May 7, 2026 - 11:06 AM -
0
இலங்கையின் முன்னணி நிதியியல் நிறுவனமான JXG (ஜனசக்தி குழுமம்)ரூபவ் தனது நலன்புரிப் பிரிவான ஜனசக்தி அறக்கட்டளையின் ஊடாக பதினெட்டு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான மருத்துவ உதவியை விரிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி நிதியத்துடன் இணைந்து செயற்படவுள்ளது. இந்த இணைவாக்கமானது ஒரு தேசிய நிதியத்துடன் ஏற்படுத்தப்படும் அரிதான மற்றும் முக்கியமான ஒரு கூட்டு நிறுவன பங்காண்மையைக் குறிப்பதோடு இலங்கைக்கு நீடித்த மதிப்பை உருவாக்குவதில் JXG கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு மேலும் வலுவூட்டுகிறது.
ஒரு தேசிய நடவடிக்கையாக நிறுவப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு 'எதிர்காலத்தை வடிவமைத்திட இன்றைய நாளை அரவணைப்போம்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது நாடு முழுவதுமுள்ள சிறுவர்களின் மருத்துத் தேவைகளுக்கான அணுகலை வலுப்படுத்தும் ஒரு பொதுவான நோக்கத்தைக் கொண்டுள்ளது.
தடைகளை உடைத்தல் எதிர்காலத்தை வடிவமைத்தல் என்ற JXG இனது நோக்கத்திற்கு அமைவாக இந்த முன்னெடுப்பானது உரிய நேரத்தில் அவசியமான மருத்துவப் பராமரிப்பைப் பெறுவதில் காணப்படும் போதாமைகளை நிவர்த்தி செய்கிறது. ஜனாதிபதி நிதியத்தால் அங்கீகரிக்கப்படும் சிகிச்சைகளுக்கு ஜனசக்தி அறக்கட்டளை மேலதிக நிதிப் பங்களிப்புகளை வழங்கிரூபவ் அத்தியாவசியப் பராமரிப்புக்கான பரந்த அணுகலை சாத்தியமாக்கிட வழிவகுக்கும்.
சிகிச்சைக்கான செலவின் ஒரு பகுதியை ஜனாதிபதி நிதியம் வழங்குவதோடு ஜனசக்தி அறக்கட்டளை அதற்குச் சமமான தொகை அல்லது சிகிச்சைக்கு எஞ்சியுள்ள தொகை என்பவற்றில் எது குறைவான தொகையோ அதனை வழங்கும். சிகிச்சைக்குப் பிறகு பயனாளியின் பாதுகாவலர்களுக்கும் அவசர மற்றும் வெளிநாட்டு மருத்துவத் தேவைகளின்போது சிகிச்சைக்கு முன்பும் உதவி பெற்றுத் தரப்படுவதோடு உரிய நேரத்திலான உதவிக்காக விண்ணப்பங்கள் மாதாந்தம் செயலாக்கப்படும்.
ரமேஷ் ஷாஃப்டர் JXG இனது முகாமைத்துவப் பணிப்பாளர் / குழும தலைமை நிறைவேற்று அதிகாரி கூறுகையில்,
'ஜனசக்தியைப் பொறுத்தவரை நாம் எப்போதும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவே விரும்புகிறோம். ஜனாதிபதி நிதியத்துடனான இந்த இணைவாக்கம் 'தடைகளை உடைத்தல் எதிர்காலத்தை வடிவமைத்தல்' என்ற எமது நோக்கத்தை சாத்தியமாக்கும் ஒரு அர்த்தமுள்ள தொலைநோக்க வழிமுறை என்று நாம் நம்புவதைப் பிரதிபலிக்கிறது. பல சிறுவர்களுக்கு தமது எதிர்காலத்தை முழுமையாக எதிர்நோக்குவதற்கு மருத்துவத் தேவைகளுக்கான அணுகல் ஒரு முக்கியத் தடையாக உள்ளது. இந்த இணைவாக்கத்தின் ஊடாக மிகவும் தேவையுள்ளவர்களுக்கு நிதியுதவியை வழங்கி அவர்களது சுமையைக் குறைத்து சிறப்பான உடல்நலன் பெறுபேறுகளைப் பெறவதற்கும் அடுத்த தலைமுறை தன்னம்பிக்கையுடன் முன்னேறுவதற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதற்கும் நாம் முயற்சிக்கின்றோம்' என்று தெரிவித்தார்.
