Header Logo

வணிகம்
செலிங்கோ லைஃப் சிறப்பிற்கு அப்பால் என்ற கருப்பொருளில், தனது சிறந்த சாதனையாளர்களை High Flyers Day நிகழ்வில் கௌரவித்தது

May 4, 2026 - 03:09 PM -

0

செலிங்கோ லைஃப் சிறப்பிற்கு அப்பால் என்ற கருப்பொருளில், தனது சிறந்த சாதனையாளர்களை High Flyers Day நிகழ்வில் கௌரவித்தது

செலிங்கோ லைஃப், நிறுவனமானது தனது விற்பனை குழுவினரின் சிறப்பான சாதனைகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும் தனது செயற்பாட்டினை மீண்டும் வலியுறுத்தும் வகையில், High Flyers Day 2026 எனும் நிகழ்வை கொண்டாடியது. இந்த நிகழ்வானது, நிறுவனத்தின் சிறந்த செயல்திறன் கொண்ட 300-க்கும் மேற்பட்ட விற்பனை அதிகாரிகளை ஒரே இடத்தில் ஒன்றுகூடச் செய்து, அவர்களை அங்கீகரித்து புதிய இலக்குகளுக்கான உற்சாகத்தை உருவாக்கிய ஒரு நினைவுகூரத்தக்க மாலை நேர நிகழ்வாக அமைந்திருந்தது. 

கொழும்பில் உள்ள ITC ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 2025 ஆம் ஆண்டில் தங்கள் செயல்திறனால் உயர் சாதனை நிலையை அடைந்த விற்பனை அதிகாரிகள், Sales Superstar அங்கீகாரம் பெற்றவர்கள், அல்லது உலகளவில் மதிப்புமிக்க மில்லியன் டொலர் வட்டமேசை (MDRT) தகுதியை பெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

சிறப்பிற்கு அப்பால் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, High Flyers Day 2026 நிகழ்வு வடிவமைக்கப்பட்டது. இந்த நிகழ்வு சாதனைகளை கொண்டாடுவதற்காக மட்டுமல்லாமல், நிறுவனத்தின் சிறந்தவர்களை இன்னும் உயர்ந்த இலக்குகளை நோக்கி முன்னேறத் தூண்டுவதற்கும், இலக்குகளை மீறி சாதிக்கவும், முன்னுதாரணமாக வழிநடத்தவும், நிறுவனம் முழுவதும் புதிய வெற்றிக் குறியீடுகளை அமைக்கவும் தேவையான நோக்கங்களை கொண்டதாக அமைந்திருந்தது. 

இந்த விழாவில் பணிப்பாளர் குழு உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ குழுவினரும் கலந்து கொண்டனர். இது, தனது தொடர்ச்சியான சந்தை முன்னணித் தலைமையின் பின்னணி சக்தியாக இருக்கும் விற்பனை ஊழியர்களுக்கு செலிங்கோ லைஃப் வழங்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், இரவு விருந்துபசாரமும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன் இதன் மூலம் பரஸ்பர உறவுகள் வலுப்பெற்று, உயர்ந்த செயல்திறன் கொண்ட குழுவினருக்கிடையேயான ஒற்றுமை மேலும் வலுப்பெற்றது. 

செலிங்கோ லைஃப் நிறைவேற்றுத் தலைவர் திரு. ஆர். ரெங்கநாதன் மற்றும் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. சமித ஹேமச்சந்திர ஆகியோர் நிகழ்வில் தாக்கமிக்க ஊக்க உரைகளை வழங்கினர். மேலும், சில சிறந்த சாதனையாளர்கள் தமது அறிவையும் அனுபவங்களையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் கலந்துரையாடல் அமர்வொன்றும் இடம்பெற்றது. 

இந்த மாலையில் இலங்கை முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் வழங்கிய சிறப்புரை மேலும் ஊக்கத்தை அளித்தது. விளையாட்டுப் போட்டிகளின் போது சவால்களை முறியடித்தல், அழுத்தமான சூழ்நிலைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துதல் மற்றும் முன்னின்று வழிநடத்துதல் ஆகியவற்றில் தனது தொழில்முறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவருடைய கருத்துகள் பார்வையாளர்களிடையே வலுவாக எதிரொலித்தன, இது விளையாட்டுத் துறையின் சிறப்பிற்கும், போட்டித்தன்மை நிறைந்த ஆயுள் காப்புறுதித் துறையின் வெற்றிக்கும் இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தியது. 

செலிங்கோ லைஃப் நிறுவனம், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக சந்தை முன்னணியில் இருந்து வருகிறது. காப்புறுதி பெற்றவர்களின் இலக்குகள் மற்றும் கனவுகளை பாதுகாக்கவும், அபாயங்களை குறைக்கவும் உதவும் புத்தாக்கமான காப்புறுதித் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டில், Brand Finance அமைப்பின் மதிப்பீட்டின்படி,செலிங்கோ லைஃப் நிறுவனம் இலங்கையின் மிக உயர்ந்த மதிப்புள்ள காப்புறுதி வர்த்தகநாமமாகவும், 22-வது மிக பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கையின் ஆண்டுக்கான வர்த்தகநாமம் என்ற விருதினை பெற்றுள்ள இந்த நிறுவனம், இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) மற்றும் முகாமைத்துவ கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனம் (CIMA) ஆகிய அமைப்புகளால் இலங்கையின் மிகவும் பாராட்டப்பட்ட 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம்!

மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம்!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

title