Header Logo

வணிகம்
Samsung இன் புதிய Galaxy A57 5G மற்றும் A37 5G ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் இலங்கையில் அறிமுகம்

May 7, 2026 - 01:52 PM -

0

Samsung இன் புதிய Galaxy A57 5G மற்றும் A37 5G ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் இலங்கையில் அறிமுகம்

Samsung Sri Lanka நிறுவனம் தனது புகழ்பெற்ற Galaxy A தொடரின் புதிய வரவுகளான Samsung Galaxy A57 5G மற்றும் Samsung Galaxy A37 5G ஆகியவற்றை இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. சக்திவாய்ந்த செயல்பாடு, நவீன செயற்கை நுண்ணறிவு (AI) வசதிகள் மற்றும் நீண்டகால நம்பகத்தன்மை ஆகியவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்;ள இப்புதிய சாதனங்கள், மேம்பட்ட கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்பத்தை அன்றாட பயனர்களுக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 

இந்த இரண்டு சாதனங்களினதும் பிரதான சிறப்பம்சமாக Samsung இன் மேம்படுத்தப்பட்ட AI தொகுப்பான Awesome Intelligence விளங்குகின்றது. இது தற்போது One UI 8.5 இயங்குதளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது வேலை, படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் பயனர்களுக்கு மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் இலகுவான அனுபவத்தை வழங்குகிறது. குரல் பதிவுகளைத் தானாகவே உரையாக மாற்றுவது முதல், AI தொழில்நுட்பம் மூலம் உள்ளடக்க உருவாக்கத்தை (Content Creation) எளிமையாக்குவது வரை, Galaxy A57 5G மற்றும் A37 5G ஆகிய இரண்டும் நவீன டிஜிட்டல் வாழ்க்கை முறைகளை எளிதாகக் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. 

மேம்படுத்தப்பட்ட Voice Transcription வசதியானது, குரல் பதிவுகளை உடனுக்குடன் உரையாக மாற்ற அனுமதிக்கிறது. இது கூட்டங்கள், விரிவுரைகள் அல்லது பயணத்தின்போது குறிப்புகளை எடுப்பதற்கு மிகவும் பொருத்தமானது. அதேவேளை, AI Select அம்சமானது திரையில் தோன்றும் விடயங்களுடன் இலகுவாகப் பழக வழிவகுக்கிறது. இதன் மூலம் எளிய சைகைகளைப் பயன்படுத்தி உரைகளைத் பிரித்தெடுக்கவோ, படங்களைத் திருத்தவோ அல்லது செயலிகளுக்கு இடையே உள்ளடக்கங்களை நகர்த்தவோ முடியும். இதனால் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்வது, செயலிகளைக் கையாள்வதைப் போன்ற உணர்வைத் தராமல், ஒரு புதிர் அட்டையின் துண்டுகளை மிகச் சரியாகப் பொருத்துவதைப் போன்ற ஒரு மென்மையான அனுபவத்தை வழங்குகிறது. 

புகைப்படக்கலைத் துறையிலும் இந்தச் சாதனங்கள் ஒரு நம்பிக்கையான பாய்ச்சலை மேற்கொண்டுள்ளன. இரண்டு மாதிரிகளும் 50MP பிரதான சென்சார் உள்ளடங்கிய பல்துறை சார்ந்த முத்திறன் கெமெரா அமைப்பைக் (Triple-camera system) கொண்டுள்ளன. இவை வெவ்வேறு ஒளிச் சூழல்களிலும் தெளிவான மற்றும் துல்லியமான புகைப்படங்களை வழங்குகின்றன. மேம்படுத்தப்பட்ட Nightography வசதியானது, குறைந்த வெளிச்சத்திலும் புகைப்படங்கள் மிகத் தெளிவாக இருப்பதை உறுதி செய்கிறது. அத்துடன், AI மூலம் இயங்கும் Scene Optimization தொழில்நுட்பமானது, இயற்கையான சரும நிறம் (Skin tones) மற்றும் சமநிலையான பின்னணியைப் படம்பிடிப்பதற்கு ஏற்ப கெமெரா அமைப்புகளைத் தானாகவே மாற்றியமைக்கின்றது. 

Galaxy A57 5G மாதிரியானது மேம்படுத்தப்பட்ட படச் செயலாக்கத் திறன் மற்றும் வேகமான ஷட்டர் வேகம் (Shutter speeds) ஆகியவற்றின் மூலம் இந்த அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. இதன் மூலம் மிக வேகமாக நகரும் தருணங்களையும் மிகத் தெளிவாகப் படம்பிடிக்க முடியும். Object Eraser மற்றும் Best Face போன்ற அம்சங்கள், கூடுதல் எடிட்டிங் திறன்கள் ஏதுமின்றி சாதாரண புகைப்படங்களையும் மிக நேர்த்தியான நினைவுகளாக மாற்றுகின்றன. 

