Header Logo
SLIC
உலகம்
அதிரடியாக உயர்ந்த மசகு எண்ணெய் விலை

May 8, 2026 - 06:29 AM

 அதிரடியாக உயர்ந்த மசகு எண்ணெய் விலை
Mobitel Inner 1278
EDEX Inner

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் மீண்டும் மோதல் இடம்பெற்றுள்ள நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 

அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 2.64 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 102.7 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது. 

அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் சுமார் 3 சதவீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 97 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. 

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று அமெரிக்கக் கடற்படை கப்பல்களை ஈரான் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், அதற்குப் பதிலடியாக ஈரானிய இராணுவத் தளங்கள் மீது "தற்காப்புத்" தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. 

அதேவேளையில், அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான், ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே தாங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

அதேவேளை ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவு உட்பட வளைகுடா கடலோரப் பகுதிகளில் பல வெடிச்சம்பவங்கள் நிகழ்ந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

மேலும், பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) அருகே ஈரானிய ஆயுதப் படைகள் எதிரிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 

இதற்கிடையில், போர் நிறுத்தம் இன்னும் அமுலில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278