Aug 26, 2026 - 05:26 PM





யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2 ஆம் வளாகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் அக்டோபர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அந்த வளாகங்கள் மூடப்பட்டிருக்கும் என வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அப்பகுதியில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.























