Apr 28, 2026 - 10:17 AM -
0
இந்திய சினிமாவின் மூத்த நடிகர் பரத் கபூர், மாரடைப்பு காரணமாக தனது 80 ஆவது வயதில் மும்பையில் உள்ள சியோன் வைத்தியசாலையில் பிற்பகல் 3.30 மணியளவில் நேற்று (27) காலமானார்.
கடந்த மூன்று நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பரத் குமார் முன்னதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திரைப்பட இயக்குநர் அசோக் பண்டிட், பரத் கபூரின் மறைவுக்குத் தனது இரங்கலை வெளிப்படுத்தி, இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான அஞ்சலியை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர், "மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் பரத் கபூர் ஜியின் மறைவு செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தேன். எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் அவருடன் பணியாற்றிய சிறந்த நினைவுகள் உள்ளன. ஒரு சிறந்த மனிதர். ஓம் சாந்தி," என்று குறிப்பிட்டுள்ளார்.
