Header Logo

வணிகம்
இலங்கையின் Toastmasters அமைப்பு Home Lands அனுசரணையில் ஆண்டின் மாபெரும் நிகழ்வான Ovation 2026 இற்கு தயாராகின்றது

May 6, 2026 - 10:46 AM -

0

இலங்கையின் Toastmasters அமைப்பு Home Lands அனுசரணையில் ஆண்டின் மாபெரும் நிகழ்வான Ovation 2026 இற்கு தயாராகின்றது

Toastmasters இன்டர்நஷனல் 82 ஆம் மாவட்டம் (District 82), Tides of Transformation (மாற்றத்தின் அலைகள்) எனும் தொனிப்பொருளில் தனது பிரதான வருடாந்த மாநாடான Ovation 2026 இனை எதிர்வரும் மே மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கொழும்பு Shangri- La ஹோட்டலில் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. இவ்வருட மாநாட்டிற்கு Home Lands நிறுவனம் பிரதான அனுசரணையை வழங்குகின்றது. 

Ovation 2026 இனை முன்னெடுப்பதற்காக Toastmasters உடன் கைகோர்த்துள்ளமையானது, இந்த பெருமைக்குரிய நிகழ்வின் அந்தஸ்தை மேலும் உயர்த்துவது மாத்திரமன்றி, இலங்கையிலுள்ள சமூகங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் வலுவூட்டுவதற்காக வழங்கும் ஆதரவை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இம்மாநாடு பற்றிய மேலதிக விபரங்கள் மற்றும் இலங்கையில் இந்த அமைப்பின் நான்கு தசாப்த காலப் பயணம் பற்றி தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பொன்று 2026 ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை கொழும்பு Courtyard by Marriott ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

1924 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட Toastmasters இன்டர்நஷனல், தனிநபர்களுக்கு தொடர்பாடல் திறன், பொதுப் பேச்சாற்றல் மற்றும் தலைமைத்துவ திறன்கள் ஆகியவற்றைக் கட்டியெழுப்பிக் கொள்வதற்கு உதவும் சர்வதேச இலாபநோக்கற்ற அமைப்பாகும். 1983 ஆம் ஆண்டு முதல் இலங்கை, இந்த அமைப்பில் அங்கம் வகிப்பதுடன், தெற்காசியாவின் முதலாவது Toastmasters கழகமாக, கொழும்பு Toastmasters கழகம் திகழ்ந்தது. இன்று, 82 ஆம் மாவட்டத்தில் 168 க்கு அதிகமாக கழகங்கள் மற்றும் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, காலி மற்றும் அனுராதபுரம் போன்ற 65 நகரங்களின் 4000 க்கும் அதிகமான அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர். கூட்டாண்மை, சமூக மற்றும் நிறுவனசார் அமைப்பில் இவர்கள் செயலாற்றுகின்றனர். 

District 82 இன் மாவட்ட பணிப்பாளர் DTM நிரோஷன் நடராஜா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையைப் பொறுத்தமட்டில், இங்கு வெறும் பங்களிப்பு மாத்திரம் தனித்துவமானது அல்ல. மாறாக அதிலுள்ள அதீத ஆர்வமே அதனை வேறுபடுத்திக் காட்டுகின்றது. இங்கு Toastmasters என்பது ஒரு மேலதிகச் செயற்பாடு மட்டுமல்ல. அது தனிநபர் ஆளுமை மாற்றம், தலைமைத்துவ பண்புகளை மெருகூட்டல் மற்றும் உலகளாவிய ரீதியில் தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஒரு தளமாகும்.” என்றார். 

இந்த உயர் அந்தஸ்தானது தகுதியான முறையில் எய்தப்பட்டுள்ளது. 2024/2025 காலப்பகுதியில், Toastmasters சர்வதேச வட்டாரத்தில் முதலாம் நிலை மாவட்டமாக 82 ஆம் மாவட்டம் அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன், 2014 ஆம் ஆண்டில் பொதுப் பேச்சாற்றலுக்கான உலக சம்பியன் பட்டத்தை வென்ற முதலாவது இலங்கையரான தனுஞ்சய ஹெட்டியாரச்சி மற்றும் 2017/2018 காலப்பகுதியில் Toastmasters சர்வதேசத்தின் தலைவராகப் பணியாற்றிய DTM அருணாசலம் பால்ராஜ் ஆகியோரும் இம் மாவட்டத்தின் உலகளாவிய தடயத்தின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் இரண்டு முக்கிய மைல்கற்களாகத் திகழ்கின்றனர். 

