Header Logo
SLIC
ஜோதிடம்
இந்த 4 ராசி பெண்கள் அதி புத்திசாலிகள்!

May 7, 2026 - 03:42 PM

இந்த 4 ராசி பெண்கள் அதி புத்திசாலிகள்!
Mobitel Inner 1278
EDEX Inner

ஜோதிடசாஸ்திரத்தின்படி 4 ராசி பெண்கள் மிகவும் அதிபுத்திசாலிகள். காதலில் இவர்களை ஏமாற்றவே முடியதாம். அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். 

குடும்ப உறவுகளில் உண்மைத்தன்மை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல. அது ஒரு பிணைப்பின் அஸ்திவாரம். மிகவும் முக்கியமாக காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் துணைகளுக்கு இடையே வெளிப்படைத்தன்மை இருப்பது அவசியம். ஜோதிட சாஸ்திரத்தின்படி சில ராசிப் பெண்கள் பொய்களைக் கண்டறிவதில் வல்லவர்கள். அவர்களிடம் உண்மையை மறைப்பது என்பது உங்கள் உறவின் அஸ்திவாரத்தை நீங்களே ஆட்டுவிப்பதற்குச் சமம்.மிகவும் கூர்மையான உள்ளுணர்வும், ஏமாற்றங்களை நொடியில் கண்டுபிடிக்கும் திறனும் கொண்ட அந்த 4 ராசிப் பெண்கள் யார்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம். 

விருச்சிகம் 

விருச்சிக ராசிப் பெண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு உண்மையை விட நேர்மை தான் மிக முக்கியம். புளூட்டோ கிரகத்தின் ஆதிக்கத்தில் இருப்பதால், எதையும் ஆழமாக ஆராயும் குணம் இவர்களிடம் இயல்பிலேயே இருக்கும். இவர்களிடம் ஒருவர் பொய் சொல்லும் போது, அவர்களின் உடல் மொழி, பேசும் விதம் மற்றும் கண்களில் ஏற்படும் மாற்றத்தை வைத்தே உண்மையை மோப்பம் பிடித்து விடுவார்கள். இவர்களிடம் ஒரு முறை பொய் சொல்லி பிடிபட்டால், மீண்டும் இவர்களின் நம்பிக்கையைப் பெறுவது என்பது மிகவும் கடினம். எனவே, கசப்பான உண்மையாக இருந்தாலும் இவர்களிடம் நேரடியாகச் சொல்லிவிடுவது உங்கள் உறவிற்குப் பாதுகாப்பானது. 

கன்னி 

கன்னி ராசி பெண்கள் எதையும் தர்க்கரீதியாக அணுகக்கூடியவர்கள். நீங்கள் ஒரு பொய்யைச் சொல்லும் போது, அந்தப் பொய்யில் இருக்கும் முரண்பாடுகளை மிக எளிதாகக் கண்டறிந்து விடுவார்கள். விவரங்களை கவனிப்பதில் இவர்கள் கில்லாடிகள். நீங்கள் நேற்று சொன்னதற்கும் இன்று சொல்வதற்கும் சிறு வித்தியாசம் இருந்தால் கூட, அதை வைத்தே நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்வார்கள். இவர்களது அறிவுத்திறனை மதிக்காமல் பொய் சொல்வது, இவர்களுக்குச் செய்யப்படும் பெரும் அவமரியாதையாக இவர்கள் கருதுவார்கள் என்பதால் இந்த ராசிப் பெண்களிடம் கொஞ்சம் விழிப்புடன் இருங்கள். 

மீனம் 

மீன ராசிப் பெண்கள் மிகவும் மென்மையானவர்கள் என்று நீங்கள் நினைத்தால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். அவர்கள் பிறருடைய மன அதிர்வுகளை உணரும் அபாரமான சக்தியைக் கொண்டவர்கள். ஒருவர் பேசும் போது அவர் மனதிற்குள் என்ன நினைக்கிறார் என்பதை இவர்களின் ஆறாம் அறிவு காட்டிக் கொடுத்துவிடும். வார்த்தைகளில் நீங்கள் என்னதான் ஜாலம் செய்தாலும், உங்கள் ஆழ்மனதில் இருக்கும் நேர்மையின்மையை இவர்களின் உள்ளுணர்வு சட்டென்று பிடித்துவிடும். ஏமாற்றத்தை உணர்ந்தால் இவர்கள் அமைதியாக விலகிச் செல்வார்களே தவிர, அதை எளிதில் மறக்க மாட்டார்கள். 

சிம்மம் 

சிம்ம ராசிப் பெண்கள் ராஜ வம்சத்து குணங்களைக் கொண்டவர்கள். விசுவாசமும் நேர்மையும்தான் இவர்களின் தாரக மந்திரம். இவர்கள் தங்கள் துணையிடம் எதைக் கொடுத்தாலும், பதிலுக்கு எதிர்பார்ப்பது உண்மையை மட்டுமே. இவர்களிடம் பொய் சொல்வது இவர்களின் கௌரவத்திற்கு இழுக்கு என்று இவர்கள் கருதுவார்கள். ஒருமுறை பொய் சொல்லி இவர்களிடம் சிக்கினால், இவர்களின் சீற்றம் எரிமலை போல வெடிக்கும். நேர்மையாக இருப்பவர்களைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும் இவர்கள், வஞ்சகத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். 

காதலில் இவர்களை ஏமாற்றி விடாதீர்கள், 

மேற்கண்ட இந்த 4 ராசி பெண்களும் நேர்மையை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகக் கருதுகிறார்கள். காதலாக இருந்தாலும், நட்புரீதியாக இருந்தாலும் இவர்களிடம் ஒளிவுமறைவின்றி பழகுவது உங்கள் பிணைப்பை மேலும் பலப்படுத்தும். எனவே, இவர்களின் மதிநுட்பத்தைக் குறைத்து மதிப்பிடாமல், எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பதே புத்திசாலித்தனம்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278