Apr 28, 2026 - 11:40 AM -
0
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களினால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட 'நவ ஜனதா பெரமுன' கட்சியின் ஆதரவாளர்கள் குழுவினர் இன்று (28) காலை பெலவத்தை, அகுரேகொட பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றிருந்தனர்.
அங்கு அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட சிலரது மீது சாணத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் 'அத தெரண' (Ada Derana) கெமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதோடு, நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
