Header Logo

வணிகம்
இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சிநிரலில் பாம் எண்ணெயின் பொருளாதார முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியுள்ள POIA

May 8, 2026 - 04:07 PM -

0

இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சிநிரலில் பாம் எண்ணெயின் பொருளாதார முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியுள்ள POIA

இலங்கையின் பொருளாதாரம், அபிவிருத்தி நிகழ்ச்சிநிரல் மற்றும் நீண்ட கால விவசாய உற்பத்தித்திறன் ஆகியவற்றில் பாம் எண்ணெய்த் தொழிற்துறையின் பொருளாதார விளைவு குறித்து கலந்துரையாடுவதற்காக கொழும்பில் ஊடக வட்டமேசை கலந்துரையாடல் நிகழ்வொன்றை பாம் எண்ணெய் தொழிற்துறை சங்கம் (POIA) அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. 

பெருந்தோட்டம், விவசாயம், ஊட்டச்சத்து, இயற்கைப் பல்லுயிரினம், மற்றும் தொழிற்துறைத் தலைமைத்துவம் ஆகிய துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நிபுணர்களைக் கொண்ட அணியொன்று இந்த ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் பங்குபற்றியுள்ளது. திரு. யஜித் டி சில்வா, பிரதம தொழிற்பாட்டு அதிகாரி, POIA; பேராசிரியர் அசோக நுகவெல, Lalan Rubbers (Pvt) Ltd; திரு. பிரசன்ன பிரேமச்சந்திர, பிரதிப் பொது முகாமையாளர் - தொழிற்பாடுகள், Watawala Plantations PLC; வைத்தியர் ரேணுகா ஜெயதிஸ்ஸ, தலைவர், SAARCFOODS Association Sri Lanka; மற்றும் பேராசிரியர் தேவக வீரக்கோன், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியோர் பிரதான கலந்துரையாடல் மேசையில் இடம்பெற்றிருந்தனர். முன்னணி பெருந்தோட்ட நிறுவனங்கள் பலவற்றின் பிரதிநிதிகள், தொழிற்துறையுடன் தொடர்புபட்ட தரப்பினர், மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் சமூகமளித்திருந்தனர். 

குறிப்பாக, இறக்குமதியில் தங்கியிருப்பதைக் குறைப்பதில் அதன் பங்கு, அந்நியச் செலாவணியைப் பாதுகாத்தல், மற்றும் பொருத்தமான பெருந்தோட்ட நிலத்தின் உற்பத்தித்திறனை மேம்படுத்தல் ஆகியவற்றில் பாம் எண்ணெயின் பொருளாதார ரீதியான வகிபாகம் மீது இந்த அமர்வின் போது கவனம் செலுத்தப்பட்டது. உணவு உற்பத்தி, வீட்டு நுகர்வு, மற்றும் பல்வேறு தொழிற்துறை பயன்பாடுகளுக்கான முக்கியமான உள்ளீடாக பாம் எண்ணெய் தொடர்ந்தும் காணப்படுவதை பேச்சாளர்கள் குறிப்பிட்டதுடன், குறுகிய பெருந்தோட்டத்துறை பிரச்சினைக்கும் அப்பால், பரந்தளவில் பொருளாதார முக்கியத்துவத்திற்கு உள்ளூர் உற்பத்தி அவசியம் என்பதை விளக்கினர். 