G.G.S.C.ரோஷன் ஜனாதிபதி நிதியத் தலைவர் / செயலாளரின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்; மேலும் கூறுகையில்,
'ஜனசக்தி அறக்கட்டளையுடனான இந்த இணைவாக்கமானது ஒரு தனித்துவமான அத்துடன் பல வழிகளில் ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வாகும். சிறுவர்களுக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அத்தியாவசிய மருத்துவத் தேவைகளை அணுகுவதில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பதற்கும் எவ்வாறு தேசிய நிறுவனங்களும் தனியார்துறையும் ஒருங்கிணைந்த முறையில் இணைந்து செயற்பட முடியும் என்பதையே இது வெளிப்படுத்துகிறது' என்று குறிப்பிட்டார்.
மேலதிக ஒத்துழைப்பைப் பெறுவதற்காக ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பிக்கும்போது ஒரு ஒப்புதல் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இது ஜனசக்தி அறக்கட்டளையுடன் பாதுகாப்பாக விபரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் மேலதிக நிதியுதவிக்கான பரிசீலனைக்கும் வழிவகுக்கும். 2026 மே 15 ஆம் திகதியிலிருந்து ஜனாதிபதி நிதியத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஜனசக்தி அறக்கட்டளை வழங்கும் மேலதிக நிதியுதவியைப் பெறுவதற்கு தகுதி பெறும். ஜனாதிபதி நிதியமானது தொடர்ந்தும் மருத்துவ உதவி தேவைப்படும் பயனாளிகளைத் கண்டறிந்து பரிசோதித்து அங்கீகாரம் வழங்கும். JXG தனது நோக்கத்திற்கு அமைவாகவும் தேசிய முன்னுரிமைகளுக்கு இணக்கமாகவும் இலங்கை முழுவதும் அர்த்தமுள்ள கணிப்பிடக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் தொடர்ந்தும் உறுதியுடன் செயற்படுகிறது.
JXG (ஜனசக்தி குழுமம்) பற்றி
JXG (ஜனசக்தி குழுமம்) என்பது காப்புறுதி நிதிச்சேவை மற்றும் லீசிங் மற்றும் முதலீட்டு வங்கி ஆகிய துறைகளில் வியாபித்துக் காணப்படும் ஒரு இலங்கை நிதிசார் பெருநிறுவனம் ஆகும். இக்குழுமத்தின் ஒவ்வொரு முக்கிய வணிகமும் குறித்த துறையில் ஒரு வலிமையான பங்களிப்பாளராக திகழ்கிறது. JXG குழுமத்தில் பர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சி ஜனசக்தி இன்ஷூரன்ஸ் பிஎல்சி ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் நலன்புரி அங்கமான ஜனசக்தி அறக்கட்டளை ஆகியன உள்ளடங்கும்.
JXG இனது பயணம் 1990 களின் முற்பகுதியில் ஆரம்பித்தது. அப்போது அதன் ஸ்தாபகர் மற்றும் தலைவரான திரு. சி.டி.ஏ. ஷாஃப்டர் இலங்கையின் முதலாவது சிறப்பு ஆயுட் காப்புறுதி நிறுவனத்தை நிறுவி காப்புறுதி துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். தொடர்ந்து வந்த தசாப்தங்களில் மூலோபாய இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்களின் ஊடாக இக்குழுமம் தனது செல்வாக்கையும் வீச்சையும் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
இக்குழுமத்தின் வர்த்தக நாமத்திலுள்ள 'X' என்பது உற்சாகமளிக்கும் வாய்ப்புகள் விரிவாக்கம் மற்றும் அதிவேக வளர்ச்சி என்பவற்றையும் ஓர் ஒருங்கிணைந்த அமைப்பாக சாத்தியங்களின் பெருக்கத்தையும் குறிக்கிறது. 'தடைகளை உடைத்தல் எதிர்காலத்தை உருவாக்குதல் என்ற தனது நோக்கத்தின் வழிகாட்டலுக்கு அமைவாக JXG இலங்கையின் நிதித்துறையின் எதிர்காலத்தை வடிவமைத்து வருகிறது.