Toastmasters அமைப்பின் நீண்டகாலத் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த, Toastmasters இன்டர்நஷனலின் முன்னாள் பிராந்திய ஆலோசகர் DTM சுதாஷ் லியனகே, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த அமைப்பு தனது தனித்துவத்தையும் பொருத்தப்பாட்டையும் எவ்வாறு தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பது குறித்து விளக்கியிருந்தார். 

Toastmasters இன்டர்நஷனல் முன்னாள் பிராந்திய ஆலோசகர் DTM சுதாஷ் லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் தத்துவம் எளிமையானது, ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது. வளர்ச்சி என்பது பயிற்சி, சுய பிரதிபலிப்பு மற்றும் ஒரு சமூகம் ஆகியவற்றின் மூலமே ஏற்படுகின்றது. தவறு செய்யவும், அதிலிருந்து கற்கவும், மீண்டும் முயற்சி செய்யவும் ஏற்ற ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலம், சிறந்த பேச்சாளர்களை மாத்திரமன்றி, வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தன்னம்பிக்கை மிக்க சிந்தனையாளர்களையும், வினைத்திறன் மிக்க தொடர்பாடல் நிபுணர்களையும் Toastmasters உருவாக்குகின்றது.” என்றார். 

Ovation 2026 மாநாட்டை உத்தியோகபூர்வமாக முன்னோட்டம் செய்வதற்கான ஒரு தளமாகவும் இந்த ஊடக சந்திப்பு அமைந்திருந்தது. மாநாட்டின் தலைமை செயற்பாட்டாளர் DTM மரியோ டி சில்வா, இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள விறுவிறுப்பான நிகழ்வுகள் குறித்து இங்கு விளக்கமளித்தார். இதில் பேச்சுப் போட்டிகள், முக்கிய உரைகள், கல்விசார் செயலமர்வுகள் மற்றும் மாவட்டத்தின் சிறந்த சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விருது வழங்கும் நிகழ்வுகள் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

Ovation 2026 மாநாட்டின் தலைமை செயற்பாட்டாளர் DTM மரியோ டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “Ovation என்பது ஒரு Toastmasters ஆண்டின் மிக உன்னதமான இறுதி நிகழ்வாகும். இது மாவட்டத்தின் சிறந்த பேச்சாளர்கள் தங்களின் அதியுயர் திறமைகளை வெளிப்படுத்தி போட்டியிடும் ஒரு களம் மாத்திரமன்றி, சிறந்த தலைவர்கள் கௌரவிக்கப்படும் மற்றும் 82 ஆம் மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பயணமும் ஒரே மேடையில் பறைசாற்றப்படும் ஒரு நிகழ்வாகவும் அமைகின்றது.” என்றார். 

TM பிரசன்ன குணவர்தன, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். Toastmasters 82 மாவட்டம் மற்றும் Ovation 2026 ஆகியவற்றின் தொடர்பாடல்களை நிர்வகிக்கும் உத்தியோகபூர்வ பொது உறவுகள் முகவர் அமைப்பான Mark and Comm இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. 

Ovation 2026 இன் இதர பிரதான அனுசரணையாளர்களில், ப்ரீமியர் அனுசரணையாளர் – ஜனதா ஸ்டீல், பிளாட்டினம் அனுசரணையாளர் – ஏ ஜே மெடிகெம் இன்டர்நஷனல் (பிரைவட்) லிமிடெட், நியு அந்தனீஸ் பாம்ஸ், தங்க அனுசரணையாளர் – ஜேயிஸ் இன்வெஸ்ட்மன்ட் லிமிடெட், நெஸ்லே Coffeemate, Zoro Tapes மற்றும் வெள்ளி அனுசரணையாளர் – மலிபன் பிஸ்கட் மெனுபக்சரிஸ் (பிரைவட்) லிமிடெட் ஆகியன அடங்குகின்றன.

Comments
0

MOST READ

காணொளி
மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பேரணியாகச் சென்று கேக் வெட்டி மகிழ்ச்சி!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்!

ஈழ தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் இணைந்து பணியாற்றுவோம்!

ஈழ தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் இணைந்து பணியாற்றுவோம்!