Apr 29, 2026 - 01:21 PM -
0
இலங்கையின் கிழக்கு கரையோரத்தின் ஹோட்டல்களின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து, கிழக்கு கரையோர ஹோட்டல் சம்மேளனத்தின் புதிய தலைவராக Sun Siyam பாசிகுடாவின் பொது முகாமையாளர் அர்ஷத் ரிபாயை தெரிவு செய்துள்ளனர். இந்த நிகழ்வு 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி நடைபெற்றது. இந்த சந்திப்பு ஒரு நிர்வாக மைல்கல் என்பதைத் தாண்டி, கிழக்குக் கடற்கரை ஹோட்டல் உரிமையாளர்களிடையே வளர்ந்து வரும் ஒரு திடமான நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் நோக்கத்தின் வெளிப்பாடாகவும் அமைந்திருந்தது. அமைதியான வளைகுடா, நிதானமான சூழல் மற்றும் அமைதியான இயற்கை எழில் ஆகியவற்றைக் கொண்ட பாசிக்குடா, இனி இலங்கையின் ஏனைய சுற்றுலாத் தலங்களின் நிழலில் இருந்து அப்பாற்பட்டு, உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்க்கத் தயாராக உள்ளது என்பதை இது உணர்த்துகின்றது.
இலங்கையின் கிழக்கு கரையோர ஹோட்டல் நிர்வாகிகளை ஒரு பொதுவான பகிரப்பட்ட நோக்கான: பாசிக்குடாவின் நற்பெயரை மேம்படுத்துதல், அங்கத்துவ விடுதிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்தியத்திற்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்கக்கூடிய ஒரு தொழில்சார் சமூகத்தைக் கட்டியெழுப்புதல் போன்றவற்றின் பிரகாரம் கிழக்கு கரையோர ஹோட்டல் சம்மேளனம் ஒன்றிணைக்கிறது. புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகக் குழுவில், தொடர்ந்தும் உப தலைவராக நிரஞ்சன் செயலாற்றுவதுடன், செயலாளராக ருவன் மற்றும் பொருளாளராக பிரியங்க மற்றும் உப பொருளாளராக ஹாபி ஆகியோர் செயலாற்றுவர்.
தமது நியமனத்தைத் தொடர்ந்து அர்ஷத் ரிபாய் உரையாற்றுகையில், ஒரு தனித்த ஹோட்டலுக்கு அப்பாலான தொலைநோக்குத் திட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரின் பிரகாரம், இலக்கு தெளிவானதாக அமைந்துள்ளது. இலங்கையிலும், பிராந்தியத்தில் பரந்தளவு மட்டத்திலும் பாசிகுடாவை முன்னணி சுற்றுலா அமைவிடமாக திகழச் செய்வது அதுவாகும். இந்தப் பயணத்தில் நிலைபேறாண்மை முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதுடன், கழிவுகளை குறைப்பதுடன், உள்நாட்டு சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வலுவை பாதுகாப்பது மற்றும் பிரதேசத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கரையோரத்தை பேணிப் பாதுகாப்பது பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரின் தொனி, வழிகாட்டல்களை வழங்குவதை விட, ஒருமித்த செயற்பாட்டை கோருவதாக அமைந்திருந்தது.
“நாம் இணைந்திருந்தால், வலிமையாக இருப்போம். பாசிகுடா சிறந்த இயற்கை அழகு, தகதகப்பான விருந்தோம்பல் மற்றும் சிறந்த வாய்ப்புகளையும் கொண்டுள்ள பகுதியாகும். நாம் ஒன்றிணைந்து இதன் வனப்பை மேம்படுத்த வேண்டும் என்பதுடன், உயர் தரமான விருந்தினர்களை கவர்ந்திழுப்பதுடன், விஜயம் செய்து மீளத் திரும்பும் ஒவ்வொரு விருந்தினரும், மீண்டும் பாசிகுடாவுக்கு விஜயம் செய்யும் அனுபவத்தைப் பெற்றுச் செல்வதை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பொறுப்பு வாய்ந்த சுற்றுலா என்பது சரியான விடயத்தை மேற்கொள்வது மட்டுமல்ல. எமது தொழிற்துறையின் எதிர்காலம் அதுவாகும்.” என்றார்.
