Apr 30, 2026 - 02:28 PM -
0
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவு மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்றமை தொடர்பான விசாரணைகளுக்காக, திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளரான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
திறைசேரியினால் மேற்கொள்ளப்படவிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவொன்று, உரிய தரப்புக்குச் செல்லாமல் சந்தேகத்திற்கிடமான முறையில் வேறொரு மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்றுள்ளது.
இதுவொரு பாரிய சைபர் தாக்குதலாக இருக்கலாம் எனப் பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையிலேயே, இது குறித்த விசாரணைகளுக்காக நிதி அமைச்சின் செயலாளர் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார்.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் விடுத்த இந்த அழைப்பை ஏற்று, இன்று (30) குழுவின் முன் சமூகமளிக்க முடியாது எனத் திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும இதற்கு முன்னர் கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், இந்த விவகாரத்தின் தீவிரம் காரணமாக அவர் இன்று மதியம் 1.00 மணிக்குக் குழுவின் முன் ஆஜராவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
