Apr 28, 2026 - 02:44 PM -
0
யாஸு (Yazu) வர்த்தக நாமத்தின் முதலாவது சர்வதேச விரிவாக்கத்தைக் குறிக்கும் வகையில், யாஸு அட் த பீச் (Yazu at the Beach) இன்று காலி ரெடிசன் ப்ளூ ரிசார்ட்டில் (Radisson Blu Resort Galle) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் மிகவும் பிரபலமான பான்-ஆசியன் (Pan-Asian) உணவு கலாச்சாரம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொடக்கமானது யாஸு ஹாஸ்பிடாலிட்டி பிரைவெட் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், நாட்டின் மிகவும் தனித்துவமான சுற்றுலா மற்றும் வாழ்க்கை முறை மையங்களில் ஒன்றாகத் தன்னைத் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் காலி நகருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
இலங்கையில் தனது கிளையைத் தொடங்குவது என்பது Yazu நிறுவனத்தின் ஒரு தீர்க்கமான வர்த்தக உத்தியாகும். ஒரு முற்போக்கான பான்-ஆசிய சப்பர் கிளப் (Pan-Asian supper club - நவீன உணவு மற்றும் இரவு நேர களிப்பாட்ட விடுதி) மற்றும் கைவினைத்துவ பான்-ஆசிய உணவுகளின் இல்லம் (House of Artisanal Pan-Asian Food) எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் இந்த வர்த்தக நாமம், ஈர்க்கக்கூடிய விருந்தோம்பல், வலுவான வடிவமைப்பு மொழி மற்றும் சமூகத் துடிப்புமிக்க விருந்தினர் அனுபவம் ஆகியவற்றைக் கொண்டே தனது தனித்துவத்தை உருவாக்கியுள்ளது. காலியின் கடற்கரை அழகு, பாரம்பரியச் சூழல், ஆடம்பர விருந்தோம்பல் வளர்ச்சி மற்றும் தென்னிலங்கை சுற்றுலா வலயத்தில் உள்ள முக்கியத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, காலி நகரம் இதற்கு மிகவும் பொருத்தமான இடமாக அமைகிறது.
இலங்கையின் சுற்றுலா வரலாற்றில் காலி நகரம் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. காலியின் பழைய நகரமும், அதன் கோட்டைப் பகுதிகளும் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாகும். இது ஐரோப்பிய நகரத் திட்டமிடல் மற்றும் தெற்காசியக் கட்டடக்கலை மரபுகளின் தனித்துவமான கலவைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலாத்துறையும் காலியையும் தெற்குக் கடற்கரையையும் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக முன்னிலைப்படுத்துகிறது; இதற்கு கடற்கரை, பாரம்பரியம் மற்றும் துறைமுகம் சார்ந்த ஈர்ப்பு ஆகியவை பெரும் பலமாக உள்ளன. இந்த கலவையானது, சர்வதேச அங்கீகாரம் மற்றும் உள்ளூர் முக்கியத்துவம் ஆகிய இரண்டையும் எதிர்பார்க்கும் விருந்தோம்பல் வர்த்தக நாமங்களுக்கு ஒரு அசாதாரண மூலோபாய மதிப்பை வழங்குகிறது.
இந்த அறிமுகம் குறித்து Yazu விருந்தோம்பல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரன்பீர் சிங் நாக்பால் கூறுகையில், “Yazu-வை முதன்முறையாக இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்வது எமது வர்த்தக நாமத்தின் ஒரு தீர்க்கமான படியாகும். எமது சர்வதேச அறிமுகமானது ஏற்கனவே தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தையும் ஆற்றலையும் கொண்டுள்ள ஒரு இடத்தில் அமைய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்; காலி நகரம் சரியாக அதனை எமக்கு வழங்கியது. இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது, கலாசார ரீதியாக செழுமையானது மற்றும் பிராந்தியத்தின் உயர்தர சுற்றுலா மற்றும் வாழ்க்கை முறை சூழலில் பெருகிய முறையில் முக்கியத்துவம் வாய்ந்தது. எங்களைப் பொறுத்தவரை, இந்தத் திறப்பு விழா என்பது ஒரு புதிய இடத்தை அடைவது மட்டுமல்ல. அனுபவம், சூழல் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை உயர்மட்டத்தில் புரிந்து கொள்ளும் ஒரு சந்தையில் லுயணர வர்த்தக நாமத்தை நிலைநிறுத்துவதாகும்.” எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பில், சினோ லங்கா ஹோல்டிங்ஸ் பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பொப் குந்தன்மால் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின், குறிப்பாக தென்னிலங்கையின் மிக முக்கியமான விருந்தோம்பல் தளங்களில் ஒன்றாக காலி மாறியுள்ளது. இது சர்வதேச ஈர்ப்பு மற்றும் வலுவான கண்ணோட்டத்தையும் கொண்ட வர்த்தக நாமங்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளது. காலி ரெடிசன் ப்ளூ ரிசார்ட்டிற்கு Yazu-வை வரவேற்பது, எமது வாழ்க்கை முறை வழங்கல்களை வலுப்படுத்துவதுடன், சமகாலத்திற்கு ஏற்ற, எளிதில் அடையாளம் காணக்கூடிய மற்றும் இந்த இடத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அமைந்த ஒரு புதிய கருத்தாக்கத்தையும் சேர்க்கிறது.” எனத் தெரிவித்தார்.
Yazu ஹாஸ்பிடாலிட்டி பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குதாரர் அதுல் சோப்ரா கூறுகையில், “இலங்கை என்பது உயர்தர விருந்தோம்பல் துறையில் வளர்ந்து வரும் நம்பிக்கையைக் கொண்ட ஒரு சந்தையாகும். சுற்றுலாப் பயணிகள், கலைநயம் மிக்க வடிவமைப்புகளைக் கொண்ட இடங்கள் மற்றும் ஒரு தனித்துவமான சுற்றுலாத் தலம் என்ற தெளிவான உணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்துக் காட்டுவதால் காலி நகரம் தனித்து நிற்கிறது. Yazu ஒரு உணவகமாக மட்டும் இங்கு திறக்கப்படாமல், ஒரு முழுமையான வர்த்தக நாமமாக இங்கு கால்பதிப்பதை உறுதி செய்வதே எமது முன்னுரிமையாக இருந்தது. அதுவே இந்தத் தொடக்கத்தை எங்களுக்கு முக்கியமானதாக மாற்றுகிறது.” என குறிப்பிட்டார்.
தனது முதலாவது சர்வதேசக் கிளையைக் காலியில் திறந்ததன் மூலம், Yazu இலங்கைக்குள் வெறும் ஒரு புதிய உணவகமாக மட்டுமல்லாமல், நாட்டின் மிக முக்கியமான கடற்கரை சுற்றுலாத் தலங்களில் ஒன்றில் வர்த்தக நாமத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நவீன வாழ்க்கைமுறைத் திட்டமாகவும் பிரவேசிக்கின்றது. காலியைப் பொறுத்தமட்டில் Yazu நிறுவனத்தின் அறிமுகம் அதன் அந்தஸ்து மற்றும் ஈர்ப்பில் தொடர்ந்து விரிவடைந்து வரும் விருந்தோம்பல் துறைக்கு, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு பெயரையும் சேர்க்கின்றது.
முன்பதிவுகள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு, தயவுசெய்து +94 70 748 6486 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும் அல்லது இன்ஸ்டாகிராமில் Yazu at the Beach பக்கத்தைப் பார்வையிடவும். (https://www.instagram.com/yazugalle/).
