Header Logo

இந்தியா
திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஜய் சாமி தரிசனம்!

Apr 28, 2026 - 07:14 AM -

0

திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஜய் சாமி தரிசனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், இன்று காலை அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

விஜய் நேற்று இரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். அங்கிருந்து இன்று அதிகாலை சாலை மார்க்கமாகப் புறப்பட்டு திருச்செந்தூர் வந்தடைந்தார். அவருக்கு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். 

பட்டு வேட்டி மற்றும் சட்டையில் வந்திருந்த விஜய், மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதுடன், 'வெற்றி வேல்' வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர் கடற்கரைக்கும் சென்று விஜய் வழிபாடு செய்தார். 

விஜய் வருகையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். அவரைக் காண மக்கள் முண்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. 

கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கவும் திருச்செந்தூர் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மே 4-ம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஜய் சாமி தரிசனம் செய்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

title