Header Logo
Mogo Academy

வணிகம்
Seylan Accelerate, சம்பளம் பெறும் தொழில் வல்லுநர்களின் நிதி நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த வட்டியற்ற சம்பள முற்பணத்தை அறிமுகப்படுத்துகிறது

May 6, 2026 - 05:28 PM -

0

Seylan Accelerate, சம்பளம் பெறும் தொழில் வல்லுநர்களின் நிதி நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த வட்டியற்ற சம்பள முற்பணத்தை அறிமுகப்படுத்துகிறது
Mobitel inner

செலான் வங்கி பிஎல்சி, Seylan Accelerate சம்பள முற்பண வசதியை அறிமுகப்படுத்துவதன் ஊடாக மாதாந்த சம்பளத்தை பெறும் தொழில் வல்லுநர்களுக்கான தனது சேவையை வலுப்படுத்தியுள்ளது. இவ் வசதி மூலம் நிதித் தேவைகள் எழும்போது மாதாந்த வருமானத்தின் ஒரு பகுதியை வட்டியின்றிப் பெற்றுக் கொள்ளலாம். 

Seylan Accelerate, தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் மாதச் சம்பளத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வட்டியில்லா முற்பணமாகப் பெற வழிவகை செய்கிறது. இது வழமையான பணப்புழக்கத்திற்கு இடையூறு விளைவிக்காமல் சரியான நேரத்தில் நிதி நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இந்த வசதியானது அவசர அல்லது எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள உதவுவதுடன் இக்கட்டான தருணங்களில் வாடிக்கையாளர்களுக்கு மன அமைதியை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

சம்பள முற்பணம் பெறும் வசதி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தானாகவே Accelerate தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படுவார்கள். பின்னர், தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் சம்பள முற்பண வாய்ப்புகளை அணுகுவதற்கான மின்னஞ்சலைப் பெறுவார்கள். 

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த தனிநபர் வங்கியியலின் பிரதிப் பொது முகாமையாளர் யூஜின் செனவிரத்ன, “புதுமையான மற்றும் பொறுப்பான நிதித் தீர்வுகள் ஊடாக சம்பளம் பெறும் தொழில் வல்லுநர்களை ஆதரிப்பதில் வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை ‘Accelerate’ திட்டம் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, சம்பள முற்பண வசதியானது, வட்டிச் செலவுகள் மற்றும் நீண்ட ஆவணச் செயல்முறைகளின் சுமையின்றி, குறுகிய கால பணப்புழக்கத்தை நாடும் வாடிக்கையாளர்களின் நியாயமான தேவையை நிவர்த்தி செய்கிறது.” என்று குறிப்பிட்டார். 

Seylan Accelerate என்பது Entry, Plus, Prime மற்றும் Premier ஆகிய நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய சம்பள சேமிப்புக் கணக்குத் திட்டமாகும். ஒவ்வொரு பிரிவும் வருமான நிலைகளுக்கு ஏற்ப தனித்துவமான நன்மைகளை வழங்குகிறது. எனினும், Prime மற்றும் Premier வாடிக்கையாளர்களை வேறுபடுத்தும் முக்கிய அம்சமாக வட்டியற்ற சம்பள முற்பண வசதி விளங்குகிறது. 

குறுகிய கால நிதி ஆதரவைத் தாண்டி, Seylan Accelerate வாழ்வியல் முறை சார்ந்த வங்கித் தீர்வாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் உயர்தர சேவைத் தரங்கள், கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் மற்றும் வங்கியின் டிஜிட்டல் வங்கித் தளங்களுக்கான தடையற்ற அணுகல் ஆகியவற்றினூடாகப் பயனடைகின்றனர். இது சௌகரியத்தையும் நீண்ட கால மதிப்பையும் உறுதி செய்கிறது. 

Seylan Accelerate கணக்கானது பணியில் சேரும் இளம் தொழில்வல்லுநர்கள் உட்பட, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சம்பளம் பெறும் தனிநபர்களுக்கானது ஆகும். இச் சேவையின் ஊடாக செலான் வங்கி நம்பகமான நிதிப் பங்காளராகத் தனது பங்கைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது. மேலும் இது வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் வருமானத் திறன்களுக்கு ஏற்ப எளிய தீர்வுகளை வழங்குகிறது. 

சம்பள முற்பண வசதி மூலமான வட்டியற்ற நிதி நெகிழ்வுத்தன்மையை அனுபவிப்பதற்காக வாடிக்கையாளர்கள் எந்தவொரு செலான் வங்கி கிளையிலோ அல்லது வங்கியின் டிஜிட்டல் வழிமுறைகள் மூலமாகவோ Seylan Accelerate கணக்கை ஆரம்பிக்கலாம் அல்லது தமது தற்போதைய கணக்கை மேம்படுத்திக்கொள்ளலாம்.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara