Header Logo
Mogo Academy

வணிகம்
மதிநுட்பமான தொழில்னுட்பத்தின் எதிர்காலத்தை நோக்கி பொறியியலாளர்களை வழிநடத்தும் இலங்கையின் முதலாவது AI- ஒருங்கிணைந்த பொறியியல் கற்கை

May 8, 2026 - 02:02 PM -

0

மதிநுட்பமான தொழில்னுட்பத்தின் எதிர்காலத்தை நோக்கி பொறியியலாளர்களை வழிநடத்தும் இலங்கையின் முதலாவது AI- ஒருங்கிணைந்த பொறியியல் கற்கை
Mobitel inner

இலங்கையின் நம்பிக்கையை வென்ற தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT-MOBITEL, நாட்டின் முதலாவது Bachelor of Science of Engineering Honours in Electronic and Intelligent Systems Engineering கற்கையின் தொழில்னுட்ப பங்காளராக பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்துள்ளது. மதிநுட்பமான தொழில்னுட்பங்களின் எதிர்காலத்தை நோக்கி அடுத்த தலைமுறை பொறியியலாளர்களை தயார்ப்படுத்தும் வகையில் இந்த கற்கையுடன் கைகோர்க்க SLT-MOBITEL முன்வந்துள்ளது. 

2026 ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ள இந்த முன்னோடித் திட்டமானது, மின்னணுவியலை, AI உடன் ஒருங்கிணைப்பதற்கும், மதிநுட்பமான தொழில்நுட்பங்களின் அடுத்த கட்டத்தை வடிவமைப்பதற்கு பட்டதாரிகளைத் தயார்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆழமான மின்னணுப் பொறியியல் அறிவை மேம்பட்ட AI, Embedded systems மற்றும் Automation ஆகியவற்றுடன் இணைப்பதன் மூலம், இந்த பட்டப்படிப்பானது உயர்கல்வித் துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. 

மாணவர்கள் Robotics, quantum computing, cloud-based AI மற்றும் Sustainable technology உள்ளிட்ட அதிநவீன துறைகளில் அனுபவத்தைப் பெறுவதுடன், செயற்திட்ட அடிப்படையிலான கற்றல், தொழிற்றுறைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள். இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பதற்காக, பல்கலைக்கழகமானது பொறியியல் பீடத்தில் PFLOPS-வகுப்பு GPU கிளஸ்டர் உள்ளிட்ட மேம்பட்ட AI stacks களை உருவாக்கி வருகின்றது. மேலதிகமாக, AI, டிஜிட்டல் உருமாற்றம் மற்றும் தேசிய அளவிலான தொழில்நுட்பத் திட்டங்களில் SLT-MOBITEL கொண்டுள்ள நிபுணத்துவமானது மாணவர்களுக்கு பெறுமதிமிக்க நிஜ உலக அனுபவத்தை வழங்கும். 

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும், வர்த்தகங்களை வலுப்படுத்தும் மற்றும் தேசிய முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்லும் புத்தாக்கங்களுக்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பின் ஒரு இயற்கையான விரிவாக்கமே, அடுத்த தலைமுறை AI-ready பொறியியலாளர்களை உருவாக்குவதாகும். அறிவுப் பகிர்வு, தொழிற்றுறை அனுபவம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாக பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் SLT- MOBITEL ஏற்கனவே கொண்டுள்ள ஈடுபாட்டைக் கட்டியெழுப்பும் வகையில், இந்த AI- ஒருங்கிணைந்த பட்டப்படிப்பின் மூலம் அந்தப் பங்காளர் உறவு மேலும் வலுப்படுத்தப்படும். பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பங்காளர் என்ற வகையில், பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஆதரவளித்தல், தொழிற்றுறை உள்ளகப் பயிற்சிகளை சாத்தியமாக்குதல் மற்றும் மின்னணுவியல், உட்பொதிக்கப்பட்ட நுண்ணறிவு மற்றும் தன்னியக்கமாக்கல் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் நிஜ உலகத் தீர்வுகளை கூட்டாக உருவாக்குவதன் மூலம், கற்கும் பயண நெடுகிலும் AI தொழில்நுட்பத்தைப் புகுத்துவதற்கு SLT-MOBITEL உதவும். 

இன்றுவரை, SLT-MOBITEL இலங்கையின் உயர்கல்வித் துறைக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகின்றது. பல்கலைக்கழகங்களுக்கான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்தல், e-learning தளங்களைச் சாத்தியமாக்குதல் மற்றும் கல்வி நிறுவனங்களுடனான கூட்டுச் செயற்திட்டங்கள் ஊடாக புத்தாக்கங்களை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளை அது முன்னெடுத்துள்ளது. இலங்கையின் அடுத்த தலைமுறை பொறியியலாளர்களையும் புத்தாக்க சிந்தனையாளர்களையும் வலுப்படுத்துவதற்கும், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் நாடு முன்னணியில் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த முயற்சி மேலும் வெளிப்படுத்துகிறது. 

இலங்கையை Intelligent systems கல்வியில் முன்னணியில் நிலைநிறுத்துவதுடன், பல்வேறு துறைகளுக்கான AI-ஆதாரத்திலான தீர்வுகளை உருவாக்குவதற்கு மாணவர்களுக்கு வலுவூட்டும் வகையில் இந்தக் கூட்டாண்மை அமைந்திருக்கும். குறிப்பாக, தொலைத்தொடர்பு மற்றும் வலையமைப்பு, உற்பத்தித் துறை மற்றும் Industry 4.0, Medtech, விவசாயம் மற்றும் Precision farming, எரிசக்தி மற்றும் பயன்பாடுகள், போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலி, நிதிச் சேவைகள், பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு, சில்லறை விற்பனை மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பங்கள், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, கல்வி மற்றும் கற்றல் தொழில்நுட்பங்கள், Smart cities மற்றும் உட்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் நிலைபேறான தன்மையை மையமாகக் கொண்ட புத்தாக்கங்கள் ஆகிய துறைகளில், பொறுப்புணர்வு மிக்க மற்றும் அறநெறி சார்ந்த AI பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளை உருவாக்க இத்திட்டம் வழிவகுக்கின்றது.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara