Header Logo

வடக்கு
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

Apr 29, 2026 - 05:37 PM -

0

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள் இன்று (29) நடைபெற்றது. 

இது குறித்து சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா கருத்து தெரிவிக்கையில், 

இன்றைய அகழ்வப் பணியின் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு இலக்கங்களான 211 மற்றும் 220 ஆகிய இலக்கங்களை கொண்ட எலும்புக்கூடுகள் பகுதியளவிலான எலும்பு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கண்காணிப்புக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இதேவேளை ஏற்கனவே வடமேற்கு பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சில என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் எத்தனை எலும்பு தொகுதிகள் காணப்படுகின்றன என்பது சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே தெரியவரும். 

ஏற்கனவே கொடுக்கப்பட்ட தொல்லியல் ஆய்வறிக்கையின்படி இந்த அகழ்வு 1.5 அடியிலிருந்து 2 அடி ஆழமான நிலத்தில் தான் இதுவரை காலமும் என்பது அகழ்ந்து எடுக்கப்பட்டன. ஆகவே அகழ்வு பணிகளின் ஆழமானது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளின் போதே தீர்மானிக்கப்படும். 

ஸ்கான் பரிசோதனை செய்யப்படும் போதும் தெரிவு செய்யப்பட்ட பகுதியை அந்த ஸ்கேனுக்கு உட்படுத்தப்பட்டது. பரிசோதனை உட்படுத்தப்பட்ட பகுதிகளில் அகழ் பணிகளை முன்னெடுப்பதோடு, ஏனைய இடங்களில் என்பு தொகுதிகள் இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்கு மீண்டும் ஒரு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட வேண்டும். 

இன்றைய அகழ்வு பணிகளின் போது ஓர் இடத்தில் சந்தேகத்திற்கு உரிய முறையில் கரியநிற மண் காணப்பட்டது. அதனால் , அதனை அரித்தட்டு மூலம் அரித்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

 
அத்துடன் இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறிய வலை போன்ற பொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்

--

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title