Header Logo
Mogo Academy

வணிகம்
Slack இனி உங்கள் குழுவினருக்கான தளம் மட்டுமல்ல; உங்களது AI ஏஜெண்டுகளுக்கான (AI Agents) மையமுமாகும்

Apr 29, 2026 - 01:27 PM -

0

Slack இனி உங்கள் குழுவினருக்கான தளம் மட்டுமல்ல; உங்களது AI ஏஜெண்டுகளுக்கான (AI Agents) மையமுமாகும்
Mobitel inner

நிறுவனங்கள் தங்களது செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜெண்டுகளை நேரடியாக Slack தளத்திலேயே உருவாக்கி, நிலைநிறுத்தி, நிர்வகிப்பதற்கான புதிய வசதிகளை Slack அறிமுகப்படுத்தியுள்ளது. இது வணிக நிறுவனங்கள் தங்களது அன்றாட பணிப்பாய்வுகளில் (flow of work) செயற்கை நுண்ணறிவை மிக எளிதாக ஒருங்கிணைக்க வழிவகை செய்கிறது. 

இலங்கை உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அத்தொழில்நுட்பக் கருவிகள் நடைமுறைக்குச் சாத்தியமானதாகவும், பாதுகாப்பானதாகவும், ஊழியர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் தளங்களுடன் இணைக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. Slack-இன் இந்த அண்மைய மேம்படுத்தல்கள், செயலிகள் (Apps), தானியக்கச் செயல்பாடுகள் (Automations) மற்றும் AI ஏஜெண்டுகளை ஒரே கூட்டுப்பணித் தளத்தின் (Collaborative workspace) கீழ் கொண்டு வருவதன் மூலம் இச்சவாலுக்குத் தீர்வை வழங்குகின்றன. 

இந்த புதிய வசதிகள் மூலம், குழுக்கள் Slackbot ஊடாக பணிகளை ஒருங்கிணைக்கவும், AI ஏஜெண்டுகளை விரைவாக நிலைநிறுத்தவும் முடியும். அத்துடன், Salesforce நிறுவனத்தின் AgentExchange மற்றும் Slack இன் ஒருகிணைந்த Agent Browser மூலம் நம்பகமான ஏஜெண்டுகளை நிர்வகிக்கவும், Block Kit மூலம் செழுமையான AI அனுபவங்களை உருவாக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது. 

விரைவில் அறிமுகமாகவுள்ள Slackbot MCP Client மற்றும் AgentExchange ஆகியவற்றின் உதவியுடன், ஊழியர்கள் ஒரு கோரிக்கையை Slack இல் முன்வைக்கும்போது, அது தானாகவே அதற்குரிய நிபுணத்துவம் வாய்ந்த AI ஏஜெண்டிடம் ஒப்படைக்கப்படும். இதன் மூலம் பல கட்டங்களைக் கொண்ட பணிகளை (multi-step workflows) ஒரே உரையாடல் சாளரத்திற்குள்ளேயே (Conversation) பூர்த்தி செய்து முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். 

Vercel மற்றும் Lovable போன்ற தளங்களில் இருந்து Add to Slack தெரிவுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் உருவாக்கக் கருவிகளை (Developer tools) அறிமுகப்படுத்துவதன் மூலம், தொழில்நுட்ப அறிவுடையோர் மட்டுமன்றி ஏனையோரும் எவ்விதத் தடங்கலுமின்றி AI ஏஜெண்டுகளை Slack தளத்திற்குள் கொண்டு வர முடியும். 

செயற்கை நுண்ணறிவை பரீட்சார்த்த நிலையில் இருந்து உண்மையான பணிச்சூழலுக்குக் கொண்டு செல்ல விரும்பும் வணிகங்களுக்கு, Slack-இன் நிறுவனத் தரம் வாய்ந்த பாதுகாப்பு (Enterprise-grade security), அனுமதிக் கட்டுப்பாடுகள் (Permission controls) மற்றும் கணாய்வுப் பதிவுகள் (Audit logging) ஆகியவை பாதுகாப்பான மற்றும் விரிவான பயன்பாட்டிற்கு உறுதுணையாக அமையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara