Header Logo

வணிகம்
கொமர்ஷல் வங்கி, சுழற்சி பொருளாதார அர்பணிப்பிற்காக Global Finance ஆசிய பசுபிக் பிராந்திய விருதை பெற்றது

May 4, 2026 - 04:54 PM -

0

கொமர்ஷல் வங்கி, சுழற்சி பொருளாதார அர்பணிப்பிற்காக Global Finance ஆசிய பசுபிக் பிராந்திய விருதை பெற்றது

கொமர்ஷல் வங்கியானது, Global Finance வழங்கும் ஆறாவது ஆண்டு நிலைபெறுதகு நிதியியல் விருதுகள் விழாவில் சுழற்சி பொருளாதார அர்ப்பணிப்பு (Circular Economy Commitment) விருதிற்கான ஆசிய-பசிபிக் பிராந்திய வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, நிலைபெறுதகுதன்மை மற்றும் பொறுப்பான வங்கி சேவைகளில் வங்கியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் முக்கியமான மூன்றாம் தரப்பு அங்கீகாரமாகும். 

இந்த விருது, பொருட்கள் மற்றும் வளங்களின் மீள் பயன்பாடு மற்றும் மீள் சுழற்சியை ஊக்குவிக்கும் நிதி முயற்சிகளை முன்னெடுத்து, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் காலநிலைத் தாங்குதன்மை கொண்ட உற்பத்தி முறைகளை ஆதரிக்கும் தலைமைத்துவத்தை பாராட்டுகிறது. கொமர்ஷல் வங்கியின் பிரதம நிதி அதிகாரி திரு கபில ஹெட்டிஹாமு, சமீபத்தில் லண்டனில் உள்ள Landing 42 இல் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், வங்கியின் சார்பில் இந்த விருதை பெற்றுக்கொண்டார். 

மொத்த நிலைபெறுதகுதன்மை நிதியமைப்பு, பிணையப் பத்திர வெளியீட்டில் சிறப்பு சமூக ஆதரவு, வள முகாமைத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் அறிக்கையிடல், கட்டமைப்பு மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளுக்கான நிலைபெறுதகுதன்மை நிதியுதவி போன்ற பல்வேறு துறைகளில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சஞ்சிகை தெரிவித்துள்ளது. கொமர்ஷல் வங்கியின் பசுமை நிதி நிலைபெறுதகுதன்மை, குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட, காலநிலைத் தாங்குதன்மை வாய்ந்த மற்றும் சுற்றுச்சூழல் நன்மை தரும் திட்டங்களுக்கு நிதி வளங்களை வழிநடத்தும் நிர்வாக அடித்தளமாக செயல்படுகிறது.இந்தத் திட்டமானது,இலங்கை மத்திய வங்கியின் (CBSL) பசுமை நிதி வகைப்பாடு, ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்கு (UN SDGs) மற்றும் இலங்கையின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் ஆகியவற்றுடன் இணங்குகிறது.இது, புதுப்பிக்கத்தக்க சக்தி, சக்தி திறன் அபிவிருத்தி, காலநிலை-நுண்ணறிவு விவசாயம்,நிலைத்த போக்குவரத்து, கழிவு முகாமைத்துவம் மற்றும் பசுமை கட்டிடங்கள் உள்ளிட்ட அளவிடக்கூடிய காலநிலை தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை அடையாளம் காண, மதிப்பிட மற்றும் கண்காணிக்க வழிகாட்டுகிறது. 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 272 தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. 

மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title