Header Logo
SLIC
பல்சுவை
ஆகம விதிகளை மீறி கோவிலுக்குள் சென்றாரா விஜய்?

Apr 29, 2026 - 05:57 PM

ஆகம விதிகளை மீறி கோவிலுக்குள் சென்றாரா விஜய்?
Mobitel Inner 1278
EDEX Inner

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆகம விதிகளை மீறி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி, இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வருகிற மே 4 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளன. 

இதனிடையே நடிகர் விஜய் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி நள்ளிரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்து. அங்கிருந்து காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு கிளம்பி சென்றார். விஜய்க்கு வழிநெடுகிலும் ரசிகர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதையடுத்து நள்ளிரவில் திருச்செந்தூர் சென்ற விஜய், அங்கு அதிகாலை நடைபெற்ற விஷ்வரூப பூஜையில் கலந்துகொண்டு, கடவுளை தரிசித்தார். விஜய்க்கு கோவில் நிர்வாகம் சார்பில், வேல் பரிசாக வழங்கப்பட்டது. அந்த வேலோடு கோவில் அருகே உள்ள கடற்கரைக்கு சென்று வந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். விஜய்யின் வருகையால் திருச்செந்தூர் ஸ்தம்பித்துப் போனது. அதிகாலையில் அதிகளவிலான பக்தர்கள் கோவிலில் கூடி இருந்தனர். 

கிறிஸ்துவரான விஜய், விதிகளை மீறி திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார் என பல வலதுசாரி ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர். உண்மையில் விஜய் செய்தது விதிமீறலா என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்ப்போம். 

தமிழ்நாடு கோவில் நுழைவு அங்கீகார சட்டம் 1947-ன் படி, இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. 2024 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், ஆகம கோவில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள், கோவிலின் வெளிப்புர பகுதிகளை பார்வையிடவும், கொடிமரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், தீர்ப்பு வழங்கி உள்ளது. 

அதன்படி பார்த்தால் திருச்செந்தூர் முருகன் கோவில், ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட ஒரு கோவிலாகும். ஆனால் மாற்று மதத்தினராக இருந்தாலும் தெய்வத்தின் மீது நம்பிக்கை உள்ளதாகவும், இந்து மத வழிமுறைகளை பின்பற்றுவதாகவும் எழுத்துப் பூர்வமாக தெரிவித்தால், அவர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

அதனைப் பின்பற்றி நடிகர் விஜய், எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்த பின்னரே, அவருக்கு திருச்செந்தூர் கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டதாக கூறும் அவரின் ஆதரவாளர்கள். விஜய் கோவிலுக்குள் செல்லும் முன் கையெழுத்திடும் புகைப்படங்களையும் வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இதன்மூலம் விஜய் ஆகம விதிகளை மீறி கோவிலுக்குள் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள் தவெக-வின் விர்ச்சுவல் வாரியர்ஸ்.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278