செயல்திறன் என்பது இந்தச் சாதனங்களின் மற்றுமொரு தனித்துவமான அம்சமாகும். Galaxy A57 5G மாதிரியானது மேம்படுத்தப்பட்ட CPU, GPU மற்றும் NPU ஆற்றல்களைக் கொண்டுள்ளதால், தடையற்ற ஸ்ட்ரீமிங், வேகமான மல்டிடாஸ்கிங் மற்றும் துரிதமாகச் செயற்படும் கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. மிகவும் மெல்லிய மற்றும் எடை குறைந்த வடிவமைப்பைக் கொண்டிருந்தாலும், இதில் இரண்டு நாட்கள் வரை நீடிக்கக்கூடிய 5,000mAh வலுவான பெட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன், மிக விரைவாக சார்ஜிங் செய்யக்கூடிய Super-Fast Charging வசதியையும் இது கொண்டுள்ளது. இதன் கண்கவர் Super AMOLED+ திரை மற்றும் 120Hz Refresh rate ஆகியவை, உள்ளக அரங்குகளில் அல்லது இலங்கையின் பிரகாசமான சூரிய ஒளியிலும் தெளிவான மற்றும் வர்ணமயமான காட்சிகளை வழங்குகின்றன. 

இரண்டு மாதிரிகளிலும் நீடித்து நிலைக்கும் தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. நீர் மற்றும் தூசித் தடுப்பிற்கான IP68 தரச் சான்றிதழைப் பெற்றுள்ள Galaxy A57 5G மற்றும் A37 5G ஆகிய சாதனங்கள், திடீர் மழை அல்லது தூசு நிறைந்த பயணங்கள் என அன்றாடச் சூழல்களைத் தாங்கி நிற்கும் வகையில் மிக உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இந்தச் சாதனங்களின் மூலம் நீண்டகாலப் பயன்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு Samsung தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகின்றது. பயனர்கள் ஆறு தலைமுறைகளுக்கான Android OS மற்றும் One UI மேம்படுத்தல்களையும், ஆறு ஆண்டுகளுக்கான பாதுகாப்பு மேம்படுத்தல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். Samsung Knox Vault மூலம் இயங்கும் இந்தச் சாதனங்கள், முக்கியமான தரவுகளுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகின்றன. அதேவேளை, Privacy Alerts மற்றும் Private Album போன்ற அம்சங்கள் பயனர்கள் தமது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதில் மேலதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க உதவுகின்றன. 

இது குறித்து Samsung Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. SangHwa Song கருத்துத் தெரிவிக்கையில், Galaxy A57 5G மற்றும் A37 5G ஆகியவற்றின் அறிமுகத்தின் மூலம், அர்த்தமுள்ள AI-தொழில்நுட்ப புத்தாக்கங்களை அதிகளவிலான இலங்கை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு வருகிறோம். மேம்பட்ட தொழில்நுட்பத்தை அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதற்கான எமது அர்ப்பணிப்பை இந்தச் சாதனங்கள் பிரதிபலிக்கின்றன. அத்துடன், புத்திசாலித்தனமான மற்றும் இலகுவான மொபைல் தீர்வுகளின் ஊடாகப் பயனர்கள் தங்களின் அன்றாட அனுபவங்களை மேம்படுத்திக்கொள்ள இது வலுவூட்டும்,” என்று குறிப்பிட்டார். 

கவர்ச்சிகரமான பல நிறங்களில் கிடைக்கப்பெறும் Galaxy A57 5G மற்றும் Galaxy A37 5G ஆகிய சாதனங்கள், அழகையும் செயல்திறனையும் ஒருங்கே கொண்டுள்ளன. இவை சிறந்த செயல்திறன் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு ஆகிய இரண்டிற்கும் மதிப்பளிக்கும் பயனர்களை வெகுவாகக் கவரும் வகையில் அமைந்துள்ளன. 

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Galaxy A57 5G மற்றும் Galaxy A37 5G ஆகியவற்றை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள், இரண்டு ஆண்டுகளுக்கான முன்பக்க திரை மாற்றீட்டு சலுகையையும், இரண்டு ஆண்டுகளுக்கான பின்பக்க கண்ணாடி மாற்றீட்டு காப்புறுதியையும் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், Samsung Easy Pay வசதி மூலம் 24 மாதங்கள் வரையிலான இலகுவான மாதாந்த தவணைக் கட்டண முறையில் இந்தச் சாதனங்களை வாடிக்கையாளர்கள் மிக வசதியாகத் சொந்தமாக்கிக் கொள்ள முடியும். 

இந்த அறிமுகத்தின் மூலம், இலங்கையில் உள்ள பரந்த அளவிலான வாடிக்கையாளருக்கு அர்த்தமுள்ள புத்தாக்கங்களைக் கொண்டு சேர்ப்பதற்கான தனது அர்ப்பணிப்பை Samsung மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. Galaxy A57 5G மற்றும் Galaxy A37 5G ஆகிய சாதனங்கள் வெறும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மட்டுமல்ல, அவை அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கவும், படைப்பாற்றலை மேம்படுத்தவும், வரும் ஆண்டுகளில் நம்பகமான செயல்திறனை வழங்கவும் வடிவமைக்கப்பட்ட புத்திசாலித்தனமான கூட்டாளிகளாகும். 

மேலதிக விபரங்களுக்கு, வாடிக்கையாளர்கள் தமக்கு அருகிலுள்ள Samsung அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவரை அணுகலாம் அல்லது 011 7267864 ஊடாக Samsung Sri Lanka வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Comments
0

MOST READ

காணொளி
தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!