Header Logo
Mogo Academy

வணிகம்
அமானா டகாஃபுல் இலங்கையின் அதிக விருதுகளை வென்ற காப்புறுதி நிறுவனமாக தொடர்ச்சியாக 3ஆவது ஆண்டாகவும் தெரிவு

May 7, 2026 - 02:48 PM -

0

அமானா டகாஃபுல் இலங்கையின் அதிக விருதுகளை வென்ற காப்புறுதி நிறுவனமாக தொடர்ச்சியாக 3ஆவது ஆண்டாகவும் தெரிவு
Mobitel inner

இலங்கையின் அதிகளவு விருதுகளை வென்ற காப்புறுதி நிறுவனமாக அமானா டகாஃபுல் இன்சூரன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது. LMD சஞ்சிகையினால் தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். நிறுவனத்தின் ஆயுள் மற்றும் பொது காப்புறுதி வியாபாரங்களில் நிறுவனம் தொடர்ச்சியாக காண்பிக்கும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த கௌரவிப்பு அமைந்திருப்பதுடன், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தீர்வுகள், தொழிற்பாட்டு சீர்மை மற்றும் தொடர்ச்சியான புத்தாக்கம் ஆகியவற்றையும் இந்த கௌரவிப்பு மேலும் உறுதி செய்துள்ளது. 

கடந்த காலங்களில் அமானா டகாஃபுல் தனது சேவை வழங்கல்கள், டிஜிட்டல் ஆற்றல்களில் முதலீடு போன்றவற்றில் மேம்படுத்தி சந்தை நிலையை வலிமைபப்டுத்தியுள்ளது. பரந்த இலங்கையர்களுக்கு காப்புறுதி அணுகலையும் விரிவாக்கம் செய்துள்ளது. 

இந்த கௌரவிப்பு தொடர்பில் பொது காப்புறுதி பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிவ கார்த்திகன் குறிப்பிடுகையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக சிறந்த சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக எமது செயற்பாடுகளில் நாம் செலுத்தும் சீர்மையான கவனத்தை இந்த கௌரவிப்பு பிரதிபலித்துள்ளது. செயன்நிலை மேம்படுத்தல்க்ள, டிஜிட்டல் ஆற்றல்கள் மற்றும் சேவைச் சிறப்பு ஆகியவற்றில் நாம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் முதலீடுகளினூடாக, உறுதித் தன்மை மற்றும் பதலளிக்கும் திறன் ஆகியன வலிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சகல பிரிவுகளிலும் எமது வாடிக்கையாளர்களின் அதிகரித்துச் செல்லும் எதிர்பார்ப்புகளை நாம் நிவர்த்தி செய்வதை உறுதி செய்வதாக அமைந்திருக்கும்.” என்றார். 

ஆயுள் காப்புறுதி பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிஹான் ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாம் காண்பிக்கும் முயற்சிகளை இந்த கௌரவிப்பு பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதுடன், ஆயுள் மற்றும் பொது காப்புறுதி வியாபாரங்களில் எமது ஆற்றல்களை தொடர்ச்சியாக மேம்படுத்துகின்றமையையும் வெளிப்படுத்தியுள்ளது. நாம் தொடர்ந்து முன்னேறுகையில், அணுகல் திறனை மேம்படுத்துவது, டிஜிட்டல் புத்தாக்கத்தை பின்பற்றுவது மற்றும் இலங்கையர்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளுக்கு பொருத்தமான வகையில் எமது தீர்வுகள் அமைந்திருப்பதை உறுதி செய்வது போன்றவற்றில் நாம் கவனம் செலுத்துகிறோம். அத்துடன் உயர் சேவைத் தரம் மற்றும் தங்கியிருக்கும் திறனையும் உறுதி செய்கிறோம்.” என்றார். 

குறிப்பாக, டிஜிட்டல் சிறப்புக்காக பெருமளவு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. அதனூடாக நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றியமைப்பு பயணத்தில் நிறுவனம் காண்பிக்கும் தொடர்ச்சியான முன்னேற்றம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. தொழில்னுட்ப ரீதியில் செயற்படுத்தப்படும் தீர்வுகள், செயன்முறை தன்னியக்கமயப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்தல் போன்றவற்றில் அமானா டகாஃபுல் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள், ஆயுள் மற்றும் பொது காப்புறுதி வியாபாரங்களில் அணுகல், வினைத்திறன் மற்றும் சேவை விநியோகம் ஆகியவற்றை வலிமைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியிருந்தன. 

தொழிற்துறையினுள் அமானா டகாஃபுல் நிறுவனத்தின் நிலையை இந்த கௌரவிப்புகள் மேலும் உறுதி செய்துள்ளன. மாற்றமடைந்து வரும் சூழலுக்கேற்ப இயங்குவது மற்றும் வினைத்திறனை தக்கவைத்துக் கொள்வது போன்றன வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சகல இலங்கையரையும், ஒன்றென கருதும்.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara