Header Logo

செய்திகள்
தொடர் சங்கிலி பறிப்பு கொள்ளையன் ஹெரோயினுடன் கைது

Apr 29, 2026 - 12:16 PM -

0

தொடர் சங்கிலி பறிப்பு கொள்ளையன் ஹெரோயினுடன் கைது

பல தங்கச் சங்கிலி பறிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 5 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 44 வயதான இந்தச் சந்தேகநபர் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தெஹிவளை, மிரிஹான, கடுவலை, ஹோமாகம, கஹதுடுவ, மொரட்டுவை, வெல்லம்பிட்டிய, நாரஹேன்பிட்டிய, கிருலப்பனை, குருந்துவத்தை மற்றும் முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் பெண்களின் தங்கச் சங்கிலிகளைப் பறித்த பல சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனத் தேடப்பட்டு வந்த நிலையிலேயே இவர் பிடிபட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும், கொள்ளையடிக்கப்பட்ட 5 தங்கச் சங்கிலிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title