Header Logo

இந்தியா
15 வயது சிறுமியின் கர்ப்பம் - இந்திய மத்திய அரசை சாடிய உச்ச நீதிமன்றம்!

Apr 30, 2026 - 01:48 PM -

0

15 வயது சிறுமியின் கர்ப்பம் - இந்திய மத்திய அரசை சாடிய உச்ச நீதிமன்றம்!

பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் 31 வாரக் கருவைக் கலைக்க வழங்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக இந்திய மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது. 

 

பெண்கள் தங்கள் உடல் சார்ந்த முடிவுகளை எடுக்கும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், நடைமுறையிலுள்ள பழைய சட்டங்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.


பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் கருக்கலைப்பு செய்வதற்குத் தற்போது சட்டரீதியாக உள்ள 24 வார கால எல்லை பொருந்தாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


குடிமக்களின், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் முடிவுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என்றும், அதனை எதிர்க்க அரசுக்கு உரிமை இல்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.


"இந்தச் சிறுமி அனுபவிக்கும் துன்பத்திற்கு எதனாலும் ஈடுசெய்ய முடியாது. ஒவ்வொரு நிமிடமும் அவர் அந்த வேதனையைச் சுமக்கிறார். பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் கருவுக்கும் இடையிலான போராட்டத்தில், அக்குழந்தை கண்ணியமாக வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்" என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.


31 வாரங்கள் என்பது கருக்கலைப்பு செய்ய மிகவும் தாமதமான காலம் என்றும், இச்சமயத்தில் குழந்தை உயிருடன் பிறக்க வாய்ப்புள்ள போதிலும் அது கடுமையான உடல் ஊனங்களுடன் பிறக்கக்கூடும் என்றும் அரசுத் தரப்பு சட்டத்தரணி வாதிட்டார். இது தாயின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால், குழந்தையைப் பிரசவித்து அதனைத் தத்தெடுக்கக் கொடுப்பதே சிறந்தது என்பது அரசின் கருத்தாக இருந்தது.


இக்குழந்தையைப் பிரசவிக்குமாறு சிறுமியை வற்புறுத்துவது, அவரது அடிப்படை உரிமைகளையும் கண்ணியமாக வாழ்வதற்கான உரிமையையும் மீறும் செயலாகும் என முன்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குறிப்பிட்டிருந்தார். அந்தச் சிறுமி ஏற்கனவே இருமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளதோடு, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதையும் நீதிமன்றம் அவதானித்துள்ளது.


இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம், பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இந்தியாவின் கருக்கலைப்புச் சட்டம் இனிவரும் காலங்களில் அதிக நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் மனிதாபிமானமிக்கதாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title