சமையல் எண்ணெய் இறக்குமதிகள் அந்நியச் செலாவணி மீது தொடர்ந்தும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்ற ஒரு காலகட்டத்தில், உச்ச பலாபலனை ஈட்டித்தருகின்ற பயிர் மூலம் பயன்பெறும் நாட்டின் திறனை மட்டுப்படுத்தும் வகையில் பாம் எண்ணெய் பயிர்ச்செய்கை மீது இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அமைந்துள்ளதாக பேராசிரியர் அசோக நுகவெல அவர்கள் குறிப்பிட்டார். “2025 ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட 33,696 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெயுடன் ஒப்பிடுகையில், 38,210 மெட்ரிக் தொன் பாம் எண்ணெயை இலங்கை இறக்குமதி செய்துள்ளது. 2024 ல் பாம் எண்ணெய் இறக்குமதி 34,708 மெட்ரிக் தொன்னாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2025 ல் பாம் எண்ணெய் இறக்குமதிகளுக்காக மொத்தமாக ரூபா 140,022 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. முறையான பயிர்ச்செய்கை நடைமுறைகளுடன், ஹெக்டேயர் ஒன்றுக்கு நான்கு மெட்ரிக் தொன் பாம் எண்ணெயை அறுவடை செய்ய முடியும். உலகில் இதன் சந்தை விலை மெட்ரிக் தொன்னுக்கு சுமார் 1,100 அமெரிக்க டொலராகவுள்ள நிலையில், இலங்கை கொண்டுள்ள பொருளாதார வாய்ப்பு கணிசமானது,” என்று பேராசிரியர் நுகவெல குறிப்பிட்டார். 

புதிதாக பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும் என இனங்காணப்பட்ட சுமார் 8,000 ஹெக்டேயர் ஆனது, கட்டமைக்கப்பட்ட மற்றும் பொறுப்புமிக்க வழிகாட்டல்களின் கீழ் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், உள்நாட்டு சமையல் எண்ணெய் உற்பத்தி, பெருந்தோட்டத்துறை பல்வகைப்படுத்தல், கிராமிய வேலைவாய்ப்பு மற்றும் சாத்தியமான ஏற்றுமதி வருவாய் ஆகியவற்றுக்குப் பங்களித்திருக்கும் என கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டது. கவனமாகத் திட்டமிடப்பட்டு, ஒழுங்குமுறைக்கு உட்பட்ட அணுகுமுறை உள்ளூர் மதிப்புச் சங்கிலிகளை வலுப்படுத்தி, தவிர்க்கப்படக்கூடிய இறக்குமதிச் செலவினத்தைக் குறைத்து நாட்டின் பரந்த பொருளாதார மீட்சிக்கு உதவியிருக்கும் என இதில் பங்குபற்றியோர் குறிப்பிட்டனர். 

சுகாதாரம், ஊட்டச்சத்து, தண்ணீரின் பயன்பாடு, மற்றும் இயற்கைப் பல்லுயிரினம் அடங்கலாக, பாம் எண்ணெய் மீதான பொதுவான அபிப்பிராயங்கள் குறித்தும் இந்த அமர்வின் போது கலந்துரையாடப்பட்டது. பாம் எண்ணெய் கொண்டுள்ள ஊட்டச்சத்து உள்ளடக்கம் குறித்த ஆழமான விடயங்களை கலாநிதி ரேணுகா ஜெயதிஸ்ஸ அவர்கள் பகிர்ந்து கொண்டார். சூழலியல் சார்ந்த பரிசீலனைகள் மற்றும் பொறுப்புள்ள வழியில் நிலத்தைப் பயன்படுத்துவதைத் திட்டமிடுதல் தொடர்பான கலந்துரையாடலுக்கு பேராசிரியர் தேவக வீரக்கோன் அவர்கள் பங்களித்துள்ளார். 

இலங்கையின் பாம் எண்ணெய் தொழிற்துறையின் எதிர்காலம் தொடர்பாக, அறிவுபூர்வமான ஊடக விவாதங்கள், தப்பபிப்பிராயங்களைப் போக்குதல், இன்னும் கூடுதல் ஆக்கபூர்வம் கொண்ட தேசிய மட்டத்திலான உரையாடல்களுக்கு உதவுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடனேயே இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக POIA கூறியுள்ளது. அறிவியல், பொருளாதார யதார்த்தங்கள், சுற்றுச்சூழல் மீதான பொறுப்புணர்வு, மற்றும் நாட்டின் பரந்த அபிவிருத்தி நிகழ்ச்சிநிரல் ஆகியவற்றின் துணையுடன் கொள்கை வகுப்பு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை இச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

title