Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (28.04.2026)!

Apr 28, 2026 - 09:20 AM

இன்றைய ராசிப்பலன் (28.04.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (28) கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று புதாதித்ய யோகம் பலனை கிடைக்கும் நாள். இன்று உத்தராயணம், வசந்த ருது. இன்று மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று மீனாட்சி திருக்கல்யாணம் பின் புஷ்ப பல்லக்கு பவனி. 

மேஷம் ராசி பலன் 

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய இறை பக்தி மற்றும் நீங்கள் செய்யக்கூடிய தியானம், ஹோமங்கள் உங்கள் மன அமைதி அதிகரிக்கும். இன்று நீங்கள் சமூகம் மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய நற்செயல்களுக்கு உங்கள் குடும்பம் பணியிடத்தில் பெருமையை தேடி தரும். இன்று உங்களுடைய முடிவு எடுக்கும் திறன் மூலம் பயனடைவீர்கள். இன்று மாலை நேரத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை குறிப்பாக, உங்களுக்குச் சாதாரண சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சியை தரும். இன்று அவர்களின் உயர்வு கண்டு பெருமை, மகிழ்ச்சி அடைவீர்கள். குரு, பெற்றோரின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய வருமான வழிகள் உருவாகும். இன்று நீங்கள் கோவிலுக்கு செல்லுதல், தர்ம காரியங்களில் ஈடுபடுதல் போன்ற விஷயத்தில் நாட்டம் கொள்வீர்கள். எந்தவொரு முடிவையும் நிதானத்துடன் எடுப்பது, உங்களுக்கு மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் வழிவகுக்கும். 

மிதுனம் ராசி பலன் 

மிதுனம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய இந்த ஒரு பிரச்சனை அல்லது வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம். இன்று எந்த ஒரு முடிவை கவனமாகவும் நிதானமாகவும் எடுப்பது நல்லது. அவசரத்தால் நீங்கள் நினைத்த விஷயத்தில் தடை அல்லது இழப்பை ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களுடைய பணி இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் உங்களுடைய செயல்பாடு மேம்பட வாய்ப்பு உண்டு. இன்று உங்களுக்கு பிடித்த கேளிக்கை விஷயங்களை நாட்டம் கொள்வீர்கள். 

கடகம் ராசி பலன் 

கடகம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு வர தாமதம் ஏற்படலாம். அதே சமயம் சில நம்பிக்கை தரும் நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று பணியிடத்தில் உயர் அதிகாரிகளை ஈர்ப்பதில் வெற்றி கிடைக்கலாம். சிலருக்கு கண் தொடர்பான பிரச்சனைகளை நிவாரணம் கிடைக்கும். உங்களுடைய முடிவு எடுக்கும் திறன் மேம்படும். உடல் நலனையும் மேம்படுத்தும் உணவுகளை எடுத்துக் கொள்ளவும். காரமான மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். இன்று உங்கள் வேலையில் கிடைக்கும் முடிவுகள் மகிழ்ச்சியை தரும். 

