Header Logo

சினிமா
மே 8 ஆம் திகதி ரிலீஸாகும் ஜனநாயகன்?

Apr 28, 2026 - 10:56 AM -

0

மே 8 ஆம் திகதி ரிலீஸாகும் ஜனநாயகன்?

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் மே 8 ஆம் திகதி திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் தயாரிப்பு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. 

தவெக தலைவர் விஜய்யின் ஜனநயாகனுக்கு ஏற்பட்டிருந்த சென்சார் சிக்கல் தீர்ந்துவிட்டதாம். இருப்பினும் சென்சார் சான்று குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் மே 8 ஆம் திகதி படத்தை வெளியிட கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மே 8 ஆம் திகதி திருவிழாவை கொண்டாட தயாராகுங்கள் நண்பா, நண்பி என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். ஜனவரி மாதமே வர வேண்டிய படம் ஜனநாயகன். 

சரியான நேரத்தில் சென்சார் சான்று கிடைக்காததால் ஜனவரி 9 ஆம் திகதி ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. இந்நிலையில் ஏப்ரல் 3 ஆம் திகதி ஜனநாயகன் படம் நல்ல ப்ரிண்ட்டில் ஆன்லைனில் கசிந்துவிட்டது. இதற்கு காரணம் முக்கிய அரசியல் கட்சி தான் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்தார்கள். ஆனால் கசிந்த ப்ரிண்ட் படக்குழுவிடம் மட்டுமே இருக்கும் ப்ரிண்ட் ஆகும். இதை யாரும் வெளியிட வாய்ப்பே இல்லை என்று பேசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டார்கள். 

புதுப்படங்கள் திரைக்கு வந்தால் அதை உடனுக்குடன் ஆன்லைனில் கசியவிடும் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் ஜனநாயகனோ திரைக்கு வரும் முன்பே கசிந்துவிட்டது. இது படத்தின் வசூலை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கசிந்த படத்தை பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் விமர்சனம் எல்லாம் செய்தார்கள். தேர்தலுக்கு முன்பு வெளியிட முடிவு செய்து தான் பகவந்த் கேசரி ரீமேக்கில் நடித்தாராம் விஜய். ஆனால் தேர்தலுக்கு முன்பு படம் இப்படி ஆன்லைனில் கசியவே திட்டமிட்டு கசியவிட்டுவிட்டார்கள் என்றும் பேச்சு கிளம்பியது. 

ஜனநாயகன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் விஜய். ஏப்ரல் 23 ஆம் திகதி நடந்த தேர்தலில் அவர் போட்டியிட்டிருக்கிறார். மே மாதம் 4 ஆம் திகதி முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கும் நேரத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இன்று சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதை பார்த்த சமூக வலைதளவாசிகளோ இதுவும் பவன் கல்யாண் செய்த காரியம் தான் என்கிறார்கள். ஆந்திராவில் பிரச்சாரத்தின்போது பவன் கல்யாண் செய்த அனைத்தையும் தமிழகத்தில் செய்திருக்கிறார் விஜய் என்று விமர்சிக்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். 

தேர்தலுக்கு முன்பாக விஜய், சங்கீதாவின் விவாகரத்து வழக்கு வேறு விசாரணைக்கு வந்தது. அன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் காணொளி காட்சி மூலம் ஆஜராக விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 15 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி சசிகலா. இதற்கிடையே 250 கோடி ரூபா ஜீவனாசம் கேட்டார் சங்கீதா என்றும், அதற்கு 35 கோடி ரூபா தான் தருவேன் என்று விஜய் தரப்பில் கூறியதாகவும் தகவல் வெளியானது. அதே சமயம் மகன் ஜேசன், மகள் திவ்யா சாஷாவின் செலவுக்கு நான் பொறுப்பு என விஜய் தெரிவித்தார் என்றும் கூறப்பட்டது.

Comments
0

MOST READ

காணொளி
அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

title