Header Logo
Mogo Academy

வணிகம்
Siam City Cement (Lanka) Ltd, தென் மாகாணத்தின் பிரதம செயலாளருடன் உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் (MoU) கையெழுத்திட்டுள்ளது

Apr 28, 2026 - 10:11 AM -

0

Siam City Cement (Lanka) Ltd, தென் மாகாணத்தின் பிரதம செயலாளருடன் உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் (MoU) கையெழுத்திட்டுள்ளது
Mobitel inner

Siam City Cement (Lanka) Ltd) இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. துசித் குணவர்ணசூரிய அவர்களும், தென் மாகாண பிரதான செயலாளரான திரு. சந்திம C.முஹாந்திரம்கே அவர்களும் கௌரவ ஆளுநர் பேராசிரியர் சுசிரிபால மனவாடு அவர்களின் ஆதரவில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் போது பல முக்கிய அரசாங்க அதிகாரிகள் பிரசன்னமாயிருந்தனர். 

காலியில் உள்ள Radisson Blu ஹோட்டலில் நடைபெற்ற இந் நிகழ்வில், உள்ளூராட்சி அமைப்புகள், மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை (PRDA), கட்டிடத் துறை மற்றும் நீர்ப்பாசனத் துறை உள்ளிட்ட அரச நிறுவனங்களைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் கலந்துகொண்டனர். இது தென் மாகாணத்தில் தொழில்துறைத் தரங்களை உயர்த்துவதற்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு நவீன அறிவை வழங்குவதற்கும் வலுவான பொது-தனியார் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. 

மாகாணம் எங்கிலும் உள்ள பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்தும் நோக்கிலான இந்த முன்னெடுப்பு, வரும் மாதங்களில் மூன்று (03) தொடர்ச்சியான பயிற்சித் திட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும். இந்த அமர்வுகள் SLS 573, தரக் கட்டுப்பாடு, கட்டுமான முகாமைத்துவம், நீர்ப்புகா காப்பு, நீடித்த கொன்கிரீட் மற்றும் கொன்கிரீட் கலவை-வடிவமைப்பு சிறப்பாக்கம் போன்ற முக்கிய பகுதிகளை உள்ளடக்கும். 

நாம் அனைவரும் ஒன்றிணைந்து, எதிர்காலத்திற்காக அறிவார்ந்த வலிமையான கட்டுமானத் துறையை உருவாக்குவோம்.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara