Header Logo

வணிகம்
Vietjet Air இனால் கொழும்பு - Ho Chi Minh City இடையிலான நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

May 11, 2026 - 11:06 AM -

0

Vietjet Air இனால் கொழும்பு - Ho Chi Minh City இடையிலான நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

வியட்நாமின் புதிய தலைமுறை ஹைப்ரிட் விமான சேவை நிறுவனமான Vietjet Air, கொழும்புக்கும் Ho Chi Minh நகரத்திற்கும் இடையிலான தனது முதலாவது நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது. இலங்கை – வியட்நாம் வர்த்தக, முதலீடு மற்றும் சுற்றுலா ஒத்துழைப்பு மாநாட்டில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. வியட்நாமின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதியுமான டோ லாம், இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இரு நாடுகளையும் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான முதலாவது நேரடி விமான சேவையான இது அமைந்திருப்பதுடன், விமான சேவையின் சர்வதேச விரிவாக்க செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், இரு நாடுகளுக்குமிடையிலான உறுதியான பொருளாதார, வர்த்தக, சுற்றுலா மற்றும் மக்களிடையிலான தொடர்புகளை மேம்படுத்த பங்களிப்புச் செய்வதாகவும் அமைந்திருக்கும். 

2026 ஆகஸ்ட் மாதம் முதல் கொழும்பு – Ho Chi Minh City இடையிலான விமான சேவை ஆரம்பமாகவுள்ளது. வாரமொன்றில் நான்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்படும். கொழும்பிலிருந்து பயணிப்போருக்கு விரைவில் சிக்கனமான கட்டணங்களையும், வியட்நாமின் முன்னணி சுற்றுலா மற்றும் வியாபார மையங்களுக்கு ஒப்பற்ற அணுகல் வசதிகளையும் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். அத்துடன், ஆசிய பசுபிக் பிராந்தியத்தினுள் அவுஸ்திரேலியா, ஜப்பான், தென்-கொரியா, சீனா மற்றும் அண்மித்த பிரதான பகுதிகளுக்கு Vietjet இன் பரந்த சர்வதேச விமான சேவை வலையமைப்பினூடாக சுலபமாக பயணம் செய்யக்கூடியதாகவும் இருக்கும். 

Vietjet இன் முதல் உப தவிசாளர் தின் விட் புவொங் கருத்துத் தெரிவிக்கையில்,: “Ho Chi Minh City – கொழும்பு விமான சேவை ஆரம்பத்தினூடாக, இரு நாடுகளுக்குமிடையே புதிய ஆகாயவழி தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனூடாக வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் கலாசார பரிமாற்றங்களை தெற்காசியா மற்றும் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் ஊக்குவிக்கக்கூடியதாக இருக்கும்.” என்றார். 

தென்கிழக்காசியாவின் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் உற்சாகம் நிறைந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழும் Ho Chi Minh City நகரம், பழமை மாறாக் கலாசாரத்தையும் நவீன நகர்ப்புற ஆற்றலையும் ஒருங்கே கொண்டுள்ளது. இங்கு வரும் சர்வதேசப் பயணிகள், பரபரப்பான சந்தைகள், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடக்கலை, கலகலப்பான இரவு வாழ்க்கை மற்றும் புகழ்பெற்ற தெருவோர உணவுகள் முதல் கலை மற்றும் Café கலாசாரம் வரை அனைத்தையும் அனுபவிக்க முடியும். புகழ்பெற்ற அடையாளச் சின்னங்கள், கலாசார அனுபவங்கள், ஆடம்பரக் கொள்வனவு வசதிகள் மற்றும் வியட்நாமின் பிரமிக்கத்தக்க கடற்கரைகளுக்கான இலகுவான போக்குவரத்து என Ho Chi Minh City, அந்த நாட்டைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஒரு சிறந்த நுழைவாயிலாகத் திகழ்கின்றது. வியட்நாமின் முன்னணி பொருளாதார மற்றும் சுற்றுலா மையமாக விளங்கும் இந்நகரம், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் இணைப்பு, வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு புதிய பாலமாகவும் உருவெடுத்து வருகின்றது. 

வியட்நாமின் முன்னணி புதிய தலைமுறை ஹைப்ரிட் விமான சேவை நிறுவனமான Vietjet, தனது இளம் மற்றும் நவீன விமானக் கட்டமைப்பு, விரிவடைந்து வரும் சர்வதேச விமான வலையமைப்பு மற்றும் புத்தாக்கமான வாடிக்கையாளர் மையச் சேவைகளின் ஊடாக, ஆசிய- பசுபிக் பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பாலுமான வான்வழி இணைப்பை வலுப்படுத்துவதில் தனது பங்களிப்பைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. இந்நிறுவனம் தற்போது 135 விமானங்களைக் கொண்ட கட்டமைப்பை இயக்கி வருவதுடன், சர்வதேச சந்தைகளில் தனது நீண்டகால வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் மேலதிகமாக சுமார் 600 விமானங்களுக்கான கொள்வனவு கட்டளைகளையும் வழங்கியுள்ளது. தனது புத்தாக்கம் மற்றும் செயல்பாட்டு வினைத்திறனுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள Vietjet, Skytrax, CAPA மற்றும் AirlineRatings உள்ளிட்ட முன்னணி சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து பல விருதுகளையும் வென்றுள்ளது. 

Vietjet பற்றி 

புதிய தலைமுறை விமான சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் விமானப் போக்குவரத்துத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய ரீதியாகவும் உலக அளவிலும் ஒரு முன்னோடி நிறுவனமாகத் திகழ்கின்றது. இந்நிறுவனம் தற்போது 135 விமானங்களை இயக்கி வருவதுடன், அகலமான (Wide-body) மற்றும் குறுகிய (Narrow-body) உடல் அமைப்பைக் கொண்ட மேலதிகமாக சுமார் 600 விமானங்களுக்கான கொள்வனவு கட்டளைகளையும் வழங்கியுள்ளது. செலவு முகாமைத்துவத் திறன், வினைத்திறனான செயல்பாடுகள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்துச் செயல்பாடுகளிலும் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி முன்னிலை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக செலவு குறைந்த, நெகிழ்வான கட்டணங்கள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கி வருகின்றது. 

சர்வதேச ஆகாய போக்குவரத்து சங்கத்தின் (IATA) முழுமையான உறுப்பினரான Vietjet, IATA இன் செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்றுள்ளது. வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமான சேவை நிறுவனமான இது, உலகின் ஒரே பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையதளமான airlineratings.com இனால் பாதுகாப்பிற்கான ஆகக்கூடுதலான 7 நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அத்துடன், பல வருடங்களாகத் தொடர்ச்சியாக Airfinance Journal இனால் ஆரோக்கியமான நிதியியல் மற்றும் செயற்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமான நிறுவனங்களில் ஒன்றாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களினால் மிகச்சிறந்த குறைந்த கட்டண விமான சேவை (Best Low-Cost Carrier) நிறுவனமாகவும் Vietjet பெயரிடப்பட்டுள்ளது. 

மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.vietjetair.com

Comments
0

MOST READ

காணொளி
100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

title