Header Logo
Mogo Academy

வணிகம்
டோக்கியோ சீமெந்து குழுமத்தினால் நியுசிலாந்து ரக்பியுடன் இணைந்து 2026 ஆம் ஆண்டின் ‘Ivuru Rakina Pawuru’ ஆரம்பம்

May 7, 2026 - 02:05 PM -

0

டோக்கியோ சீமெந்து குழுமத்தினால் நியுசிலாந்து ரக்பியுடன் இணைந்து 2026 ஆம் ஆண்டின் ‘Ivuru Rakina Pawuru’ ஆரம்பம்
Mobitel inner

டோக்கியோ சீமெந்து குழுமம், மஹாவலி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து, Ivuru Rakina Pawuru திட்டத்தின் 2026 ஆம் ஆண்டின் மர நடுகைத் திட்டத்தை கண்டி பொல்கொல்ல வாவியின் அருகில் ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த 85 கிலோகிராம்களுக்கு உட்பட்ட நியுசிலாந்து ரக்பி அணியின் அங்கத்தவர்களும் இந்தத் திட்டத்தில் பங்கேற்றிருந்தனர். மகாவலி ஆற்றின் கரையோரப் பகுதிகளை பாதுகாத்து மீள நிறுவுவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்த இந்தத் திட்டம், அதன் பெறுமதிக்காக சர்வதேச சென்றடைவை பெற்றுள்ளதையும் அவதானிக்க முடிந்தது. 

மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, மத்திய சூழல் அதிகாரசபை, இலங்கை ரக்பி சம்மேளனத்தின் உயரதிகாரிகள், கண்டி, பொல்கொல்ல மாதிரி பாடசாலையின் மாணவர்கள் மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களுடன் நியுசிலாந்து 85 கிலோகிராம்களுக்கு உட்பட்ட ரக்பி அணி வீரர்களும் பங்கேற்று, 100 கும்புக் மரக் கன்றுகளை நாட்டியிருந்தனர். 

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் Ivuru Rakina Pawuru நிகழ்ச்சித் திட்டம், 2017 ஆம் ஆண்டு முதல் சுற்றாடல் அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. மருத மரம் மற்றும் இலுப்பை போன்ற தாவரக் கன்றுகளை மகாவலி கரையோரப் பகுதிகளில் நிறுவி, மீள்வனாந்தரச் செய்கையை மேற்கொள்வதில் பங்களிப்பு வழங்கி, முக்கியமான நீரேந்து பகுதிகளின் நிலைபேறான முகாமைத்துவத்தை பேணுவதில் ஆதரவளிக்கப்படுகிறது. 

டோக்கியோ சீமெந்து குழுமம் தனது வனாந்தர மர வளர்ப்பு செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்கும் வகையில் Ivuru Rakina Pawuru திட்டம் அமைந்துள்ளது. மருத மரம், கிரஞ்ச, இலுப்பை மற்றும் தெட்ட மரம் போன்ற மருத்துவ பெறுமதிகளைக் கொண்ட காட்டு மரங்களை விநியோகிப்பதில் திருகோணமலை மற்றும் மஹியங்கனை போன்ற பகுதிகளில் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்து வனாந்தர மரக் கன்றுகள் வளர்ப்பகங்கள் ஈடுபட்டுள்ளன. இயற்கை உயிரியல் பரம்பலை மீள நிறுவுவதில் இந்த தாவர வகைகள் உதவுவதுடன், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதிலும் பங்களிப்பு வழங்கும். அவை பல்வேறு சமூக மற்றும் அரச ஸ்தாபனங்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படுவதுடன், மகாவலி வலயங்கள் அடங்கலாக, நாடளாவிய ரீதியில் மீள் வனாந்தரச் செய்கை செயற்பாடுகளுக்காக அவை பயன்படுத்தப்படுகின்றன. 

நிறுவனத்தின் பரந்தளவு நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலின் அங்கமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. அதனூடாக, சமூக நலன்பேணல் மற்றும் சூழல் பாதுகாப்பு செயற்பாடுகளை தனது கூட்டாண்மை செயற்பாடுகளில் வெற்றிகரமாக சேர்த்துள்ளது. தேசத்தை, மக்களை மற்றும் சூழலை வளப்படுத்தும் தமது தொடர்ச்சியான செயற்பாடுகள், இது போன்ற தொலைநோக்குச் செயற்பாடுகளினூடாக வலுவூட்டப்பட்டுள்ளதுடன், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னணி பங்காளராக டோக்கியோ சீமெந்து குழுமம் தம்மை நிலைநிறுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara