Header Logo
SLIC
செய்திகள்
நேபாளத்தில் திடீரென சீறிப்பாய்ந்த வௌ்ளம் - பலி எண்ணிக்கை உயர்வு

Aug 26, 2026 - 04:51 PM

நேபாளத்தில் திடீரென சீறிப்பாய்ந்த வௌ்ளம் - பலி எண்ணிக்கை உயர்வு
Mobitel Inner 1278
EDEX Inner

நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த அனர்த்தம் காரணமாக 384 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களில் 291 வௌிநாட்டவர்களும் 93 நேபாள மக்களும் அடங்குகின்றனர். 

திரிசூலி ஆறு திடீரென அதிக அளவிலான நீரினால் பெருக்கெடுத்து ஓடுவதை வௌியாகியுள்ள சில காணொளிகள் காட்டுகின்றன. 

ஆற்றின் நீரின் அளவும் வேகமும் கணிசமாக அதிகரித்துள்ளதோடு, அது வண்டல் மண்ணினாலும் நிரம்பியுள்ளது போல் அந்த காணொளிகளின் ஊடாக தெரியவந்துள்ளது. 

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

எனினும், நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகொப்டர்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேபாளத்துக்கு புனிதப் பயணம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் ரசுவா மாவட்டத்தின் திமுர் பகுதியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இவர்கள் சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278