இந்த முயற்சி மிகவும் பொருத்தமான காலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறையானது 2026 ஆம் ஆண்டில் புதிய நம்பிக்கையுடன் கால்பதித்துள்ளது. நாட்டின் நன்கு அறியப்பட்ட தெற்கு மற்றும் மேற்கு கடற்கரை பிரதேசங்களுக்கு நிகராக, நீண்டகாலமாக அமைதி காத்து வந்த கிழக்குக் கடற்கரையானது, தற்போது வழமையான சுற்றுலாத் தலங்களுக்கு அப்பாற்பட்ட மாற்றத்தை எதிர்பார்க்கும் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. பாசிகுடாவின் அமைதியான ஆழமற்ற வளைகுடா, நிதானமான சூழல் மற்றும் இயற்கை எழில் என்பன அதனை எப்போதும் ஏனைய இடங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. தற்போது பலமான மற்றும் குரல் கொடுக்கக்கூடிய ஒரு தொழில்சார் சங்கம் அங்கு உருவாகியுள்ளமை, பாசிகுடா இதுகாலவரை அமைதியாக வழங்கி வந்த தனித்துவமான விடயங்களுக்கு ஒரு கூட்டுப்பலத்தை வழங்கியுள்ளது.
இந்த சந்திப்பை முன்னெடுக்கப்பட்ட Sun Siyam பாசிகுடா, மாலைதீவுகளைச் சேர்ந்த விருந்தோம்பல் குழுமமான Sun Siyam’இன் Privé தெரிவில் ஒன்றாக அமைந்துள்ளது. இலங்கையின் வடகிழக்குக் கடற்கரையில் எவரும் தீண்டாத ஒரு இயற்கைப் பகுதியில் அமைந்துள்ள 34 வில்லாக்களைக் கொண்ட இந்த Boutique Resort, கிழக்குக் கடற்கரையின் மிகவும் நெருக்கமான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தங்குமிடமாகும். கண்கவர் பவளப்பாறைகளுக்கு மிக அருகிலேயே கடல் மற்றும் பூங்காவை நோக்கிய Pavilionகள் அமைந்துள்ளன. அத்துடன், கடற்கரைக்கு அப்பால் சென்று புதிய அனுபவங்களைப் பெற விரும்பும் விருந்தினர்களுக்காக, பிரம்மாண்டமான தேசிய பூங்காக்கள், UNESCO உலக பாரம்பரிய ஸ்தலங்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு இலகுவாகச் செல்லும் வசதிகளும் இங்கு உள்ளன. இந்த ரிசோர்ட்டிற்குள், ஆயுர்வேத முறையிலான ஸ்பா, 30 மீட்டர் நீளமுள்ள பல அடுக்கு Infinity நீச்சல் தடாகம், Tea House மற்றும் ஆறு பிரத்தியேக உணவு மற்றும் பான நிலையங்கள் உள்ளடங்கியுள்ளன. 34 வில்லாக்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய Butler சேவையுடன், Sun Siyam பாசிகுடா தரமான வசதிகளுடன் கூடிய உண்மையான தனிமையை வழங்குகிறது. இக்கூட்டம் இங்கு நடைபெறுவது மிகவும் பொருத்தமானதாகும். இது கிழக்குக் கடற்கரை சுற்றுலாத் துறையில் இந்த ரிசோர்ட்டிற்கு உள்ள நற்பெயரையும், பாசிகுடா பிராந்தியத்தின் மீது அது கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் பறைசாற்றுகின்றது.
Sun Siyam பாசிகுடா பற்றிய மேலதிக தகவல்களுக்கு, பார்வையிடுங்கள் www.sunsiyam.com/sun-siyam- pasikudah அல்லது அழையுங்கள் +94 65 205 5555.
