Header Logo
SLIC
மலையகம்
நோர்வூட்டில் புதிய மதுபானசாலைக்கு எதிராக போராட்டம்!

May 6, 2026 - 02:02 PM

நோர்வூட்டில் புதிய மதுபானசாலைக்கு எதிராக போராட்டம்!
Mobitel Inner 1278
EDEX Inner

நோர்வூட் நகரில் பொகவந்தலாவ வீதியில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலையினை எதிர்த்து பொதுமக்கள் இன்று (06) திறக்கப்படவிருந்த கட்டிடத்திற்கு முன்பாக, தோட்டத் தொழிலாளர்களும் உள்ளூர் மக்களும் கருப்புக் கொடிகளை ஏந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். 

போராட்டத்தின் போது நோர்வூட் பிரதான நகரில் உள்ள அனைத்துக் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அனைத்துக் வர்த்தக நிலையங்களில் கருப்புக் கொடிகள் ஏற்றிருந்தனர். 

குறிப்பாக நோர்வூட் நகரில் தற்போது 3 மதுபானசாலைகள் உள்ளதாகவும், மற்றொரு மதுக்கடை திறக்கப்படுவது தோட்டத் தொழிலாளர்கள் உட்பட அப்பகுதி மக்களுக்குப் பல பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் இதனை உடனடியாக நிறுத்த கோரியும் பிரதேசவாதிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

மேலும் மதுபானசாலை திறக்கத் திட்டமிடப்பட்டுள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில் ஒரு தனியார் வகுப்பு நடத்தப்பட்டு வருவதாகவும், மதுபானசாலை திறக்கப்படுவது அந்த வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

புதிய மதுபான உரிமங்களை வழங்கப் போவதில்லை என தற்போதைய அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும், புதிய மதுபானக் கடைகளைத் திறக்க உரிமங்களை வழங்குவதன் மூலம் தற்போதைய தலைமுறையினரும் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள் என்றும் மக்களின் நலன் கருதி மதுபானசாலைக்கான அனுமதியை வழங்க கூடாது என தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன் போது மக்கள், பதாகைகளை தாங்கியும் மதுபான சாலை நிறுத்த கோரியும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278