Header Logo
SLIC
உலகம்
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் 2 பேருக்கு மரண தண்டனை!

May 8, 2026 - 01:03 PM

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் 2 பேருக்கு மரண தண்டனை!
Mobitel Inner 1278
EDEX Inner

சீனாவில் ஊழல் குற்றசாட்டுகள் காரணமாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் வெய்ஃபெங்ஹே (72) மற்றும் லி ஷாங்ஃபு (68) ஆகியோருக்கு அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனையை விதித்துள்ளது. 

இவர்கள் இருவரும் லஞ்சம் வாங்கியதற்காகவும், வழங்கியதற்காகவும் தண்டிக்கப்பட்டனர். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையில் இவர்கள் இருவருக்கும் இராணுவத்தின் ஏவுகணை படைப்பிரிவில் முக்கியமான பொறுப்பில் தலைமை தங்கியவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. 

சீன அரசின் படி இரண்டு ஆண்டுகள் இடைக்கால தடை வழங்கி அவர்களின் நடத்தைகளை பொறுத்தவாறு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கப்படும். 

மேலும் தற்போதைய தீர்ப்பில் இவர்களின் அரசியல் உரிமைகள் பறிக்கப்படுவதோடு, சொத்து சம்பந்தப்பட்ட அனைத்தையுமே பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் 2012 ஆண்டு பதவியேற்றது முதல் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இராணுவத்தில் நிலவும் அனைத்து விதமான ஊழலை கடுமையாக ஒழித்து வருகிறார். 

தங்களின் கட்டுப்பாட்டுக்கு எதிராக இருப்பவர்களையும் கீழ்ப்படியாமை இருப்பவர்களையும் தண்டித்து இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்திருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. 

இத்தகைய நடவடிக்கையின் மூலம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தி வருவதாகவும், கட்சி நிறுவனர் மா சோடங்கிற்கு பிறகு வலிமை வாய்ந்த அதிகாரியாகவும், நல்ல ஒரு தலைவராக பணியாற்றி வருகிறார் என்பதாக தெரிவிக்கப்படுகிறது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278