சிம்மம் ராசி பலன் 

சிம்மம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரிகள், தொழிலதிபர்கள் உங்களுடைய தொழிலில் சில புதிய மாற்றங்களை கொண்டு வருகிறீர்கள். இன்று பணியில் இருப்பவர்கள், சகஊழியர்கள் உங்களுக்கு பணவீதத்தில் உறுதுணையாக இருப்பார்கள். இன்று உங்களுடைய பொருளாதாரம் லாபத்தையும், மதிப்பையும் தரக்கூடியதாக இருக்கும். உங்கள் குடும்பத்தினரிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் சமூக நலப்பணி தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வசதியை மேம்படுத்தும் விதத்தில் உங்களுக்கு புதிய நிதி ஆதாயம் உருவாகும். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய உரிமைகள் பெறுவதில் சற்று போராட வேண்டியது இருக்கும். இருக்கும் கொடுமை மற்றும் பணியிடத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். ஆடம்பரம் அல்லது கபோகங்களுக்காக நீங்கள் பணத்தைச் செலவழித்து வீணடிக்கக்கூடும். இன்று நீங்கள் முழு மனதுடன் செய்யக்கூடிய வேலை நல்ல பலனைத் தரும். புதுவித உணவின் மீது நாட்டம் அதிகரிக்கும். இன்று உடல் நலனில் கவனம் செலுத்தவும். இன்று நேரங்களில் மேற்கொள்ளக்கூடிய பயணம் வெற்றியை தரும். காதல் வாழ்க்கையில் புதிய தொடக்கத்தை காண்பீர்கள். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று எப்படி கவனமாகச் சிந்தித்துச் செயல்பட்டாலும் கூட, இன்று உங்களுக்கு இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் உங்களுடைய திட்டமிடல் மற்றும் நிதானத்தை கைவிட வேண்டாம். முடிவுகள் எடுப்பதில் பொறுமை காக்கவும். முயற்சிகள் எடுப்பதே தெரிவிக்க வேண்டிய நாள். இன்று அலுவலகம் மற்றும் அரசு தொடர்பான விதிகளை கவனமாக பின்பற்றவும். மாலை நேரத்தில் சூழல் சாதகமாக மாறும். ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்கும். குறிப்பாக ரத்த சோகை, வாயு தொல்லை போன்றவை தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செயல்பாடுகளுக்கு மதிப்பு மற்றும் லாபம் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு உயர்பதவி அல்லது அதிகாரம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய துணிச்சல் மற்றும் வீரத்தை கண்டு எதிரிகள் பணிந்து போவார்கள். பிள்ளைகள் மீதான அன்பு அதிகரிக்கும். இன்று தன ஒரு சிறப்பாக இருக்கும் அதே சரியான விதத்தில் சேமிக்க முயற்சிக்கவும். இன்று நீங்கள் யோகா, தியானம் போன்ற விஷயத்தில் ஈடுபடுவது நன்மை தரும். பணியிடத்தில் உங்கள் ஊழியர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய குரு மற்றும் வேலை மீது விசுவாசம் அதிகரிக்கும். உங்களுடைய சிந்தனை மற்றும் ஆன்மீகம் மீதான நாட்டம் நிதானத்தை தரும். இன்று நீங்கள் இழந்த நிதியை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு எதிர்பாராத விதத்தில் சில சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் நம்பிய சில நபர்கள் உங்களுக்கு நிர்வாகம் செய்ய வாய்ப்பு உண்டு. எனவே எச்சரிக்கையாக செயல்படவும். வேலையில் நடைமுறைக்கு ஏற்ற முடிவுகளை எடுப்பது உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும். நிதிச் செலவுகள் அதிகமாக இருக்கலாம். 

மகரம் ராசி பலன் 

மகரம் ராசி அன்பர்களுக்கு இன்று உடல் வலிமை மற்றும் உற்சாகத்துடன் திகழ்வீர்கள். இன்று நீங்கள் தேவையற்ற செலவுகள் சந்திக்க வாய்ப்பு உண்டு. அதை சமாளிக்க சிரமம் ஏற்படும். இன்று உங்களுடைய பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலரின் கடின உழைப்பிற்காக பெரிய தொகையை வெகுமதியாக பெறுவார்கள். இன்று உங்களுக்கு சுப செலவுகளும், புகழும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. வண்டி, வாகனம் ஓட்டும் விஷயங்களை மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். 

கும்பம் ராசி பலன் 

கும்பம் ராசி அன்பர்களுக்கு இன்று எதிலும் கூடுதல் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகள் அல்லது அவசர வேலைகள் செய்வதை தவிர்க்கவும். அவசர செயல்பாடுகள் உங்களுக்கு இழப்பை தர வாய்ப்பு உண்டு. ஆடம்பரம், சுகபோகங்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். இன்று பொறுமையாகவும், கடின உழைப்பின் மீது கவனம் செலுத்துவது எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மைகளைப் பெற்றுத்தரும். உங்கள் குழந்தைகளின் வேலைவாய்ப்பு மற்றும் திருமணம் தொடர்பான சில நல்ல விஷயங்கள் தேடி வரும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். 

மீனம் ராசி பலன் 

மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய உடல்நலம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு செரிமானம் தொடர்பான சிரமங்கள் ஏற்படலாம். இன்று ஏதேனும் நிதி நிறுவனம் அல்லது தனி நபரிடம் கடன் வாங்கும் முயற்சியில் உள்ளவர்கள் கவனமாக செயல்படுவோம். முடிந்தவரை இன்று கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வேலை நல்லது உங்களுடைய வாழ்க்கை தொடர்பாக புதிய திட்டங்கள் வகுப்பதில் வெற்றிகரமாக செயல்படுவீர்கள். உங்களுடைய துணிச்சல் மற்றும் வீரம் வேலை தொடர்பாக தன்னம்பிக்கை தரக்கூடியதாக அமையும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278