முறையாக 1875 ம் ஆண்டில் குதிரைப்பந்தய நிகழ்வு இடம்பெற்றதுடன் நுவரெலியா Gymkhana Club கழகம் அதனை ஏற்பாடு செய்திருந்தது. பிரசித்தி பெற்ற Governor’s Cup மற்றும் Queen’s Cup ஆகிய கிண்ணங்கள் 1910 ம் ஆண்டில் இலங்கையின் ஆளுனர் சேர் ஹென்றி எட்வேர்ட் மக்கலம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது இப்பந்தயம் 153 வது ஆண்டை எட்டியுள்ளதுடன் இலங்கையில் உயர் இன குதிரைப்பந்தய பாரம்பரியத்தில் காலத்தால் அழியாத சின்னமாக இந்நிகழ்வு காணப்படுகின்றது. 

2026 ம் ஆண்டு பந்தயத்தில் முன்னணி உரிமையாளர்கள் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் குதிரைப்பந்தய வீரர்கள் என உயர் இன குதிரைகள் இடம்பெற்றன. இம்முறை வலுவான வகையில் டிஜிட்டல் ரீதியாக இந்நிகழ்வு ஒருங்கிணைப்பட்டமை தனித்துவமான சிறப்பம்சமாகும். BETSS.COM தளத்தினூடாக பந்தயம் தொடர்பான உடனடி தகவல் விபரங்கள் மற்றும் இது தொடர்பான பகிர்வுகள் வெளிவருவதால் குதிரைப்பந்தயம் இடம்பெறும் தினத்திற்கு முன்பதாகவும் பந்தயம் இடம்பெறும் தினத்தன்றும் அதற்கு மறு தினமும் இரசிகர்களின் ஈடுபாட்டை மேம்படுத்த உதவும். டயலொக் டிவி அலைவரிசையில் ஒளிபரப்பாகும் Papare.com இந்நிகழ்வை நேரலையாக தயாரித்து வழங்குவதுடன் இப்பந்தய நிகழ்வுகளை மலைநாட்டிற்கு அப்பால் உள்ளவர்களும் பார்த்து ரசிப்பதற்காக யூடியூப் மற்றும் உத்தியோகபூர்வ டிஜிட்டல் தளங்கள் மூலமாகவும் நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்படும். 

Royal Turf Club கழகத்தின் தலைமையின் கீழ் இடம்பெறும் இந்நிகழ்வு அதன் பாரம்பரியத்தை தொடர்ந்தும் கட்டிக்காப்பதுடன் பார்வையாளர்கள் மத்தியில் மாற்றம் கண்டு வருகின்ற எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்து வருகின்றது. 

Sumathi Holdings (Pvt) Ltd நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு. ஜெகத் சுமதிபால அவர்கள் இக்கூட்டாண்மை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்: 

'இலங்கையின் குதிரைப்பந்தயம் மற்றும் கலாச்சாரத் துறையில் Governor’s Cup மற்றும் Queen’s Cup ஆகிய கிண்ணங்களுக்கு மிக நீண்ட காலமாக முக்கிய இடம் உள்ளது. இதனை வெறுமனே மற்றுமொரு அனுசரணை என்று கூறிவிடுவதுடன் நிறுத்திவிட முடியாது. இது பாரம்பரியமான விளையாட்டொன்றை மேம்படுத்தி மற்றும் அதற்கு புத்துயிரளிக்கும் நோக்கம் கொண்ட மூலோபாயரீதியான ஒன்றிணைவாகும். புகழ்புத்த இப்பந்தயங்களை பந்தயத் திடலுக்கு அப்பால் உள்ளவர்களும் கண்டுகளிக்கும் வகையில் அதன் வீச்சினை BETSS.COM மூலமாக நாம் நீட்டிப்பதுடன் பரந்தளவிலான ரசிகர்களின் ஈடுபாட்டை வளர்க்கும் அதேசமயம் அதன் செழுமையான பாரம்பரியத்தையும் கட்டிக்காக்கின்றோம். இலங்கையில் குதிரைப்பந்தயங்கள் நவீன தராதரங்களுக்கு ஏற்ப வளர்ச்சி கண்டு அதன் உண்மையான பாரம்பரியத்தை தொடர்ந்தும் கட்டிக்காக்கும் வகையில் அது வளர்ச்சி காண்பதை உறுதி செய்வதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.' 

இலங்கையில் உயர் மட்ட குதிரைப்பந்தய நிகழ்வுகள் எவ்வாறு ரசிகர்களால் அனுபவிக்கப்படுகின்றன என்பதையும் பாரம்பரிய வடிவத்திலிருந்து வளர்ச்சி காண்பதையும் குறித்த ஒரு இடத்தில் இடம்பெறும் நிலையிலும் அதனை டிஜிட்டல்ரீதியாக அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் மாற்றியமைப்பதிலும் தீர்க்கமான மாற்றத்தின் அடையாளத்தை BETSS.COM ஈடுபாடு எடுத்துக்காட்டுகின்றது. “Patron of Elite Sri Lankan Sports & Heritage” (இலங்கையின் உயர் மட்ட விளையாட்டுக்கள் மற்றும் பாரம்பரியத்தின் பாதுகாவலர்) என்ற தனது பாத்திரத்தை இக்கூட்டாண்மை மூலமாக மேலும் வலுப்படுத்தியுள்ள BETSS.COM பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து புத்தாக்கத்தை முன்னெடுத்து புகழ்பூத்த இப்பந்தயங்கள் எதிர்கால தலைமுறைகள் மத்தியில் தொடர்ந்தும் செழித்து வளர்வதை உறுதிப்படுத்துகின்றது.

Comments
0

MOST READ

காணொளி
வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

title