Header Logo
SLIC
கிழக்கு
போரதீவுப்பற்றில் காட்டு யானை தாக்குதலில் பெண்ணொருவர் பலி!

May 2, 2026 - 01:38 PM

போரதீவுப்பற்றில் காட்டு யானை தாக்குதலில் பெண்ணொருவர் பலி!
Mobitel Inner 1278
EDEX Inner

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில், இன்று (02) அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

திக்கோடை, சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த 54 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். 

நான்கு பிள்ளைகளின் தாயான இவர், இன்று அதிகாலை தனது வீட்டு வளவிற்குள் சத்தம் வருவதை கேட்டு வெளியில் வந்தபோது அங்கு நுழைந்த காட்டு யானை திடீரெனத் தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்து வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

போரதீவுப்பற்று எல்லைக் கிராமங்களில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில், இன்று இந்தச் சோகமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278