Header Logo

வணிகம்
மென்திறன்களின் ஆற்றல்: SLIIT Soft Skills+ 2026 நிகழ்வினூடாக மாணவர்களை எதிர்காலத் தலைவர்களாக வளர்க்கும் முயற்சி

May 4, 2026 - 04:23 PM -

0

மென்திறன்களின் ஆற்றல்: SLIIT Soft Skills+ 2026 நிகழ்வினூடாக மாணவர்களை எதிர்காலத் தலைவர்களாக வளர்க்கும் முயற்சி

SLIIT Business School கற்கை நிலையம் தனது நிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சிநிரலின் கீழ் முன்னெடுக்கின்ற பாரியதொரு செயற்திட்டமாக மென்திறன்கள் மேம்பாட்டுச் செயற்திட்டம் காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்களுக்கு அவர்களுடைய வழக்கமான வகுப்பறைக் கற்றலுக்கும் அப்பால், போட்டியும், வலிமையும் மிக்கதாக மாறி வருகின்ற உலகில் வளம் காண்பதற்குத் தேவையான அடிப்படை வாழ்க்கைத் திறன்களை வழங்குவதில் இச்செயற்திட்டம் கவனம் செலுத்தியுள்ளது. 

பாடசாலைக் கல்விக்கும், யதார்த்த உலகில் அதனைப் பிரயோகிப்பதற்கும் இடையில் காணப்படும் அறிவு சார்ந்த இடைவெளியைப் போக்குவதே இம்முயற்சியின் பிரதான இலக்கு. படைப்பாக்கத்திறன், புத்தாக்கம், மற்றும் நம்பிக்கையான அணுகுமுறை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்குப் புறம்பாக, பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல், கூட்டு முயற்சி, மற்றும் தொடர்பாடல் போன்ற முக்கியமான மென் திறன்களை வளர்ப்பதில் வலுவான கவனம் செலுத்தியுள்ளது. இந்த மூலோபாயத்தைப் பின்பற்றுவதனூடாக, யதார்த்த உலகின் தடைகளைத் தாண்டி வெற்றி காண்பதற்கு, சகல துறை ஆற்றல் மிக்க, எதிர்காலத்திற்கு தயாரான மக்களை வளர்க்க முடியும் என்பதில் இச்செயற்திட்டம் நம்பிக்கை கொண்டுள்ளது. 

தரம் 11 முதல் 13 வரையான வகுப்புக்களில் கல்வி கற்கின்ற மாணவர்களை இலக்காகக் கொண்ட இச்செயற்திட்டம், இலங்கை அரசாங்கம், தனியார், மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் கீழான பாடசாலைகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றுவதற்கு வாய்ப்பளிக்கின்றது. அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் இந்த நடைமுறையானது வேறுபட்ட கல்விப் பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இச்செயற்திட்டத்தில் இணைந்து தம்முடைய தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கு சம வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்கின்றது. 

ஆரம்பச் சுற்று மற்றும் மாபெரும் இறுதிப் போட்டி ஆகிய இரு கட்டங்களாக Soft Skills+ 2026 செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 2026 ஏப்ரல் 28 அன்று நிகழ்நிலை வழியாக ஆசிரியர் பயிற்சிச் செயலமர்வொன்றுடன் இச்செயற்திட்டம் ஆரம்பமாகின்றது. நீண்ட கால அடிப்படையில் இதன் நற்பேறு மற்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, மென் திறன்களை வளர்ப்பதில் மாணவர்களுக்கு வழிகாட்டி, உதவுவதற்காக ஆசிரியர்களின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்காக சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ள கூடுதல் பாகம் கவனம் செலுத்தியுள்ளது. 

ஆரம்பச் சுற்றுக்கள் மாலபே, கண்டி, மற்றும் மாத்தறை ஆகிய மூன்று பிராந்தியங்களில் 2026 மே 9 அன்று நிகழ்நிலை வழியாக இடம்பெறவுள்ளன. செயற்பாடுகள் மீது கவனம் செலுத்தியுள்ள போட்டிகள், வினாவிடை அடிப்படையிலான மதிப்பீடுகள், மற்றும் மென் திறன்கள் தொடர்பான இடைச்செயற்பாட்டு செயலமர்வுகள் ஆகியன இந்த அமர்வுகளில் அடங்கியுள்ளன. அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதை ஊக்குவித்து, மாணவர்கள் தமக்குப் பரிச்சயமான மொழியில் பங்குபற்றுவதற்கு இடமளிப்பதற்காக செயற்பாடுகள் மற்றும் வினாக்கள் அனைத்தும் சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெறவுள்ளன. 

ஆரம்பச் சுற்றுக்களில் சிறப்பாகச் செயற்படுகின்ற முதல் 50 அணிகள் மாபெரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறவுள்ளதுடன், இது 2026 மே 16 அன்று SLIIT Malabe Campus வளாகத்தில் இடம்பெறவுள்ளது. நியாயமான முறையிலும், வெளிப்படைத்தன்மையுடனும் இது முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, இறுதிச் சுற்றில் மேம்பட்ட போட்டிச் சுற்றுக்கள் உள்ளடக்கப்படவுள்ளதுடன், அறிவும், அனுபவமும் மிக்க நடுவர் அணியால் அதற்கான மதிப்பீடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

போதனாசிரியர்கள் மற்றும் சிறுவர்கள் அடங்கலாக இதில் பங்குபற்றும் அனைவருக்கும் பங்குபற்றுவதை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதுடன், இறுதிப்போட்டியாளர்களுக்கு விசேட பரிசுகள் வழங்கப்படும். வெற்றி பெறுகின்ற அணிகளின் மிகச் சிறந்த பெறுபேறு மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவை பணப் பரிசுகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளன. 

மாபெரும் இறுதிப்போட்டியில் 50 அணிகள் பங்குபற்றுகின்றமையும், நாடெங்கிலுமிருந்து வலுவான பிரதிநிதித்துவம் அடங்கியுள்ளமையும் 2025ம் ஆண்டு செயற்திட்டத்தின் பலன் இச்செயற்திட்டத்தின் வளர்ச்சிக்கு வழிகோலியுள்ளமையை எடுத்துக்காட்டுகின்றது. கடந்த ஆண்டு செயற்திட்டத்தின் மாத்தறை புனித செர்வதியஸ் கல்லூரி வெற்றி பெற்றிருந்ததுடன், இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தை வென்றிருந்தது. கல்வியமைச்சிடமிருந்து உத்தியோகபூர்வ அனுமதியை இச்செயற்திட்டம் பெற்றுள்ளதுடன், கல்வி ரீதியான இலக்குகளுக்கு ஆதரவளித்து, எதிர்காலத் தலைவர்களை தொடர்ந்தும் வளர்க்கின்ற மேடையாக தேசிய அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. மேலதிக விபரங்களுக்கு (+ 94) 0776503079 / 0764403664 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது softskills@sliit.lk என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவோ SLIIT Business School ன் சிரேஷ்ட விரிவுரையாளரான திரு. ரணித வீரரத்ன அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

Comments
0

MOST READ

காணொளி
மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம்!

மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம்!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

title