May 7, 2026 - 05:10 PM -
0
வங்கி துறையில் அதன் சிறந்த செயல்திறன் மற்றும் தொடர்ச்சியான முன்னணி நிலையை அங்கீகரிக்கும் வகையில், இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது மீண்டும் ஒருமுறை இலங்கையின் சிறந்த வங்கி என அமெரிக்காவை தளமாகக் கொண்ட Global Finance சஞ்சிகையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க கொமர்ஷல் வங்கியானது இந்த மதிப்புமிக்க விருதை இம்முறை 24வது தடவையாக பெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த அங்கீகாரமானது Global Finance சஞ்சிகையின் உலகின் மிகச்சிறந்த வங்கிகள் 2026 விருதுகளின் ஒரு பகுதியாகும். இவ்விருதுகள், ஆப்பிரிக்கா, ஆசிய-பசிபிக், கரீபியன், மத்திய அமெரிக்கா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட நாடுகள், பிரதேசங்கள் மற்றும் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் வங்கிகளை அங்கீகரிக்கின்றன. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், கொமர்ஷல் வங்கியானது உலகின் முன்னணி வங்கி நிறுவனங்களான Commonwealth Bank of Australia (அவுஸ்திரேலியா), Industrial and Commercial Bank of China (சீனா), Bank of China (ஹொ ங்காங்), ANZ Bank (நியூசிலாந்து), DBS Bank (சிங்கப்பூர்), MUFG Bank (ஜப்பான்), State Bank of India (இந்தியா), City Bank (பங்களாதேஷ்), Hana Bank (தென் கொரியா) மற்றும் Techcombank (வியட்நாம்) ஆகியவற்றுடன் இணைந்து நிற்கிறது. இவ்வங்கிகள் தத்தமது நாடுகளில் சிறந்த வங்கிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விருது தொடர்பாக கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான சனத் மனதுங்க கருத்து தெரிவிக்கையில், இந்த விருதை 24 முறை வென்றிருப்பது இலங்கையின் பொருளாதாரப் பயணத்தின் சூழலில் முக்கியத்துவமிக்கதும் நோக்கமுடையதுமான சாதனையாகும் என்று தெரிவித்துள்ளார். sபல ஆண்டுகளாக மிக உயர்ந்த மட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட சிறப்பை இந்த அங்கீகாரம் பிரதிபலிப்பதால், இது மிகவும் அர்த்தமிக்கதாகும், என்று அவர் தெரிவித்தார்.
இது வெறும் தரநிலைகளை பேணுவதற்கானதல்ல. சவால்கள் மற்றும் மீட்பு காலங்களின் சுற்றுப்பாதையில், வாடிக்கையாளர்கள், வர்த்தகங்கள் மற்றும் பரந்த பொருளாதாரத்தை ஆதரிக்கும் வங்கியின் திறனை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கானதாகும். உலகளாவிய மற்றும் உள்நாட்டு; நிச்சயமற்ற சூழ்நிலைகளின் மத்தியில் இலங்கை தனது பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும்போது, இந்த அங்கீகாரமானது எமது நிலைபெறுதகுதன்மை, எதிர்நோக்கும் அணுகுமுறை மற்றும் மாறும் சூழலில் பதிலளிக்கும் திறனை வலியுறுத்துகிறது.
திரு. மனதுங்க தெரிவிக்கையில், வங்கியின் சமீபத்திய செயல்திறன் வலுவான நிதி அடித்தளங்கள், ஒழுங்குபடுத்தப்பட்ட இடர் முகாமைத்துவம் மற்றும் புதுமையில் தொடர்ச்சியான முதலீடு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை பிரதிபலிக்கிறது. கொமர்ஷல் வங்கி தொடர்ந்து சொத்துகள், கடன்கள் மற்றும் வைப்பு தொகைகளில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்து வருவதுடன், துறையில் முன்னணியில் இருக்கும் இலாபகரத்தன்மை, செயல்திறன் மற்றும் சொத்து தரத்தையும் பராமரித்து வருகிறது. பங்கு மீதான வருமானம் 21% க்கும் மேல் உயர்ந்துள்ளது. செலவு- வருமான விகிதங்கள் துறையில் மிகக் குறைந்த அளவுகளில் ஒன்றாக மேம்பட்டுள்ளன. மேலும் செயல்படாத கடன் விகிதங்கள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. இது விவேகமான கடன் முகாமைத்துவமும் நிலைபெறுதகுதன்மையும் வங்கியில் நிலவுவதை வலியுறுத்துகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 272 தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
