Apr 28, 2026 - 03:13 PM -
0
இருசக்கர வாகன டயர் சந்தையில் தனது முன்னணித் தலைமைத்துவத்தை சியெட் களனி ஹோல்டிங்ஸ் (CEAT Kelani Holdings) மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. நவீன பயண தேவைகளுக்கேற்ற உயர்தர செயல்திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்ட GRIPP X5 மற்றும் ZOOM X5 என்ற புதிய உயர்தர மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் டயர் தொடர்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக மைலேஜ், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் சிறந்த ஓட்ட அனுபவம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த X5 தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற பயணிகளிடையே, நீடித்த பயன்பாடு, கட்டுப்பாடு மற்றும் நம்பிக்கையூட்டும் ஹேண்ட்லிங் ஆகியவற்றுடன், கவர்ச்சிகரமான உயர்தர தோற்றம் கொண்ட டயர்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தீர்வாக இந்த புதிய தயாரிப்புகள் அறிமுகமாகியுள்ளன. இலங்கையின்வீதி அமைப்புகள் மற்றும் வானிலை நிலைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட GRIPP X5 மற்றும் ZOOM X5 டயர்கள், அன்றாட அலுவலகப் பயணங்களிலும் ஓய்வுநேர சவாரிகளிலும் நிலைத்தன்மை, சிறந்த பிடிப்பு மற்றும் திறமையான பிரேக்கிங் செயல்பாடு ஆகியவற்றின் சமநிலையை வழங்குகின்றன. உலர் மற்றும் ஈரமான வீதிகளிலும் நம்பகமான செயல்திறனை வழங்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய தயாரிப்புகள் குறித்து சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. ஷமல் குணவர்தன கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் இருசக்கர வாகன சந்தையில் ஓட்டுநர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து மாறி வரும் நிலையில், அதனை தெளிவாக புரிந்து கொண்டு உருவாக்கப்பட்டவையே இந்த புதிய டயர்கள். அதிக செயல்திறன், பாதுகாப்பு மற்றும் உயர்தர தோற்றம் ஆகியவற்றிற்கான தேவை உயர்ந்து வரும் இக்காலகட்டத்தில், உள்நாட்டு வீதி நிலைகளுக்கும் வாடிக்கையாளர் தேவைகளுக்கும் ஏற்ற உலகத் தர வடிவமைப்பு மற்றும் பொறியியல் தீர்வுகளை இவை வழங்குகின்றன,' என தெரிவித்தார்.
முன்சக்கரத்திற்கு பொருத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ZOOM X5 டயர், நிலைத்தன்மை மற்றும் துல்லியமான கையாளுதலை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. நேர்கோட்டில் வாகன கட்டுப்பாட்டை அதிகரிப்பதோடு, நீர் சிதறலைச் சிறப்பாக நிர்வகிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரமான சாலைகளில் சிறந்த பிடிப்பும் கட்டுப்பாடும் கிடைப்பதுடன், போக்குவரத்து நெரிசல்களில் சுலபமாக நகரவும், திருப்பங்களில் நம்பிக்கையுடன் சவாரி செய்யவும் ஓட்டுநர்களுக்கு கூடுதல் உறுதியை வழங்குகிறது. பின்சக்கர பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட GRIPP X5 டயர், சுமை நிலையிலும் சிறந்த பிடிப்பு, கட்டுப்பாடு மற்றும் நீடித்த செயல்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. நேர்கோட்டில் வாகனம் நகரும் போது அதிகப்படியான பிடிப்பை வழங்குவதுடன், வளைவுகளில் சாய்ந்து ஓடும் போது மேலான கட்டுப்பாட்டையும் இது உறுதி செய்கிறது.
ஈரமான வீதிகளில் மேம்பட்ட பிடிப்பும் பாதுகாப்பும், உலர் வீதிகளில் வலுவான பிடிப்பும் கிடைக்கும் வகையில் GRIPP X5 உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வசதிகள் அனைத்தும் இணைந்து அதிக மைலேஜ், வேகத்தில் நிலையான ஹேண்ட்லிங் மற்றும் நம்பகமான பிரேக்கிங் செயல்திறனை வழங்குவதால், தினசரி பயணங்களுக்கும் நீண்ட தூர சவாரிகளுக்கும் இது சிறந்ததெரிவாக அமைகிறது.
செயல்திறனைத் தாண்டி, இந்த இரண்டு டயர் தொடர்களும் மேம்படுத்தப்பட்ட sidewall மற்றும் tread வடிவமைப்பு அழகியலை கொண்டுள்ளன. இதன் மூலம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு தனித்துவமான, உயர்தரமான தோற்றம் கிடைக்கிறது.
இந்த உயர்தர டயர் தொடர், இலங்கையில் அதிகம் பயன்படுத்தப்படும் பல இருசக்கர வாகனங்களை உள்ளடக்கும் வகையில் நான்கு முக்கிய அளவுகளில் கிடைக்கிறது. GRIPP X5 டயர் 3.00–17, 100/90–17 மற்றும் 90/100–10 என்ற அளவுகளில் அறிமுகமாகியுள்ளது. அதே நேரத்தில், ZOOM X5 தொடர் 2.75–17 அளவில் கிடைக்கிறது.
GRIPP X5 மற்றும் ZOOM X5 டயர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், செயல்திறன், பாதுகாப்பு, நீடித்த பயன்பாடு மற்றும் உயர்தர தோற்றம் ஆகிய அனைத்தையும் ஒரே தயாரிப்பில் இணைக்கும் தீர்வுடன், இருசக்கர வாகன பிரிவில்சியெட் களனி நிறுவனம் தனது முன்னணித் தலைமையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
பிராண்ட் ஃபினான்ஸினால் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க டயர் வர்த்தக நாமமாகவும், 2025 ஆம் ஆண்டில் LMD ஆல் இலங்கையில் மிகவும் விரும்பப்படும் டயர் வர்த்தக நாமமாகவும் தரவரிசைப் படுத்தப்பட்ட சியெட் ஆனது, இலங்கையில் அதிகம் விற்பனையாகும் டயர் வர்த்தகநாமமாகும், ஆண்டுதோறும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான சியெட் டயர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சியெட் களனியானது சந்தைத் தலைமைத்துவத்தை அடைவதற்கு தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் திறன் ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடுகள் துணைபுரிகின்றன. நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் பயணிகள் கார்கள், வேன்கள், SUVகள்,வர்த்தக வாகனங்கள் (பயாஸ்-பிளை மற்றும் ரேடியல்), மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் விவசாய வாகனங்களுக்கான நியூமேடிக் டயர்கள் அடங்கும்.
சியெட் களனியானது இலங்கையின் வாகன டயர் தேவைகளில் பாதியை பூர்த்தி செய்வதைத் தவிர, அதன் உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தை 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த கூட்டு முயற்சியானது இலங்கையில் ரூ. 8.5 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்ததற்கு முன்பு, அடுத்த 18 மாதங்களுக்கு மேலும் ரூ. 4.5 பில்லியனை முதலீடு செய்தது, இதன் மூலம் நிறுவனமானது உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாளராகவும், நாட்டின் போக்குவரத்துத் துறைக்கு நம்பகமான பங்காளியாகவும் அதன் நிலையை வலுப்படுத்தியுள்ளது.
