Header Logo

வணிகம்
SDB வங்கியின் வணிக விருதுகள் 2025 - “வளர்ச்சி மற்றும் மாற்றம் ஆகியவற்றுக்கான வழிகாட்டிகளைப் போற்றிப் பாராட்டும் நிகழ்வு”

May 7, 2026 - 02:08 PM -

0

SDB வங்கியின் வணிக விருதுகள் 2025 - “வளர்ச்சி மற்றும் மாற்றம் ஆகியவற்றுக்கான வழிகாட்டிகளைப் போற்றிப் பாராட்டும் நிகழ்வு”

SDB வங்கி வணிக விருதுகள் 2025 (Business Awards) என்ற தனது பிரபலமான விருது வழங்கல் நிகழ்வை அண்மையில் நடாத்தியுள்ளது. “வளர்ச்சி மற்றும் மாற்றம் ஆகியவற்றுக்கான வழிகாட்டிகளைப் போற்றிப் பாராட்டுதல்” (Celebrating Catalysts of Growth & Change) என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இந்த ஆண்டில் (2025) மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ள தனது ஊழியர்களின் மிகச் சிறந்த பங்களிப்புக்களைக் கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. பணிச்சூழலில் உத்வேகத்தை வளர்த்து, நிறுவனத்தின் வெற்றியை முன்னெடுத்துச் செல்வதில் தனது ஊழியர்கள் ஆற்றுகின்ற விலைமதிப்பற்ற பங்களிப்புக்களுக்கு அங்கீகாரமளிப்பதில் வங்கியின் அர்ப்பணிப்பை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகின்றது. 

கடந்த ஆண்டில் மிகச் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய ஆனமடுவ கிளைக்கு ஒட்டுமொத்தத்தில் மிகச் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய கிளைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், மிகவும் போற்றத்தக்க வகையில் அர்ப்பணிப்பு மற்றும் சாதனையை இந்தக் கிளை நிலைநாட்டியுள்ளது. இதை விட, மிகச் சிறப்பாகச் செயற்பட்ட பிராந்தியங்களுக்கான 1 ம் , 2 ம் , மற்றும் 3 ம் இடங்களை முறையே வட மத்திய பிராந்தியம், ஊவா பிராந்தியம், மற்றும் மெட்ரோ 1 பிராந்தியம் ஆகியன அங்கீகரிக்கப்பட்டன. வங்கியின் மத்தியில் அணிகளின் கூட்டு முயற்சி மற்றும் அர்ப்பணிப்பை அவை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன. இவ்விருதுகள் நிகழ்வு இடம்பெற்ற மாலைப்பொழுதில் 35 க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டதுடன், பக்க ஆதரவாகச் செயற்பட்ட பணிப்பிரிவுகளுக்கும் பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டன. 

SDB வங்கியின் அத்திவாரமாக மாறியுள்ள வருடாந்த வணிக விருதுகள், மிகச் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்துகின்ற பணியாளர்களுக்கு அங்கீகாரமளித்து, போற்றிப் பாராட்டுவதில் அதன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றன. இவ்விருதுகள் ஊழியர்களுக்கு வலுவூட்டி, புத்தாக்கம் மிக்க கலாச்சாரமொன்றை வளர்த்து, தொடர்ந்தும் மிகச் சிறப்பாகச் செயற்படுவதற்கு அவர்களுக்கு உத்வேகமளிக்கின்றன. 

SDB வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்/தலைமை நிர்வாக அதிகாரி கபில ஆரியரத்ன அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: 

“எமது ஊழியர்களே SDB வங்கியை முன்னெடுத்துச் செல்வதில் பெரும்பலமாகவுள்ளனர். எமது சமூகத்திற்கு சேவைகளை வழங்கி, எமது இலக்குகளை எட்டுவதற்கு அவர்களுடைய அர்ப்பணிப்பு, திறமை, மற்றும் கடின உழைப்பு ஆகியனவே எமக்கு இடமளிக்கின்றன. அவர்களுடைய வெற்றிகளைப் போற்றிப் பாராட்டி, அங்கீகாரம் மற்றும் பாராட்டுதல் கொண்ட கலாச்சாரமொன்றைத் தோற்றுவிப்பதில் எமது அர்ப்பணிப்பை வருடாந்த வணிக விருதுகள் 2025 நிகழ்வு பிரதிபலிக்கின்றது. இந்நிகழ்வை தொடர்ந்தும் பிரமாண்டமாக முன்னெடுப்பதற்கு நாம் ஆவலாக உள்ளதுடன், ஒட்டுமொத்த நிறுவனமும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்வாக மாற்றியமைக்கும் வழிமுறைகளை முன்னெடுப்போம்.” 

“நீங்கள் மதிக்கப்படுகின்ற வங்கி” (The Bank Where You Are Valued) என்ற தனது நிறுவன மகுட வாசகத்தை தொடர்ந்தும் உண்மையாகக் கட்டிக்காத்து வருகின்ற SDB வங்கி, தனது ஊழியர்களின் நலன் மற்றும் மேம்பாடு ஆகியன தொடர்பில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ள இந்நிகழ்வினூடாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது. வருடாந்த வணிக விருதுகள் 2025 போன்ற முயற்சிகள் மூலமாக, அர்ப்பணிப்பு மிக்க தனது ஊழியர்கள் பணிக்குழாத்தின் மத்தியில் தமது நிறுவனத்தையிட்டு பெருமையும், உரிமையும் மிக்க உணர்வு கொண்டவர்களாக வளர்த்து, சிறந்த செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கின்ற ஒரு பணியிடமாகக் கட்டியெழுப்பும் தனது இலக்கினை SDB வங்கி தொடர்ந்தும் உறுதிப்படுத்தி வருகின்றது. 

SDB வங்கி குறித்த விபரங்கள்: 

ஒவ்வொருவரினதும் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட, வாடிக்கையாளரை மையப்படுத்திய மற்றும் விரிவான ஆதரவை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ள, எதிர்காலத்திற்கு முகங்கொடுக்கத் தயாராகவுள்ள வங்கியான SDB வங்கி, கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சபையில் நிரற்படுத்தலுடன், இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட, அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகத் திகழ்வதுடன், BB +(lka) என்ற Fitch Rating கடன் தர மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. நாடளாவியரீதியிலுள்ள 94 கிளைகளின் வலையமைப்பினூடாக, நாடெங்கிலுமுள்ள தனது தனிநபர், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வர்த்தக வங்கிச்சேவை வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதிச் சேவைகளை இவ்வங்கி வழங்கி வருகின்றது. சூழல், சமூகம், மற்றும் நிர்வாக ஆட்சி (Environmental, Social, and Governance - ESG) கோட்பாடுகள் SDB வங்கியின் பண்பாடுகளில் ஆழமாக உட்பொதிந்துள்ளதுடன், நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகள் மூலமாக உள்ளூர் சமூகங்கள் மற்றும் வர்த்தகங்களை மேம்படுத்துவதில் மிகவுறுதியான கவனம் செலுத்தியுள்ளது. 

இலங்கையை புதிய உச்சங்களுக்கு இட்டுச்செல்லும் நோக்குடன், குறிப்பாக பெண்களுக்கு வலுவூட்டல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் நிலைபேணத்தக்க அபிவிருத்தி, மற்றும் டிஜிட்டல் ரீதியாக அனைவரையும் அரவணைத்து வாய்ப்பளித்தல் ஆகியவற்றில் இவ்வங்கி அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது.

Comments
0

MOST READ

காணொளி
தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!