Header Logo

வணிகம்
புதிய பிதுக்கல் (Extrusion) தொழில்நுட்பத்துடன் எலிபன்ட் ஹவுஸ் ஐஸ்கிரீமின் புதிய தயாரிப்புகள்

May 6, 2026 - 09:41 AM -

0

புதிய பிதுக்கல் (Extrusion) தொழில்நுட்பத்துடன் எலிபன்ட் ஹவுஸ் ஐஸ்கிரீமின் புதிய தயாரிப்புகள்

இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் தயாரிப்புக்கள் துறையில் பாரிய திருப்புமுனையாக அமையும் வகையில் புதிய தலைமுறை தயாரிப்புக்களை எலிபன்ட் ஹவுஸ் ஐஸ்கிரீம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் அதிநவீன பிதுக்கல் (Extrusion) தொழில்நுட்பத்தின் வலுவுடன், தனது Elephant House Wonder மற்றும் IMORICH வர்த்தகநாமங்களின் கீழ் இத்தயாரிப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சி (CCS) நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முக்கிய முதலீடு, நிறுவனத்தின் உற்பத்தித் திறன்களை மேலும் வலுப்படுத்துவதுடன், உள்ளூர் ஐஸ்கிரீம் வகைப் பொருட்களில் நயம், தோற்ற அமைப்பு மற்றும் சுவை அனுபவம் ஆகியவற்றில் புதிய தரத் தளத்தை நிலைநாட்டியுள்ளது. 

அவிசாவளை முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள CCS இன் அதிநவீன உற்பத்தி ஆலையில் பொருத்தப்பட்டுள்ள இப்புதிய பிதுக்கல் தொழில்நுட்பம் கொண்ட உற்பத்தி வசதியானது பெருமளவில் ஐஸ்கிரீம் உற்பத்தியின் போது துல்லியமான அடுக்கு அமைப்பு, பிரதான சுவைகள், செழுமையான உள்ளடக்கங்கள், தெளிவான வடிவங்கள், மற்றும் உயர்தர சொக்கிலேட் மேற்படலங்கள் ஆகியவற்றுக்கு இடமளிக்கின்றது. கேக்குகள், துண்டுகள், மற்றும் உறைவிக்கப்பட்ட சான்ட்விட்ச் உள்ளிட்ட புத்தாக்க வடிவங்களை வெளிக்கொண்டு வருவதற்கு இப்புத்தாக்கம் இடமளிக்கின்றது. அதன் மூலமாக, முன்னணி சர்வதேச வர்த்தகநாமங்களுக்கு இணையாக பல்வகைப்பட்ட நய அமைப்பிலான, சர்வதேச தரத்தின் அனுபவத்தை நுகர்வோருக்கு வழங்குகின்றது. 

தரம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொண்டுள்ள எலிபன்ட் ஹவுஸ் ஐஸ்கிரீம் நீண்ட தசாப்தகாலமாக இலங்கையின் ஐஸ்கிரீம் தொழிற்துறையை வளர்ச்சியடையச் செய்துள்ளது. நாடெங்கிலும் அனைத்து குடும்பங்களும் ஆனந்தத்துடன் சுவை அனுபவத்தை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு தனது உற்பத்திப் பிரிவின் வளர்ச்சியை Elephant House Wonder மிகச் சிறப்பாக முன்னெடுத்துள்ளது. முதன்மையான, உலகத்தரம் வாய்ந்த அனுபவங்களுக்கான நாடலும், தேடலும் அதிகரித்து வரும் நிலையில் அதனைச் சிறப்பாக பூர்த்தி செய்வதற்கு IMORICH அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிதுக்கல் தொழில்நுட்பமானது மேற்குறிப்பிட்ட இரு ஐஸ்கிரீம் வகைகளையும் வலுப்படுத்தி, வருங்காலத் தேவைக்கேற்றவாறு தயாரிப்புக்களை மேம்படுத்துவதில் அடுத்த கட்டத்தை குறிக்கிறது. 

ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுகள் துறையின் தலைவர் தமிந்த கம்லத் அவர்கள் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் உற்பத்திச் சிறப்பினை மேம்படுத்தி, உள்ளூர் நுகர்வோருக்கு சர்வதேச தரத்திலான அனுபவங்களை வழங்கும் எமது நீண்ட கால அர்ப்பணிப்பை இம்முதலீடு பிரதிபலிக்கின்றது. புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தை தொடர்ச்சியாக கைக்கொண்டு, ஐஸ்கிரீம் பிரிவில் பரிணாம வளர்ச்சியில் முன்னிற்க வேண்டும் என்பதே எமது நோக்கம். மேலும் பேரளவு மற்றும் உயர்மதிப்பு கொண்ட பிரிவுகளில் எமது போட்டித்திறனையும் இதன் மூலமாக வலுப்படுத்துவோம்.” 

தயாரிப்பு வரிசையின் விரிவாக்கங்கள் மற்றும் துணிச்சலான சுவைப் புத்தாக்கங்கள் பலவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் ஐஸ்கிரீம் துறையின் எதிர்கால வளர்ச்சியை நோக்கி எலிபன்ட் ஹவுஸ் ஐஸ்கிரீம் தனது முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும்.

Comments
0

MOST READ

காணொளி
விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

ஈழ தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் இணைந்து பணியாற்றுவோம்!

ஈழ தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் இணைந்து பணியாற்றுவோம்!

யாழில் தவெக வெற்றி கொண்டாட்டம்!

யாழில் தவெக வெற்றி கொண்டாட்டம்!