Header Logo

செய்திகள்
மஸ்கெலியா வைத்தியசாலையில் பணிப்பகிஷ்கரிப்பு

Apr 30, 2026 - 03:40 PM -

0

மஸ்கெலியா வைத்தியசாலையில் பணிப்பகிஷ்கரிப்பு

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் மீதான தாக்குதல் முயற்சி மற்றும் அச்சுறுத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் இன்று (30) காலை முதல் கறுப்புப் பட்டி அணிந்து அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 28-ஆம் திகதி மஸ்கெலியா பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரைத் தாக்குவதற்காக மற்றுமொரு குழுவினர் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். 

இதனைத் தடுக்க முயன்ற வைத்தியசாலை ஊழியர் மற்றும் தாதியர் ஒருவரை, அக்குழுவினர் தகாத வார்த்தைகளால் பேசித் தாக்க முற்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.ஆர்.என். ரிசான் தெரிவித்துள்ளார். 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என வைத்தியசாலை ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, இன்று (30) சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title